பேச்சு:புற்றுநோய்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புற்றுநோய் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
மருத்துவம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் மருத்துவம் என்னும் திட்டத்துள் புற்றுநோய் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இணைப்பு முன்மொழிவு[தொகு]

புற்றுநோய் என்னும் தலைப்பில் இக்கட்டுரை இருக்க புற்று நோய் என்னும் தலைப்பில் இன்னொரு கட்டுரை அண்மையில் எழுதப்பட்டுள்ளது. புற்று நோய் கட்டுரையை இக் கட்டுரையுடன் இணைக்க முன்மொழிகிறேன். பயனர்கள் இதுகுறித்துக் கலந்துரையாடவும். மயூரநாதன் 12:17, 16 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

மிகப்பெரிய கட்டுரையாக உள்ளது. இதனை தனிதனி கட்டுரைகளாக மாற்றம் செய்தால் எளிதாக விக்கிப்படுதலாம்.


- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

புற்றுநோய் தொடர்புடைய தமிழ்ச்சொற்கள்[தொகு]

(பேச்சு:குருதிப் புற்றுநோய் பக்கத்தில் இருந்து) சில சொற்கள் தமிழாக்கம் கலந்துரையாட வேண்டியுள்ளது.

  • Cancer = Malignancy - புற்றுநோய்?
  • Blood cancer = Leukemia - இரத்தப் புற்றுநோய்?
  • Neoplasm - மிகைப்பெருக்க இழையம்?
  • Neoplasia - இழைய மிகைப்பெருக்கம்
  • Hematological Neoplasm - இரத்தவியல்/குருதியியல் மிகைப்பெருக்க இழையம்
  • Hematological malignancy - இரத்தவியல்/குருதியியல் புற்றுநோய் வகைகள்
--கலை 12:52, 15 ஏப்ரல் 2011 (UTC)

இவற்றுடன் tumour, benign போன்ற சொற்களும் ஆராயப்படவேண்டியது. --சி. செந்தி 14:04, 15 ஏப்ரல் 2011 (UTC)

உங்களிடம் கேள்வியாகத்தான் இச்சொற்களைக் கேட்டிருக்கிறேன். நீங்கள் சரியான சொற்களைப் பரிந்துரையுங்கள். பரிந்துரைகளைக் கேட்ட பின்னர்தான் கட்டுரைகளில் மாற்றம் செய்ய வேண்டும்.
  • Tumour - கட்டி
  • Benign - கடுமையற்ற/நோயற்ற கட்டி?

--கலை 14:29, 15 ஏப்ரல் 2011 (UTC)

Neoplasm என்பதைப் புது இழையம் எனலாம் அல்லவா? நோய்க்கட்டியில் புதிதாகத் தோன்றும் இழையம்? ஏன் மிகைப்பெருக்க என்று இருக்க வேண்டும்? மிகையிழையம் என்று சுருக்கமாகக் கூறலாமே. benign என்பதை நோயிலாக் கட்டி அல்லது நோயூட்டாக் கட்டி என்றும் சொல்லலாம். --செல்வா 19:34, 17 ஏப்ரல் 2011 (UTC)

நன்றி செல்வா,
  • Cancer = - புற்றுநோய்
  • Blood cancer = Leukemia - இரத்தப் புற்றுநோய்

-plasia = உருவாக்கம்

  • Neoplasm - மிகைப்பெருக்க இழையம் "புதிய அசாதரணமான உயிரணு"
  • Neoplasia - இழைய மிகைப்பெருக்கம்

இதில் இருந்து எனது பரிந்துரை: புத்தணு / புத்திழையம் ; புத்திழையப் பெருக்கம்

  • Hyperplasia - இழைய மிகைப்பெருக்கம்
  • metaplasia -

அப்படியானால் malignant என்பதை எவ்வாறு அழைப்பது? Benign tumour - நோயிலாக் கட்டி malignant tumour - கொடுங்கட்டி? Malignancy / malignant - (கொடிய/ கடுமையான) ---சி. செந்தி 19:57, 17 ஏப்ரல் 2011 (UTC)

