பேச்சு:பரஸ்பர நிதி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாராட்டுகள் + சில கருத்துகள்[தொகு]

முதலில் இந்த மிக நெடிய கட்டுரையை எழுதிய உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி, பாராட்டுகள்! சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். mutual fund என்பதை பரஸ்பர நிதி என்று மொழி பெயர்ப்பது சரியானதாகத் தெரியவில்லை. mutual என்பதன் நேரடியான மொழிபெயர்ப்பாக உள்ளது. mutual fund என்பது ஒரு குறிக்கோளுடன் பல வகையான பொதுநிறுவனப் பங்குகளையும், பல்வகை அரசு, நிறுவன பிணைகளையும் (bond) வாங்கி விற்றுப் பராமரிக்கும் ஒரு முதலீட்டுத் தொகுதி. இந்த முதலீட்டுத் தொகுதியான நிதிக்குவியலின் சில கூறுகளை (நிதி அலகுகளை) பலர் வாங்கி பணம் ஈட்டுவதோ இழப்பதோ நடைமுறை. இதனைத் தொகுபங்கு நிதி (முதலீடு) எனலாம். இதுபோல இன்னும் பல மாற்று மொழிபெயர்ப்புகள் தரலாம். பொருட்படுத்த மாட்டீர்கள் என நினைக்கிறேன்.--செல்வா 04:05, 19 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பரஸ்பர_நிதி&oldid=429321" இலிருந்து மீள்விக்கப்பட்டது