பேச்சு:பபேசியே

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

- பெயர்சொல் மாற்றத்தால், பெரிய விளைவுகள் ஏற்படப்போவதில்லை[தொகு]

இதுபோன்ற (மகரந்ததூள் --> பூத்தூள்) மாற்றங்களைப் பார்க்கும் போது, எனது கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். இச்சொற்களைக் கொண்டு, பெரும்பாலும் யாரும் தமிழகத்தில் கற்கவில்லை. மலர் மருத்துவம் என்ற முறை, இயற்கை மருத்துவத்தில் ஒருபகுதியாக விளங்குகிறது. அதனை ஓரளவு பின்பற்றும் எனக்கு, இச்சொற்கள் சிரிப்பைத்தான் தருகிறது, . இச்சொற்கள் மிகவும் என் தந்தையின் வயதை ஒத்த செல்வாவின் மனதில் வடுவை உருவாக்கி விட்டதால், அவரிடம் என்னை மன்னிக்கும்படி கேட்டு, அச்சொற்களை நீக்குகிறேன். இனி உரையாடல் பக்கத்தில் பிறரின் மனஅமைதியை பேணும் படி உரையாடுவேன் என்ற உறுதியுரையை கூறி, அவரின் இலக்குகளில் துணைபுரிந்து, அவரின் மனதை வருடுவேன். ஒரு மாணவன் என்ற முறையில் எனது பிழைகளை அவர் மன்னித்து வழமை போல, நல்வழி காட்ட வேண்டுகிறேன். வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 14:38, 27 அக்டோபர் 2013 (UTC) [பதிலளி]

தகவல் உழவன், அடடா! மன்னிப்பு எல்லாம் ஏதும் கேட்க வேண்டாமே! என் மனதில் ஏதும் 'வடு' ஏற்படுத்தவில்லை, ஆனால் அந்த நேரத்தில் வருத்தம் உண்டானதும், ஏன் இப்படி என்றும் வியந்து உண்மையே. நீங்கள் நன்முறையில் எடுத்துக்கொண்டமைக்கு நன்றி. ஒரு பங்களிப்பாளரின் அகவையும் கல்வியும் பதவியும் இங்கு பொருட்டில்லை. அனைவரும் ஒத்த உரிமை உடைய பங்களிப்பளர்களே. கட்டாயம் கருத்து மாறுபடும் இடங்களில் தயங்காது மாறுபடுங்கள், நானும் மாறுபடுவேன். கருத்துமாறுபாடு நம்மை வளர்க்கும், ஆனால் வளர்முகமான முறையில், பண்பான அணுகுமுறையுடன், கருத்தடிப்படையில் நடக்கும் உரையாடல் நல்லது. கட்டாயம் எனக்குத் தெரிந்ததைப் பகிர்கின்றேன். அதே போல நானும் உங்களிடமிருந்தும் பிறரிடம் இருந்தும் இனிதே கற்றுக்கொள்வேன். நான் அடிக்கடி கூறுவது போல் நானும் மாணவனே! --செல்வா (பேச்சு) 14:59, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
தங்களின் மென்மையான, மேன்மையான உரைகளால் என்னை மேம்படுத்தியமைக்கு மிக்க நன்றி. --≈ உழவன் ( கூறுக ) 02:16, 28 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கிரந்த நீக்கல், தமிழ் சொற்களை மட்டுமே கையாள வேண்டும் என்ற ஆவல் எனக்கும் உண்டு. புதுவெள்ளத்தில் வரும் குப்பைக்கூளங்கள் போல, இவைகள் வளரும் நமது அறிவியல் சூழ்நிலைகளில் வரத்தான் செய்யும். யாருக்காக எழுதுகிறோம் என்ற எண்ணத்துடன் செயல்படுவது மிகவும் முக்கியம். தெரிந்ததில் இருந்து, தெரியாதை நோக்கி போவது