பேச்சு:பூவரசு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆங்கில விக்கிப்பீடியா மரத்தின் உயிரியில் பெயர்களைப் பொதுப் பெயர்களுக்கு வழி மாற்றி விட்டிருக்கிறார்கள். நாமும் இது போல் உயிரினங்களுக்குச் செய்வோமா? தமிழ்ப் பெயர் தெரியாமல் தேடுபவர்களுக்கு உதவும்? இல்லை, இது அனைத்துப் பக்கங்கள் பக்கத்தில் தேவையில்லாமல் பல பக்கங்களைக் குவிக்கும் எனக் கருதப்படுகிறதா?--ரவி 15:41, 19 மே 2008 (UTC)[பதிலளி]

  • பூவரச மரம் பெரிய மரம். சிறுமர வகை அல்ல. அரச மரத்தளவு பெரியதாக இருக்கும் மரம்.அரசமரம் பூப்பதில்லை (நேர்ரடியாக காய்த்து விடுகின்றது). பூவரசம் மரம் மஞ்சள் நிறத்தில் பூக்களும் (மொட்டுநிலையில் இளஞ்சிவப்பு நிறமும்), பம்பரக்காய் போன்ற காய்களையும் கொண்டிருக்கும். இலைகள் அரச மரம் போலவே இருக்கும் ஆனால் நுனி நூலிழை அத்தனை நீளமாக இராது. இக்கட்டுரையின் வரிகள் சில திருத்தப்பட வேண்டும். பூவரசம் பட்டையும் மருத்துவ குணங்கள் கொண்டவை. அரச மரம் பூக்காததாலேயே, அரச மரம் போலும் வடிவில் இலை இருக்கும் இப்பெரிய மரத்தை பூவரச மரம் என்கிறார்கள் என்பது என் கணிப்பு.--செல்வா 20:23, 4 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பூவரசு&oldid=924773" இலிருந்து மீள்விக்கப்பட்டது