செந்தி, சில சொற்களை[ பயன்படுத்திப் பார்த்தால்தான் அது வழக்கில் சரியான பொருள் சுட்டுமா என்று அறிய முடியும். Malignancy / malignant என்பது இங்கே நோயூட்டு, நோய்க்கருவான, நோய்ச்சாய்வு என்னும் கருத்து வரவேண்டும். ஆங்கிலத்தில் மாலிக்'னன்ட் என்றால் கெட்ட, கெடுதிதரும் என்றுதான் பொருள், ஆனால் நோயூட்டுங்கெடுதி என்று பொருள்தருகின்றது. மாலிக்'னசி என்பதை கேடுதருமை எனலாம். மாலிக்'னன்ட் என்பதைக் கேடுதரு என்று பெயர்க்கலாம். கேடு என்பது நோயூட்டுமை, நோயூட்டுக் கேடு. உங்கள் கீழ்க்காணும் பரிந்துரைகள் நன்றாக உள்ளன செந்தி.
  • Neoplasia - புத்தணு / புத்திழையம் ; புத்திழையப் பெருக்கம்
  • Hyperplasia - இழைய மிகைப்பெருக்கம்


Hyper என்பதால் மிகை என்பது தேவை.

--செல்வா 01:29, 18 ஏப்ரல் 2011 (UTC)

முடிவான சொற்களாக பின் வருவனவற்றைக் கொள்ளலாமா?

  • Cancer - புற்றுநோய்
  • Malignant - நோயூட்டுங்கேடுதரு, Malignant tumour - நோயூட்டுங்கேடுதரு கட்டி
  • Benign - நோயில்லா, Benign tumour - நோயில்லாக் கட்டி
  • Blood cancer = Leukemia - குருதிப் புற்றுநோய்
  • Neoplasm - புத்திழையம்
  • Neoplasia - இழைய மிகைப்பெருக்கம்
  • Metaplasia - ??
  • Hematological Neoplasm - குருதியியல் புத்திழையம்
  • Hematological malignancy - குருதியியல் புற்றுநோய்கள்

--கலை 13:48, 18 ஏப்ரல் 2011 (UTC)


சில திருத்தங்கள் செய்துள்ளேன், மேலும் சில சேர்த்துள்ளேன்..

  • Cancer - புற்றுநோய்
  • Malignant - கேடுதரு, Malignant tumour -கேடுதரு கட்டி
  • Benign - நோயி(ல்)லா, Benign tumour - நோயி(ல்)லாக் கட்டி
  • Blood cancer = Leukemia - குருதிப் புற்றுநோய்
  • Neoplasm - புத்திழையம்
  • Neoplasia - புத்திழையப் பெருக்கம்
புத்திழையப் பெருக்கம் மூலம் புத்திழையம் உருவாகுகின்றது.
  • Hyperplasia - இழைய மிகைப்பெருக்கம்
  • Metaplasia - உயிரணுத் திரிபு
  • Cell differentiation - உயிரணுத் திரிபு / சிறப்பணுத் திரிபு
  • Anaplasia - உயிரணுத் திரிபு மீள்வு / உயிரணு முன்னிலை மீள்வு (திரிபடைந்த சாதரண உயிரணுக்கள் மீண்டும் பின்னோக்கிப் பழைய நிலை அடைதல், புத்திழையப் பெருக்கத்தில் அவதானிக்கலாம்.)
  • Dysplasia - இயல்புப்பிறழ்ந்த வளர்ச்சி
  • desmoplasia - தொடுப்பிழையப் பெருக்கம்
  • Hematological Neoplasm - குருதியியல் புத்திழையம்
  • Hematological malignancy - குருதியியல் புற்றுநோய்கள்

---சி. செந்தி 16:40, 18 ஏப்ரல் 2011 (UTC) நன்றி செந்தி. --கலை 22:10, 18 ஏப்ரல் 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:புற்றுநோய்&oldid=1037535" இலிருந்து மீள்விக்கப்பட்டது