பேச்சு:புவி சூடாதல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புவி சூடாதல் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

தலைப்பு[தொகு]

புவி வெப்பநிலை அதிகரிப்பு என்பது சற்று நீண்ட தலைப்பாக உள்ளது. இது குறித்த கட்டுரைகளை எழுதும்போது சொல் சுருக்கமாக இருப்பது நலம். புவி வெப்பமாதல், புவி வெப்பயேற்றம் - அல்லது, வேறு எப்படி சொல்லலாம்?--ரவி 14:37, 2 ஏப்ரல் 2007 (UTC)

புவி வெப்பமாதல் சுருக்கமாக உள்ளது.--சிவகுமார் \பேச்சு 13:06, 13 பெப்ரவரி 2008 (UTC)

Global Warming - "புவி சூடாதல்"? Greenhouse Effect - "பைங்குடில் விளைவு"? --Jaekay 16:48, 21 பெப்ரவரி 2008 (UTC)

நான் எனது வலைப்பதில் புவி சூடாதல் பற்றி எழுதியதில் சில பத்திகளை அப்படியே கொடுத்துள்ளேன். ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கவும். --Jaekay 12:11, 22 பெப்ரவரி 2008 (UTC)

புவி சூடாதல், பைங்குடில் விளைவு என்பன நல்ல சொற்கள். Greenhouse Effect என்பதற்கு இலங்கையில் வேறொரு சொல் பயன்படுத்தப்படுகிறது. இப்பொழுது நினைவிலில்லை.--Kanags \பேச்சு 02:34, 24 பெப்ரவரி 2008 (UTC)
இலங்கையில் Greeahouse effect என்பதற்கு பச்சை இல்ல விளைவு என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.--சஞ்சீவி சிவகுமார் 23:11, 26 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

பயன்பாட்டில் இல்லாத இணைப்பை (* http://video.google.ca/videoplay?docid=-4520665474899458831&q=The+Great+Global+Warming+Swindle) நீக்கியிருக்கிறேன் --202.76.229.130 15:59, 22 பெப்ரவரி 2008 (UTC)

பைங்குடில் விளைவு[தொகு]

நல்ல தமிழ்ச்சொல் ஆனால், சரியானதா என்று கூறுவதற்கு இல்லை. நேரடி மொழி பெயர்ப்பாய் உள்ளது. green என்பதற்கு பைம் (பசுமை) என்பது சரிதான் ஆனால், உவமையாகக் கூறப்படும் இந்த விளைவின் முக்கிய அடிப்படை, கண்ணாடிக் கூரையும் கண்ணாடிச் சுவர்களும் கொண்ட கண்ணாடி வீட்டிற்குள் செடிகொடிகள் வளர்க்கும் பொழுது நிகழும் அறைச் சூடேற்றம் ஆகும். கண்ணாடி (ஒளி ஊடுருவி) வழி ஒளியும் ஒளியோடு சூடும் ஏறுவதும், ஆனால் உள்ளே புகுந்த ஒளிவழிச் சூடு போதிய அளவு வெளியேறாமல் அறை சூடேறுவது பற்றிய செய்தி. எனவே கண்ணாடிப் பைங்குடில் விளைவு என்றால் ஏற்கலாம் (சற்று நீளமாக இருந்தாலும்). அல்லது சுருக்கமாக கண்ணாடிக் குடில் விளைவு எனலாம் (செடிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நிகழ்வது). எனவே செடிகொடிகள் முக்கியம் இல்லை (பசுமை green முக்கியம் இல்லை), ஒளிவழி வெப்பம் (கண்ணாடிக்) குடிலுக்குள் புகுந்து சிக்கிக்கொள்வதைப் பற்றியது இவ் விளைவு. எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன்.--செல்வா 19:38, 4 மார்ச் 2008 (UTC)

செல்வா, நான்கூட இதைப்பற்றி சிந்தித்தேன். உள்ளபடி பார்க்கப் போனால், புவி சூடாவதன் காரணி நிகழ்வானது அகச்சிவப்புக் கதிர்களை சில வாயுக்கள உள்வாங்கிக்கொண்டு அதிர்வதனால் ஏற்படுவதாகும். அதற்கும் கண்ணாடிப் பைங்குடில்கள் கதகதப்பாக இருப்பதன் காரணி விளைவிற்கும் தொடர்பில்லை. ஆங்கிலத்தில்கூட ஒரு உவமையாகவே இப்பெயர்(Greenhouse Effect) உள்ளது(ஆவியை பார்க்க). அந்த அடிப்படையிலேயே "பைங்குடில் விளைவு" என்ற தொடரை தேர்ந்தேன். மிகத்துள்ளியமாக பெயரிடவேண்டுமெனில் "அகச்சிவப்புக் கதிர்கள் உள்வாங்கப்படும்" தன்மையை விளக்கும் சொல்லாக இருக்கவேண்டும். கண்ணாடிப் பைங்குடில் விளைவு என்ற சொல்லோ அல்லதுகண்ணாடிக் குடில் விளைவு என்ற சொல்லோ அப்படி ஒரு பொருள் தரவில்லை. இல்லையா?--Jaekay 10:00, 5 மார்ச் 2008 (UTC)
Jaekay, அதனால்தான் நானும் "உவமையாகக் கூறப்படும் இந்த விளைவை" என்று மேலே எழுதினேன். கண்ணாடிக்குடில் என்பது அந்த உவமையைச் சுட்டிக்காட்டக்கூடிய ஒன்று. ஆனால் நாம் தமிழில் வெப்பம் சிக்குறும் விளைவு என்றே குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன். பாருங்கள், நாம் தமிழில் இப்படி எண்ணிக் கருத்தாடுகிறோம். இதனால் பயன் கூடத்தானே?--செல்வா 16:16, 6 மார்ச் 2008 (UTC)