தானே கல்வி. இதுபோன்ற மாற்றங்களினால் பெரும்பலன் கிடைத்து விடுமா? இல்லை. பலரது முயற்சிகளை பின்னடைவாக்கும். இதை விட முக்கியமான பல பணிகள், கட்டுரைகள், படங்கள், தேவைகள் உள்ளன. அவற்றில் ஒன்றான இதில் மாற்றங்களை உருவாக்க முயலவும். அல்லது இங்குள்ள தாவரவியல் பெயர்களின், மூல இலத்தீனிய பெயரை எடுத்திடவும். அப்படி இட்டால் மேற்கொண்டு கற்பவருக்கு உதவும். மாறாக அங்கு கிரந்த நீக்குதலினால், எந்தஒரு நல்விளைவும் ஏற்படப் போவதில்லை. மொழியியல் அடிப்படையில் அது அவசியம். அறிவியல் அடிப்படையில், இத்தகைய பெயர்சொல் மாற்றத்தால் பெரிய விளைவுகள் ஏற்படப்போவதில்லை.--≈ உழவன் ( கூறுக ) 16:35, 20 சூலை 2013 (UTC)[பதிலளி]

மகரந்தப் பொடி, மகரந்தத் தூள், மகரந்தத் துகள் என்று கூறப்படுவதில் தூள், பொடி, துகள் போன்ற தமிழ்ச்சொற்கள் இருப்பதால் பொருள் விளங்குகின்றது. மகரந்தம் என்றால் என்ன புரிகின்றது? மகரந்தம் என்பதற்குத் தொடர்பான பிற தமிழ்ச்சொற்கள் ஏதும் உண்டா? பூந்தூள் என்றால் பூ என்பதும் தெரியும் தூள்/துகள்/பொடி என்பதும் தெரியும். இதுதான் கற்றதில் இருந்து கல்லாததை அறிவது. இதில் எளிமை உண்டு, அறிவியல் சிக்கனமும் (parsimony) உண்டு. கற்பவர் புதியதாக ஒரு சொல்லைக் கற்க வேண்டாம், கருத்தையும் உண்மையையும் மட்டும் கற்றால் போதும். பூந்தாது என்பதும் தமிழில் பயன்படுகின்றது. ஆக்ஃசுபோர்டு ஆங்கில-தமிழ் அகராதி, அ. சிதம்பரநாதர் அகராதி ஆகியவற்றைப் பார்க்கலாம். பேரா. கு. வி. கிருட்டிணமூர்த்தி அவர்களும் தன் நூலில் (தமிழரும் தாவரமும்) பக். 71 இல் குறித்துள்ளார். மகரந்தம் என்பதைப் பயன்படுத்தலாம், ஆனால் மகரந்தத்தூள் என்பதைவிட பூந்தூள்/பூந்துகள் என்பது எளிதாகப் புரிகின்றது, சுருக்கமாகவும் இருக்கின்றது. //இச்சொற்கள் சிரிப்பைத்தான் தருகிறது// என்பது போன்ற கூற்றுகளைத் தவிர்ப்பது நல்லது. இலத்தீன் போலவே தமிழும் செவ்வியல் மொழி. இலத்தீனில் எழுதும்பொழுது அது பெயர்ச்சொல்லாக இருந்தாலும் அம்மொழியின் இலக்கணப்படியேதான் எழுதுதல் வேண்டும். Carl von Linné என்பவரின் பெயரை Carolus Linnæus என்றுதான் இலத்தீன் மொழியில் வழங்கினார் (இப்படிப் பலவும் சொல்லலாம்). பயன் விளையும்-விளையாது என்பதை நீங்களோ நானோ கட்டியம் கூற அல்லது முற்கூற முடியாது. எது ஒழுக்கமான சீரான, எளிமையான ஒன்றாக இருக்குமோ அதை நாம் நமக்குத் தெரிந்தவாறு செய்ய முற்படுகின்றோம். யாருக்காக எழுதுகின்றோம், என்பதும் எது கல்வி என்பதும் கல்வித்துறையில் இருக்கும் எனக்கும் கொஞ்சம் தெரியும் என்று நினைக்க மாட்டீர்களா? சிரிப்பைத்தான் தருகிறது என்பது போல எள்ளலுடன் பேசாமல் கொஞ்சம் பண்போடு பேசினால் நல்லது! அதே போல இந்த மாற்றங்களை உருவாக்க முயலவும் என்பது போல பணிக்கவும் தேவை இல்லை! --செல்வா (பேச்சு) 07:10, 21 சூலை 2013 (UTC)[பதிலளி]
