பேச்சு:பிலிப்பீன் முதலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிலிப்பீன் முதலை உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
  • பாஃகிம், நீங்கள் இக்கட்டுரையையும் பிற முதலைக் கட்டுரைகளையும் மிகச் சிறப்பாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள்!!--செல்வா 22:07, 16 ஏப்ரல் 2011 (UTC)
  • நன்றி செல்வா. உண்மையில் நான் தனித் தமிழ் பக்கம் சாய்வதற்கு நீங்கள் தான் முக்கிய காரணம். உங்களுடன் முதற் தடவைகளில் நடந்த கருத்தாடல்களின் போது தனித் தமிழ் நடைதான் எமக்கு நல்லதென முழுமையாக ஏற்றுக் கொண்டேன். அதற்கு முன்னர் தனித் தமிழ் இயக்கம், மறைமலை அடிகள் என்றெல்லாம் படித்திருந்த போதிலும், அது பற்றிக் கவலையுறாமல் இருந்து விட்டேன். எனினும், இந்தியாவில் மக்கள் அளவுக்கு மிஞ்சிய வகையில் வடமொழி கலந்து எழுதுவதைப் பார்த்து என்னுள்ளம் நொந்து கொண்டுதான் இருந்தது. ஒரே ஆவணத்தை அல்லது கட்டுரையை இந்தியர் மொழிபெயர்ப்பதும் இலங்கையர் மொழிபெயர்ப்பதும் பெரிய வேறுபாடுகள் கொண்டு காணப்படுவது எனக்குக் கவலையைத் தந்தது. நான் தொழின்முறை மொழிபெயர்ப்பாளனாக இருப்பதால் அதனைப் பற்றி நன்கறிவேன். என் இளமைக் காலத்தில் மலையாளம், தெலுங்கு, சமசுகிருதம், பாளி, தாய், எபிரேயம் என்றெல்லாம் சில மொழிகளைக் கற்பதும் விடுவதுமாக இருந்தது இப்போது எனக்குக் கை கொடுக்கிறது. தமிழ் போலவே சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் எனக்குப் புலமையுண்டு. அவ்வாறே அரபு, இந்தி/உருது, இந்தோனேசியம், மலாய் போன்ற மொழிகளைிலும் சிறிது புலமை உண்டு. என் தங்கையும் மைத்துனனும் நன்கு மலையாளம் அறிந்தவர்கள். என் தம்பி ஆறு ஆண்டுகள் சீனாவின் பெய்ஃகாங் பல்கலைக்கழகத்தில் சீன மொழி மூலம் வானூர்தி வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொடர்பான பொறியியல் கற்றதால் அம்மொழியும் எங்கள் குடும்பத்தில் அடக்கம். இவையெல்லாம் சேர்ந்து நாம் தமிழில் பயன்படுத்தும் ஒரு சொல்லின் மூலம் எங்கிருந்து வந்ததென ஆராய்வதற்கு உதவுகின்றன. எனவே, வேற்று மொழிகளை என்னால் முடிந்தளவு தவிர்த்து எழுதி வருகிறேன். எனக்கு எங்கேனும் சரியான தமிழ்ச் சொல் கிடைக்காவிடின், நானறிந்த சொல்லைப் பயன்படுத்துகிறேன். அவ்வாறானவற்றைப் பின்னர் தவிர்த்துக்கொள்ளலாமென நினைக்கிறேன். மேலும், நான் உயிரியல் தொடர்பான கட்டுரைகளை ஆக்கி வருவதால், தமிழ்ப் பெயரீடு போன்ற வேறு சில கடின நிலைமைகள் ஏற்படுகின்றன. அதனைப் பற்றி உங்களுடனும் ஏனைய விக்கிப்பீடியருடனும் பின்னர் கலந்துரையாட வேண்டுமென விழைகிறேன்.--பாஹிம் 01:25, 17 ஏப்ரல் 2011 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பிலிப்பீன்_முதலை&oldid=744432" இலிருந்து மீள்விக்கப்பட்டது