பேச்சு:பரிவர்த்தனை (சந்தை)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பங்கு பரிவர்த்தனை நிலையம் ஏற்கெனவே தமிழ் ஊடகங்களிலும் புழக்கத்திலும் பங்குச் சந்தை என அறியப்படுவதால் அதனையே பயன்படுத்துவது நலம். அதேபொல் பண்டச் சந்தை, அந்தியச் செலாவணிச் சந்தை என்று ஒரேபோல பெயரிடுவதும் நன்று. --மணியன் 04:47, 26 சனவரி 2012 (UTC)[பதிலளி]

சில ஊடகங்கள் ஏன் இப்படி பயன்படுத்துகிறார்கள் என்று எனக்கும் குழப்பமாக இருக்கிறது. Exchange(பரிவர்த்தனை) என்பதும் Market(சந்தை) என்பதும் அடிப்படையில் வெவ்வேறானவை. --நீச்சல்காரன் 04:56, 26 சனவரி 2012 (UTC)[பதிலளி]
சந்தை என்பது context based ”ஒரு சொல் பல பொருள்” சொல்லாக உள்ளது. exchange என்பதையும் “சந்தை” என்ற சொல்லால் குறிக்கலாம். Market இல் ஒழுங்கு படுத்தப்பட்டது தானே Exchange. ஊடகங்களில் ”பங்குச் சந்தை” என்பதை stock market / stock exchange இரண்டுக்கும் பயன்படுத்துவதால், அதனையும் இக்கட்டுரையில் குறிப்பட வேண்டும் எனக் கருதுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 06:05, 26 சனவரி 2012 (UTC)[பதிலளி]