எள்ளல் விளிப்பைத் தவிர்க்கவும் தகவலுழவன். மகரந்தத்தில் கிரந்தம் எங்கே உள்ளது? ஏற்கனவே தெரிந்தவற்றின் அடிப்படையில் வளர்த்து முன்னெடுப்பதுதான் கல்வி என்கிறீர்கள். சரிதான். ஆனால், பூ என்றால் பெரும்பாலானோருக்கு விளங்காது, மகரந்தம் என்றால் விளங்கும் என்கிறீர்களா? -- சுந்தர் \பேச்சு 07:19, 21 சூலை 2013 (UTC)[பதிலளி]
எள்ளலே அல்ல. இது ஆதங்கம். என் ஆதங்கத்தை, குடும்ப உறுப்பினர்களிடம் கூறுகிறேன். ஆதங்கம் யாதெனில், இதற்கு முன் நிருவாகி என்ற சொல்லை தவிர்க்குமாறு கேட்டிருந்தேன். எத்தனையோ சொற்களுக்கு, விடாது தொடர்ந்து எண்ணங்களை வெளியிட்டு நீங்கள், செல்வா, இரவி உட்பட பலர் எழுதி, ஏற்கனவே இருந்த சொற்களை மாற்றியிருக்கிறீர்கள். எடுத்துக்காட்டாக(இடாய்ச்சு) ஏன் இந்த நிருவாகி என்ற சொல்லை, அணுக்கர் என்று ஏற்றும் மாற்றவில்லை?
கட்டுரைத் தலைப்பை மாற்றுவதற்கு மட்டும்தான் உரையாடல்களா? நான் தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனம் வெளியிடும் சொற்களிலே கவனம் செலுத்துகிறேன். அதனை கற்பவர், கற்றவர் பல கோடி. அச்சொற்களை பயன்படுத்தாமல், ஒரு கோடியில் ஒதுக்கிவிட்டு, புழக்கத்தில் இல்லாச் சொற்களில் தலைப்பிடுவது சரியல்ல. //தெரிந்ததில் இருந்து தெரியாததை நோக்கி போவதே கல்வி.// ஆனால், இங்கு தெரிந்ததில் இருந்து, தெரியாததை நோக்கிப்போகாமல், தெரிந்ததை மாற்றுவதற்கே முத்தாய்ப்பான முயற்சி. தலைப்பை மாற்றவேண்டும் என்ற வார்ப்புருவை பயன்படுத்தாது ஏன்? நமது உழைப்புகள் இடம் மாறி குவிக்கப்படுவதால், இனி இத்தோடு இவ்வுரையாடலை முடிக்க எண்ணுகிறேன். கட்டுரையின் வளர்ச்சிக்கு இனி இணைவோம். வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 12:58, 21 சூலை 2013 (UTC)[பதிலளி]
சிரிப்புதான் வருகிறது என்பது ஆதங்கம் என நீங்கள் அழுத்திச் சொன்னால் நான் சொல்வதற்கு எதுவும் இல்லை. விக்கிப்பீடியா பேச்சு:அதிகாரிகள் பக்கத்தில் நீங்கள் பரிந்துரைத்த அணுக்கர் என்ற சொல்லுக்கும் பொறுப்பாளர் என இரவி பரிந்துரைத்த சொல்லுக்கும் இடையே நாம் எதையும் இறுதி செய்யாமல் விடுபட்டதால்தான் இன்னும் நிருவாகி என இருக்கிறது. மற்றவர்களும் கருத்துத் தெரிவிக்கட்டும். அந்த இரண்டில் ஒன்றோ, வேறு நல்ல புதிய சொல்லையோ தேர்ந்தெடுத்தால் உடனே மாற்றலாம். நான் என்றுமே நிருவாகி என்ற சொல்தான் இருக்க வேண்டுமெனச் சொல்லவில்லையே? சொல்லப்போனால் அந்தச்சொல்லின் அதிகார தோரணை சரியில்லை என்பதில் உங்களுடன் உடன்படத்தானே செய்திருந்தேன்?