மிகப் பழமையான ஓர் உரையாடலில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. த.நா.பாடநூல் கழக நூல்களில் "பசுமை இல்ல விளைவு" என்று Green House Effect-ஐக் கொடுத்துள்ளனர். ஆனால் இதை விட "பைங்குடில் விளைவு" அருமையாக உள்ளது. திரு. செல்வா அவர்களே தமிழ் கலைச்சொல்லாக்கத்தின் போது சொல்லின் அகம் நுழைந்து பொருள் தேடாமல், பாமரராலும் பயன்படுத்தத்தக்கச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும். எனவே "பைங்குடில் விளைவு, பசுமை இல்ல விளைவு" போன்றவை ஏற்தகு சொற்களேயன்றிப் பிறிதில்லை. பேராசிரியர் மா. நன்னன் அவர்களும் இதையே வலியுறுத்துவார். அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 12:58, 26 நவம்பர் 2010 (UTC)
கண்ணாடிக்குடில் விளைவு பாமரரும் ஏற்கத்தக்கதாகத்தானே இருக்கிறது? ஆனாலும் பொருத்தம் பொருட்டு வேறு பெயரைத் தேடலாம். தவிர, செடிகளை வளர்க்கும் greenhouse-க்கு வேறு ஒரு நல்ல பெயரைச் சூட்டியிருந்ததைக் கண்டுள்ளேன். தூத்துக்குடியில் இசிப்பிக்கு நிறுவனத்தின் ஆய்வுக்கூடத்தில் பார்த்த அந்தச் சொற்றொடர் இப்போது நினைவுக்கு வரவில்லை. இயன்றால் அறிந்து சொல்கிறேன். -- சுந்தர் \பேச்சு 13:21, 26 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
தங்களது உரைக்கு நன்றி திரு. சுந்தர். பாமரர் ஏற்றால் மட்டும் போதாது, சொல்லின் நிலைப்புத்தன்மை (Stability) அதிகமாக இருக்க வேண்டும். 'பசுமை இல்ல விளைவு' பற்றிய உங்களது கருத்தை எதிர்பார்க்கிறேன். மேலும் எளிமையாக நினைவில் கொள்ளத் தக்கதாகவும் ஒரு சொல் இருக்க வேண்டும். இக்கட்டுரையின் தலைப்பை "புவி வெப்பமயமாதல்" என்று ஆக்கலாமா?

அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 14:41, 26 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

Warming என்பதற்கு சூடாதல் என்பதுதான் சரி என்பது என்று நினைக்கிறேன். வெப்பமயமாதல் என்பது பொருத்தமாக இல்லை. "மயம்" என்பது எங்கும் நிறைந்திருப்பது என்னும் பொருளில்தான் பொதுவாகப் பயன்படும் ஒரு சொல் (சோகம் நிறைந்திருப்பதை சோகமயம் என்பர்). ஆனால், ஆங்கிலத்தில் -ization என்னும் பகுதிவரும் இடங்களில் "மயம்" என்பதைப் பயன்படுத்தி வருகிறோம் (eg: Globalization - உலகமயமாதல்). இதுவுமே சரியா தெரியவில்லை. ஆனாலும் புழக்கத்தில் இருக்கிறது. warming என்பதற்கு வெப்பமயமாதல் வேண்டாமே. --மயூரநாதன் 15:24, 26 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]


உங்கள் கருத்தை ஒப்புகிறேன்.

அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 06:18, 28 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

நன்றி, சூர்ய பிரகாசு. ---மயூரநாதன் 17:34, 28 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்[தொகு]

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:57, 14 மே 2007 (UTC)[பதிலளி]

படத்தில் பயன்படுத்தக்கூடிய சொற்கள்[தொகு]

Anomaly என்பதற்கு முறை பிறழ்வு. முறை பிறழ்வாக எனப் பயன்படுத்தலாம். அதே போல முறை வழு, முறைவழுவாக. முறை பிசகு, பிசகாக. வெப்பநிலை முரண் என்றும் சொல்லலாம். எனவே வெப்பநிலைப் பிறழ்வு [முறைவழு|பிசகு|முரண்] என்று சொல்லலாம் என நினைக்கிறேன்.--செல்வா 15:39, 10 ஏப்ரல் 2008 (UTC)

Anomalyஐ நெறிபிறழ்வு என கூறலாமா ? (ஒரு குறிப்பிட்ட நெறியில் இருந்து மாறுபடுவதால்) வினோத்ラージャン 15:56, 10 ஏப்ரல் 2008 (UTC)

ஆம் நெறிபிறழ்வு என்பதும் அருமையான சொல். --செல்வா 16:01, 10 ஏப்ரல் 2008 (UTC)

வினோத்தின் பதிவைப்பார்க்கும் முன்னரே 'வெப்பநிலைப் பிறழ்வு' என்று மாற்றிவிட்டேன். 'வெப்பநிலை நெறிப்பிறழ்வு' என்று மாற்றவா? நெறிப்பிறழ்வு என்பது 'போக்கில் பிறழ்வு' என்பது போல் உள்ளதா இல்லை இந்த இடத்தில் பொருத்தமா? -- சுந்தர் \பேச்சு 16:14, 10 ஏப்ரல் 2008 (UTC)
ஆம் சுந்தர், வெப்பநிலை நெறிப்பிறழ்வு அல்லது வெப்பநிலை சீர்பிறழ்வு எனலாம். வெறும் பிறழ்வு என்று இருந்தாலே போதும் என்று வினோத்தும் நீங்களும் நினைத்தால், அப்படியே விட்டுவிடுங்கள். வெப்பநிலை பிறழ்ச்சி என்றால் இன்னும் நன்றாக இருக்குமா? நெறிபிறழ்வு, நெறிபிறழ்ச்சி என்னும் சொல்லாட்சி எனக்குப் பிடித்து உள்ளது. --செல்வா 16:26, 10 ஏப்ரல் 2008 (UTC)
வெப்பநிலை நெறிப்பிறழ்ச்சி என மாற்றிவிடுகிறேன். பிறழ்வு என்பது கணிக்கவல்லாதது (abstract) போல் தோன்றுகிறது. பிறழ்ச்சி ஒரு கணிக்கத்தக்க விளைவு போல் தோன்றுகிறது. இப்பொருள் நுணுக்கம் தமிழில் உள்ளதா அல்லது வெறுமனே மயக்கமா எனத் தெரியவில்லை? (த.வி. உரையாடல்களில் நற்றமிழில் பொருள் துல்லியத்துடன் சொல்லாக்க (கிளவியாக்கத்) துவங்கியதில் இருந்து என் எண்ணங்கள் கூடுதல் தெளிவு பெறுவதாக உணர்கிறேன். ஒரு மிகப்பெறிய சமூகத்திற்கு (தாய்மொழி அறிவைச் சரிவர தராமல்) இந்தச்சிந்தைத் தெளிவை மறுத்து வருகிறோம் எனத் தெரியவில்லை.) -- சுந்தர் \பேச்சு 08:28, 11 ஏப்ரல் 2008 (UTC)

கரியமிலம்[தொகு]

கரியமிலம் என்பதைக் கார்பன்-டை-ஆக்ஸைடு என்று மாற்றியுள்ளேன். ஏனெனில், அது அமிலம் அல்ல. கரியமில வாயு என்று சொல்லுதல் வேண்டும். அதைவிட கார்பன்-டை-ஆக்ஸைடு என்றே சொல்வது நல்லது என்று நினைப்பதால் மாற்றியுள்ளேன். கரிம-ஈருயிர்வளி என்றும் சொல்லலாம். மறுப்பு ஏதும் இருந்தால் தயங்காமல் கூறுங்கள். அதாவது வேதியியல் பொருட்களுக்கு ஆக்ஸிஜன் (ஆக்சிஜன், ஆக்சிசன்) , கார்பன்-டை-ஆக்ஸைடு, நைட்ரஜன் (நைட்ரசன்), ஹைட்ரஜன் (ஹைடிரஜன், ஐதரசன்) போன்று கூறுவதே நல்லதாக இருக்கும் என்று இப்படி. இது பற்றி பலமுறை முன்னர் உரையாடி இருக்கின்றோம். உயிர்வளி, நீரியம் (நீரதை) என்றாலும் கூடவே குறித்து வரலாம்.--செல்வா 16:01, 10 ஏப்ரல் 2008 (UTC)

CO2 வை கரியமில வாயு என்று எழுதவேண்டியதை எழுத்துவாக்கில் கரியமிலம் என்று எழுதிவிட்டேன். தவறைத் திருத்தியதற்கு நன்றி.--Jaekay 17:09, 10 ஏப்ரல் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:புவி_சூடாதல்&oldid=3921768" இலிருந்து மீள்விக்கப்பட்டது