பேச்சு:பெருங்கொன்றை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெருங்கொன்றை உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

தலைப்பு மாற்றம் பரிந்துரை[தொகு]

இயல்வாகை மற்றும் பெருங்கொன்றை எனும் பெயர்களின் மூலம் தெரியவில்லை. இந்த இயல்வாகை என்பது misnomer. ஏனெனில் இந்த மரம் ஒரு அயல் மரம் (non native/exotic). இதற்கு இயல்வாகை என்பது பொருத்தமான பெயராக இருக்காது. தமிழ் லெக்சிகனில் இயல்வாகைக்கு இன்னொரு பெயராக பெருங்கொன்றையைத் தந்துள்ளனர். ஆனால் அதில் சரியான விவரங்கள் இல்லை. மேலும் அங்கே குறிப்பிடப்பட்டுள்ளதை கிழே தந்துள்ளேன் -

1) இயல்வாகை iyalvākai (p. S123) இயல்வாகை iyalvākai , n. A species of unarmed brasiletto; பெருங்கொன்றை. (L.)

இங்கே unarmed brasiletto என்பது copperpod மரத்தை குறிப்பது அல்ல. Brasiletto எனும் மரம் மெக்சிகோவை பூர்வீகமாகக் கொண்டது (காண்க Haematoxylum brasiletto. இந்த மரத்திற்கும் copperpodக்கும் உள்ள ஒரே ஒற்றுமை - அவை இரண்டும் ஒரே துணைக்குடும்பம் Caesalpinioideaeவைச் சேர்ந்தவை. தமிழ் லெக்சிகனில் ஏதோ ஒரு மரத்தின் பெயரை ஆராயாமல் இந்த மரத்திற்கு (copperpod) பெயராக சூட்டப்பட்டிருக்கிறது அல்லது புதிய பெயரை உருவாக்கி இந்த மரத்திற்கு சூட்டப் பட்டிருக்கிறது.

மேலும் பெருங்கொன்றை எனும் மரத்திற்கான விவரத்தை தமிழ் லெக்சிகனில் தேடிப்பார்க்கும் போது அங்கு கொடுக்கப்பட்டிருப்பதை கிழே தருகிறேன்:

1) பெருங்கொன்றை peruṅkoṉṟai (p. 2873) பெருங்கொன்றை peru-ṅ-koṉṟai , n. id. +. (L.) 1. A species of unarmed brasiletto, 1. tr., Peltophorum ferrugineum; கொன்றைவகை. 2. Creamy peacock flower; வாதநாராயணம்.

இங்கே Peltophorum ferrugineum என அதாவது copperpod மரத்தின் பழைய இலத்தீன்/அறிவியல் பெயர் தரப்பட்டுள்ளது. எனினும் unarmed brasiletto என்பது copperpod மரத்தைக் குறிக்காது என்பதையும் மேலே விளக்கியுள்ளேன். மேலும் 2. Creamy peacock flower; வாதநாராயணம். என்றும் குறிக்கப்பட்டுள்ளது. வாதனாராயணம் என்பது வாதமுடக்கி என்று அழைக்கப்படும் Delonix elata எனும் மரம். துறைசார் வல்லுனர்களை கலந்தாலோசிக்காமல், சரியான நூல்களை நோக்காமல் தமிழ் லெக்சிகனில் இந்த விவரங்கள் தரப்பட்டுள்ளது என்பது அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் விவரங்களை வைத்து அறியமுடிகிறது.

தமிழ் லெக்சிகனின் இந்த (தவறான) மூலத்தை வைத்து மேலும் பல கட்டுரைகள் இதே பெயரை (இயல்வாகை என) பயன்படுத்தியிருக்கலாம். அவற்றையெல்லாம் மேற்கோள் காட்டி copperpod மரத்திற்கு இயல்வாகை என்பது பெயரிடுவது சரியாகாது.

தாவரவியலாளரும், தாவரங்கள் குறித்து தமிழில் தொடர்ந்து எழுதிபவருமான முனைவர். கு. வி. கிருஷ்ணமூர்த்தி இந்து தமிழ் திசை நாளிதழில் வெளியான "இயற்கை நேசம்: வாகையை இழந்தோம்" எனும் கட்டுரையில் இதற்கான பெயர் "மஞ்சள் வாகை" என இருக்கலாம் என பரிதுரைக்கிறார்[1].

ஆகவே இந்த கட்டுரையின் தலைப்பை மஞ்சள் வாகை என மற்றும் படி பரிந்துரைக்கிறேன்.

References[தொகு]

PJeganathan (பேச்சு) 06:00, 16 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பெருங்கொன்றை&oldid=3495189" இலிருந்து மீள்விக்கப்பட்டது