எந்தப் பக்கத்தின் தலைப்பை (வார்ப்புரு இட்டோ இடாமலோ) உரையாடாமல் மாற்றினேன் அல்லது மாற்றினார்கள் எனக்குறிப்பிட்டால் மீண்டும் உரையாடி முடிவு செய்யலாம். என் தவறென்றால் கட்டாயம் திருத்திக் கொள்கிறேன். -- சுந்தர் \பேச்சு 13:14, 21 சூலை 2013 (UTC)[பதிலளி]
தக்க உரையாடல் பண்புடன் உரையாடுவது வேண்டும். யாரும் யாரையும் என்னவேண்டுமாலும் சொல்லிவிடலாம் என்பதற்காக எதையும் எழுதும் இடம் அன்று. எள்ளல் இல்லையா? மேலே உங்கள் கேள்விகளையும் நீங்கள் கேட்கும் கோணத்தையும் பாருங்கள். இதைக் கண்டுகொள்லாமல் போகத்தெரியாமல் இல்லை, இப்படியெல்லாம் எழுதி உரையாடப் புகுந்தால் சீர்குலைவே மேற்படும். ஆதங்கம் என்பதாகக் கூறி இன்னொருவரைப் புண்படுத்தி எள்ளும் நோக்கை நான் ஏற்கவில்லை. ஆதங்கம் சிரிப்பாக வருமா?! மேற்கூறிய கேள்விகளையும் அதற்காகத் தந்திருக்கும் முன்முடிவுகளையும் விடைகளையும் கேள்விகளின் கோணத்தையும் பாருங்கள். தலைப்பை மாற்றும் முன் ஐயப்பாடு இருக்கும் இடத்தில் இருந்தால்தான் வார்ப்புரு இட வேண்டும். ஃபேபேசியே என்பதை ஃபெபேசியே அல்லது ஃபபேசியே என்று "சரியான" ஒலிப்பின் படி மாற்றுவது தவறன்று. மாற்றிய தலைப்பு சரியில்லை என்று சிலர் நினைத்தால் அது பற்றி உரையாடி இணக்க முடிவின்படி மாற்றிக்கொள்ளலாம். இது பற்றி நீட்டிக்க நான் விரும்பவில்லை. ஆனால் என் வருத்ததையும் மறுப்பையும் பதிவு செய்துவிட்டு நகர்கின்றேன். உரையாடலானது கருத்தை மையப்படுத்தியும், பண்பான முறையிலும் அமைதல் வேண்டும். --செல்வா (பேச்சு) 16:19, 21 சூலை 2013 (UTC)[பதிலளி]
இந்த உரையாடலிலும் மற்றுமொரு உரையாடலிலும் தகவலுழவன் மற்ற பயனர்கள் தெரிவித்துள்ள விளக்கம் எதையும் ஏற்கவோ மறுக்கவோ இல்லாமல் வேறு பழைய உரையாடல்களைத் தொடர்பிருப்பது போல காட்டிக் குறிப்பிட்டும் அல்லது வேறு செய்திகளைக் குறிப்பிட்டும் விலகிச் சென்றுள்ளார். உடன் பணியாற்றுபவர்களை எள்ளுவதும், பணிகள் நிறைய இருக்கும்போது இதை ஏன் செய்கிறீர்கள் என பணிப்பதும் ஏற்றுக் கொள்ள முடியாதது. தன் தவறுக்கு அவர் வருத்தம்கூட தெரிவிக்கவில்லை. விக்கிக் கொள்கைக்குட்பட்டு அதே வேளை நற்பண்புக் கோட்பாடுகளின் வரம்பைத் தொடுமளவு எண்ணற்ற நடவடிக்கைகளை ஆங்கில விக்கியில் நான் பார்த்திருக்கிறேன். தமிழ் விக்கியில் அவ்வாறு நிகழாது என்றும், தகவலுழவன் இப்போதைய தன் போக்கை மாற்றிக் கொள்வார் என்ற நம்பிக்கையுடனும் இனி நல்லபடியாக ஒத்துழைக்க வேண்டும் என்ற விருப்பதுடனும் இதை விட்டு விடலாம் என நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 04:57, 22 சூலை 2013 (UTC)[பதிலளி]
