பேச்சு:பாப்புலர் மெக்கானிக்ஃசு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதனை பாப்புலர் மெக்கானிக்ஃசு எனலாம். ஆங்கிலத்தில் Popular என்பதை பாப்யுலர் என்பது போல ஒலித்தாலும் பாப்புலர் என்பதே தமிழில் குறிக்கும் வழக்கு. coffee என்பதைத் தமிழில் காப்பி என்பது போல. மெக்கான்னிக்சு என்பது போதும்தான், ஆனால் மெக்கானிக்ஃசு என்றால் யாரும் அவ்வளவாக பழிக்கமுடியாத ஒலிப்பு. தமிழில் கஃசு (Kahsu) என்றால் காற்பலம். திருக்குறளில் கூட ஆளப்பட்டுள்ளது.

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.

கடைசி சு குற்றியலுகரம் ஆகையால் ஒலிப்பு மிக நெருங்கி வரும்.--செல்வா 18:03, 16 மே 2009 (UTC)[பதிலளி]

இங்கு ஃ என்பது இங்கு தேவையற்றது. மெக்கானிக்சு என்றெழுதினாலே போதுமானது. இதனை எவரும் மெக்கானிக்ச்சு எனப் படிக்க மாட்டார்கள். அவ்வாறே எழுதி வந்துள்ளோம். எனவே பாப்புலர் மெக்கானிக்சு என மாற்றப் பரிந்துரைக்கிறேன். பாப்யுலர் என்பதை தமிழில் குறிக்கும் வழக்காக பாப்புலரைப் பரிந்துரைக்கும் நீங்கள் எப்படி மெக்கானிக்சு எனப் பொதுவாக வழங்கும் ஒன்றை மாற்றப் பரிந்துரைக்கிறீர்கள்?--Kanags \பேச்சு 23:52, 16 மே 2009 (UTC)[பதிலளி]
கிரந்தம் கலந்து மெக்கானிக்ஸ் என்று எழுத விரும்புவோரின் முன்வைப்பு என்னவென்றால் அது ஒலிப்பு நெருக்கம் தருகின்றது என்பதுதான். கிரந்தம் தவிர்த்து எழுதும் பொழுது மெக்கானிக்சு (mechaanikchu) என்று எழுதுகிறோம். இதில் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. எல்லா மொழிகளிலும் இப்படியான ஒலித்திரிபுகள் மொழிக்கு மொழி மாறும்பொழுது நேர்வது தவிர்க்கமுடியாததும் கண்கூடும் ஆகும். ஆனால் மெக்கானிக்ஃசு என்று எழுதினால் (mechaaniksu) என்னும் ஒலிப்பு இயல்பாய் வரும் என்பதைக் குறிப்பிட்டேன். மெக்கானிக்ஸ் என்பதற்கு மிக மிக நெருக்கமான ஒலிப்பு மெக்கானிக்ஃசு என்பது. மெக்கானிக்சு என்றே இருக்கவேண்டும் என்று பலரும் கருதினால் எனக்கும் முழு உடன்பாடே. கருத்தை முன்வைத்தேன். கனகு, கூடியமட்டிலும் பழிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதே உந்துதல். ஆனால் இயலாதவற்றைத் திரிபுடன் எழுதுவதால் தவறில்லை என்பது என் கருத்து.--செல்வா 02:11, 17 மே 2009 (UTC)[பதிலளி]
நானும் கனகின் கருத்துடன் ஒத்துப் போகிறேன். கூடிய வரை எளிதாக இருந்தால் சொற்கள் எளிதில் வேரூன்றும் என்று நினைக்கிறேன். ஆப்பிரிக்கா என்பது ஒலிப்புக்கு நெருக்கமாக இல்லாவிடினும் எளிமை காரணமாகவே நிலைத்திருக்கலாம். --சிவக்குமார் \பேச்சு 06:05, 17 மே 2009 (UTC)[பதிலளி]

செல்வா, நீங்கள் சொல்வது இலக்கண ஒலிப்புப் படி சரி. ஆனால், தமிழ்நாட்டில் க்சு என்பதை kchu என்று ஒலிப்பது முற்றிலும் அற்றுவிட்டது. kchu என்று ஒலிக்கப்படும் எந்த சொல்லும் சட்டென நினைவுக்கு வரவில்லை. எனவே, kchu, ksu வேறுபாட்டைப் புலப்படுத்த ஃ பயன்படுத்த தேவையில்லை.--ரவி 08:36, 17 மே 2009 (UTC)[பதிலளி]

கனகு, சிவா, ரவி, நான் என் கருத்தைச் சொல்லிவிட்டேன். மெக்கானிக்சு என்று இருப்பதில் எனக்கும் உடன்பாடே. அடுத்து நான் கூறவிருப்பதும், கருத்துக்கு மட்டுமே. ஃப என்பது போன்ற தவறான ஆய்த எழுத்துப் பயன்பாடு வழக்கூன்றிவிட்டது. ஆனால் சரியான தமிழ் ஒலிப்புகள் ஃக = ha, ஃச =hsa என்பன வழக்கூன்றவில்லை. ஆய்த எழுத்தின் நற்பயன்பாடுகள் இவை. அஃது, எஃகு, பஃறுளி ஆறு போன்ற மிகச்சில சொற்களில் வருவதைத்தான் மக்கள் அறிந்திருக்கிறார்கள்; இன்னும் பல சொற்களிருந்தபொழுதும். அறிந்தவற்றைக் கொண்டு மேலும் பயன்பாட்டைப் பெருக்கலாம். பயன்பெறலாம். சில கருத்துகளை விரிவுபடுத்துதல் தேவைப்படலாம். ஃக, ஃச நல்ல பயன்பாடுகள். ஸ்ரீ என்பதனையோ க்ஷ என்பதனையோ ஹ என்பதனையோ பார்த்து பார்த்துதான் பழகுகிறார்கள் (பழக்கம் இல்லாதவர்களும் பழகிக்கொள்கிறார்கள்). அதே போல ஃக, ஃச என்பதனையும் பார்த்துப் பழகினால் சரியாகும். வேற்று மொழிச் சொற்களைத் தமிழில் எழுதுவதில் சற்று கூடுதலான இடர் தருவது ஸ் என்னும் ஒலியே. அதுவும், மெய்யொலிக்கூட்டத்துடன் வரும்பொழுது. அவற்றுள் சில இடங்களாவது இந்த சரியான பயன்பாட்டால் சரியாகலாம் என்னும் கருத்தில் குறித்தேன். ஏற்பதும் ஏற்காததும், விக்கிப் பயனர்களின் விருப்பம். நான் பேச்சுப் பக்கங்களில் மாக்ஃசுமுல்லர், ஆக்ஃசுபோர்டு என்று எழுதிப் பார்க்கலாம் என இருக்கின்றேன். யாரும் தவறாக நினைக்க வேண்டாம். --செல்வா 13:12, 17 மே 2009 (UTC)[பதிலளி]