பேச்சு:போல்க்ஸ்வேகன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாட்டில் இந்நிறுவன அலுவலகத்தில் “ஃபோக்ஸ்வேகன்” என்று தமிழில் பெயர்ப் பலகை வைத்திருக்கிறார்கள். அதற்கு மாற்றி விடலாமா?--சோடாபாட்டில்உரையாடுக 14:35, 15 ஆகத்து 2011 (UTC) Y ஆயிற்று -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 12:14, 3 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

தலைப்பு[தொகு]

ஆங்கில W ஓசைக்கு நிகரான வரிவடிவம் தமிழில் காணப்படுவதில்லை. ஆங்கில V ஓசைக்கு நிகரான வரிவடிவம் தமிழின் வகரம் ஆகும். ஈண்டு குறிப்பிடப்படும் பெயரின் ஆங்கில மூலம் V எழுத்தில் தொடங்குகின்றதாதலின், அதன் தமிழ் வடிவம் வகரத்தில் தொடங்கியமைவதே முறை.--பாஹிம் (பேச்சு) 12:18, 3 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

இச்சொல் இடாய்ச்சு மொழிச்சொல். இதன் ஒலிப்பு: ஃபோல்க்ஸ்வாகன். வாகன் (Wagan) என்றால் வண்டி. ஆங்கிலத்தில் இதே எழுத்துக்கூட்டல் வேஅகன் என்று ஒலிப்பார்கள், ஆனால் இடாய்ச்சு மொழியில் வாகன் (ஆ ஒலிப்பு). இடாய்ச்சு மொழியில் v என்பதை ஆங்கிலத்தில் உள்ள f போன்று ஒலிக்க வேண்டும். volk என்றால் மக்கள் என்றும் நாடு என்று பொருள். எனவே மக்களின் வண்டி அல்லது தேசிய வண்டி என்று பொருள். நிறுவன அலுவலகத்தில் தவறாக எழுதியுள்ளார்கள், ஆனால் அதனை முன்னிலைப்படுத்த வேண்டும் எனில் செய்யலாம், ஆனால் தமிழில் எப்படி ஒரு சொல்லை எழுத வேண்டும் என்பதை வணிக நிறுவனங்கள் வலியுறுத்த முடியாது. வணிக நிறுவனங்களுக்கு உரிமை இருப்பது போல் மொழிகளுக்கும் இலக்கணம் சார் உரிமைகள் உண்டு. ஆனால் தமிழில் சொல்லாக அல்லாமல் வணிகக் காப்பு முத்திரையாகப் பயன்படுத்த வணிக நிறுவனங்களுக்கு உரிமை உண்டு. தமிழர் ஒருவர் Aழgappaன் Glasses என்று ஒரு கடையின் பெயரை வைத்திருந்தால், ஆங்கிலேயர்கள் அப்படியே எழுதுவார்களா என்று எண்ணிப்பாருங்கள். இக்கருத்தை நான் வைப்பதற்குக்காரணம் தமிழர்களில் பலர் K.A.நாராயணன் என்று உரோமன் எழுத்தைக் கலந்து தமிழில் எழுதுவது சரி என்பது போல ஒழுங்கில்லாமல் எழுதுகின்றார்கள். ஒரு வணிக நிறுவனத்தின் கடையின் பெயர் K.A.நாராயணன் என்றுதான் எழுதியிருக்கின்றார்கள், ஆகவே அப்படித்தான் எழுத வேண்டும் என்று கூறுவதில் சிக்கல்கள் உள்ளன. த.வி-யில் பலரும் Fa என்பதற்கு ஃப என முதலில் வரக்கூடாது என்று கருதுகின்றார்கள். இதே போல மொழி முதலாக ஃக = ha என்று வருவதையும் மொழி முதலாக ஃச = sa வருவதையும் விரும்புவதில்லை. மொழி முதலாக வராமல் இடையே ஃச, ஃக ஆகியவை தமிழ்ச்சொற்களிலேயே ஆளப்பட்டுள்ளன. திருக்குறளில் வெஃகாமை என்னும் அதிகாரமே உள்ளது. திருக்குறளில் கஃசு (=காற்பலம்) என்னும் சொல் ஆளப்பட்டுள்ளது. ஆனால் மொழி முதலாக இவை பயன்படுத்துவது காணப்படவில்லை. எனவே இவற்றையும் கருத்தில் கொள்ளுங்கள். சில இடங்களில் 'நெகிழ்ச்சி', 'உறழ்ச்சி' கொள்ளலாம் என்பதில் எனக்கும் உடன்பாடே ஆனால் இதில் சில நடைமுறை இடர்கள் உள்ளன. ஒரு விதியை ஓரிடத்தில் தளர்த்தலாம் எனில், எல்லா இடங்களிலும் அலல்து எல்லா விதிகளையும் தளர்த்தலாம் என்னும் சீர்குலைவுக்குப் பலரும் உந்துகின்றனர். நீளமான விளக்கத்தைப் பொறுக்க வேண்டுகின்றேன். இது பற்றிய கருத்துகளைக் கொள்கையாகக் கொள்ளாவிடினும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகளாகப் பரிந்துரையாக வைப்பது நல்லது.--செல்வா (பேச்சு) 17:18, 3 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
தமிழில் -ல்க்ஸ்- போன்ற மெய்யெழுத்துக்கூட்டங்கள் (இப்படி மிகவும் முரணாக மூன்று மெய்யெழுத்துகள்) தமிழில் வரலாகாது, உண்மையில் ஒலிக்கவும் இயலாது. இடையே உயிரொலிகள் கட்டாயம் வரும். ஃவோக்சுவாகன் என எழுதலாம்.--செல்வா (பேச்சு) 05:03, 5 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
  • இடாய்ச்சு மொழி ஒலிப்பு fɔlksˌvaːɡən, ஆங்கில ஒலிப்பு voʊks.wæɡ.ən. இது போல தமிழுக்கும் உகந்தவாறு எழுதலாம். ஃபோக்ஃசுவாகன், ஃபோக்சுவாகன் என்பதோ போக்சுவாகன் என்பதோ பொருந்தும். எதுவானாலும், மூன்று மெய்யெழுத்துகள் சேர்ந்துவருவது ஒருசிறிதும் சரியில்லை. --செல்வா (பேச்சு) 09:46, 5 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:போல்க்ஸ்வேகன்&oldid=1925250" இலிருந்து மீள்விக்கப்பட்டது