சுந்தர்! உங்கள் விளக்கத்தால், நிலைமையைப் புரிந்து கொண்டேன். மேற்கொண்டு உரையாடலாமென்றால் தொடருக. இனி ஒரு நேரத்தில் ஒன்று மட்டுமே கூறுகிறேன்.
  • செய்யப்பட்ட மாற்றங்கள் பல என்பதால், அனைத்தைதயும் கூற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன். எள்ளல் என புரிந்து கொள்ளும்படி எழுதுவதை தவிர்க்கிறேன். என்னை முழுமையை நோக்கி நகர்த்தியமைக்கு, நன்றி.நண்பரே! எனக்கு கணினிவாங்கி பரிசளித்த நண்பர்கள என்பதால் சற்று உரிமையை அதிகம் எடுத்துக் கொண்டேன். நண்பர்களிடம் பழகுவதில் விதிகளில்லை. இனி நட்பை விட்டு, இங்குள்ள பதிவுகள் குறித்த ஐயங்களை, ஒவ்வொன்றாக கேட்கலாமென்று எண்ணுகிறேன்.
  • ஐயம்-1 {.{தலைப்பை மாற்றுக}}{.{தலைப்பை மாற்று}} என்ற இரு இருந்தும்,பலர் பயன்படுத்தியும் இங்கு பயன்படுத்தப்படாதது ஏன்? அதனைத் தொடக்கத் தவிர்ப்பு என்றே நான் கருதுகிறேன். நீங்கள் அடிக்கடி நினைவூட்டுவது போல, பிறரின் கருத்தறியாமல் மாற்றியது ஏன்? அதுவே என்னை மிகவும் பாதித்துவிட்டது. எல்லோருக்கும் ஒரே நடைமுறைதானே? இங்கும் உயர்வுதாழ்வு உண்டா? --≈ உழவன் ( கூறுக ) 12:57, 22 சூலை 2013 (UTC)[பதிலளி]
நட்புரிமையில் யாரும் ஒருவர் செய்த பணியைப் பார்த்து சிரிப்புத்தான் வருகிறது என சொல்வதில்லை (நானறிய). ஒருவேளை இணைய உரையாடலில் உணர்வுகள் சரியாக வெளிப்படாமையால் அப்படித் தெரிகிறதோ என்னவோ. தவிர, நட்புரிமையில் பதியும் உரையாடலையும் முக்கிய கருத்துக்களையும் சற்று பிரித்துப் பார்த்தல் நலம். விக்கிக்கூடலில் சந்திக்கும்போது நட்பு பாராட்ட நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். :)
நீங்கள் மேலே கேட்டுள்ள கேள்விக்கு செல்வா முன்னமே மேலே விளக்கம் அளித்துள்ளார். அது சரியில்லை என நீங்கள் கருதினால் அவரே மீண்டும் விளக்கட்டும். விரைவுநீக்கல் தகுதிகளைப்போல ஒலிபெயர்ப்பு, எழுத்துப்பெயர்ப்பு போன்ற மாற்றங்களில் கொள்கை, மாற்றுக்கருத்து என்ற அளவில் சிக்கல் எதுவும் வராது என ஒரு பயனர் நம்பும் இடங்களில் தாமாக மாற்றலாம் எனக் கொள்ளலாமா? அதையும் மீறி மாற்றுக்கருத்து வரும்போது அதை உரையாடித் தீர்க்கும் வழி இருக்கிறது. இவ்வாறு கொள்வதால் தவறாகப் பயன்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளதா? -- சுந்தர் \பேச்சு 04:22, 23 சூலை 2013 (UTC)[பதிலளி]
  1. சரிங்க.சுந்தர்! இங்கு இரண்டு செயல்கள் பேசப்படுகின்றன. ஒன்று முதலில் நடந்த பதிவு. அடுத்து நடந்தது இரண்டாவது பதிவு. முதல் பதிவை பற்றி முதலில் உரையாடலாமா? அது குறித்த எனது முடிவு வருமாறு:-
  2. இம்மாற்றங்களைப் பற்றிய எனது நிலை வருமாறு;- ஒரே ஒரு நூலின் அடிப்படையில் மாற்றங்களை ஏற்படுத்தி விட்டு, அது சரியென்பதை, நாம் மட்டுமே சொல்லக்கூடாது. ஏனெனில், தமிழ்நாட்டு மாணவர்கள் அத்தகைய சொற்களைத்தான் கற்க வேண்டுமென்று, பாடத்திட்டக்குழுவின் பல்வேறு அறிஞர்கள் கூறவில்லை. இங்கு அவைகளை, உரையாடமல் புகுத்தியது, தவறான நடைமுறையே. பொதுவகத்தில் ஒரு கோப்பை நீக்குவதாக இருந்தால் கூட காரணம் சொல்லப்படுகிறது. பிறகே நீக்கப்படுகிறது. மாற்றங்களை பழைய நிலைக்கு தள்ளிவிட்டு, பிறரின் கருத்தறிய முற்பட நான் அணியமாக இருக்கிறேன். நீங்கள்?--≈ உழவன் ( கூறுக ) 09:40, 23 சூலை 2013 (UTC)[பதிலளி]

மேற்கோள்கள்[தொகு]

இதில் பல இலத்தீன் பெயர்களுக்கான தமிழ்முறைப்படியான ஒலிபெயர்ப்புகள். அவை பாடநூல்களில் உள்ளனவா எனத் தெரியவில்லை. பல இடங்களில் உரோமன் எழுத்துக்களில் மட்டும் இருந்ததை அடைப்பில் தந்துவிட்டு தமிழில் ஒலிபெயர்த்துள்ளார். அதில் மாற்றுக் கருத்து இருப்பின் உரையாடலாம். மற்றபடி, ஒரேயொரு நூலின் அடிப்படையில் என நீங்கள் கூறுவது நான் இணைத்த சான்றுகோளையா? அப்படியெனில் விளக்குகிறேன். (இல்லை என்றால் செல்வாதான் விளக்க வேண்டும்.) அந்த நூல் தமிழ்நாடு வேளாண்பைப் பல்கலைக்கழகத்தின் வெளியீடு. என்னிடம் அந்த ஒருநூல் மட்டுமே இருந்தது. அதனால் அந்த நூலில் நல்ல தமிழ் கலைச்சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தத் தொடங்கினேன். பூந்துணர் கட்டுரைக்கு அந்தத் தலைப்பை இட்டது சஞ்சீவி சிவகுமார், நான் அப்போதே இந்த நூலில் இருந்து சான்றை இணைத்திருந்தேன். இப்போது செல்வாவின் மாற்றத்துக்குப் பின்னர் தகுந்த இடங்களில் அதே நூலில் இருந்து சான்றை இணைத்தேன். -- சுந்தர் \பேச்சு 14:28, 23 சூலை 2013 (UTC)[பதிலளி]

சுந்தர்!ஒரு முறை கலைக்கதிர் அகரமுதலிகளையும் காணுங்கள்.மணவை முசுதாபா அவர்களும், பல நூல்களை வெளியிட்டுள்ளார். இதுபோல பலர். ஒரு மேற்கோளை தவறு என்றோ சரி என்றோ படிப்பவரே முடிவு செய்கின்றனர். நமது முதற்பதிவு தமிழக நூல்களை பதிய வேண்டும். அடுத்து அதனை, மேம்படுத்த வேண்டும். அதற்கு ஒவ்வொரு பிரிவிலும், ஒரு பக்கத்தை சிறப்பாக உருவாக்கிக் காட்ட வேண்டும் என்பதே எனது இலக்கு. இங்கே நடப்பது விருப்ப ப்பதிவுகள் அல்ல. தமிழ்வழி கல்விக்கான முழுமுயற்சி என்பதை, பிறர் உணர வேண்டும் என்பதே என் அகவிருப்பம். நமது முயற்சிகளை, சில சொற்களால் யாரும் புறந்தள்ளி விடக்கூடாது.
சிறந்த தமிழ் சொற்களை, நடைமுறை சொற்களோடு இணைத்தே அகரமுதலி தளம் தருகிறது.
http://www.அகரமுதலி.com/ta/%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D.html
இதுபோல இது தமிழ்சொல் அல்ல என்று ஒரு தனிப்பிரிவை ஒவ்வொரு கட்டுரையிலும் உருவாக்கலாம். அருளி படைத்த படைப்புகளையும் நேரில் கண்டேன். எனக்குத்தெரிந்தவரை நமது வாழ்நாள்பணியாக பாவாணர், மறைமலைஅடிகள் அடியொற்றி அவர் படைத்துள்ளார். அவற்றை எல்லாம் மேற்கோளிட விருப்பமே. சிலவருடங்களுக்கு பிறகு செய்வேன். இப்பொழுது தான்மெதுவாக பைத்தான் கற்கிறேன். அதில் இப்போதைக்கு தானிகளை இயக்கக் கற்றுக் கொண்டுள்ளேன். காலம் பலம் தந்தால், தமிழுக்காக நமது முன்னோர் அடிகளைப் பின்பற்றி வளர்ப்பேன்.
செம்மொழி மாநாட்டில் தமிழ் விக்சனரிக்கு கொடை கிடைத்தது போல, நமது பதிவுகளை மதிப்பிடும் போது, கட்டுரைகளை அதிகரிக்க, ஏதாவது தரவு வளத்தை, தமிழக அரசு உதவாதா? என்ற ஏக்கத்துடன் தான், எனது பதிவுகளை விக்கிக்கான கட்டுரைப்பகுதியில் தொடங்கியுள்ளேன். நம்மிடம் உள்ளவர் வளத்தால், தரமாக மாற்றியதை, அவர்கள் தவறாக எண்ணக்கூடாது. தமிழ்விக்கிப்பீடியர்கள் சிறப்பாக, நமது தரவினை விரிவு படுத்தவே கேட்கின்றனர் என்பதை தமிழக அரசு நம்ப, நாம் அடிகோலிட வேண்டும். தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் விக்கியில் ஆர்வம் இருக்கிறது. தரவுகளை தருவதில் அவருக்கு சில இக்கட்டுகள் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட அளவோடு தர அவர் இசைந்தார். அதனை தொடர்ந்து முன்னெடுத்தால், நமக்கு பலன் கிடைக்கும். இலயோலா கல்லூரியில் நடந்த கூட்டமொன்றில் சில நிமிடங்கள் அவரிடம் உரையாட முடிந்தது.
சரிங்க. என்னுடன் உரையாடியமைக்கு நன்றி. இனி அவ்வப்போது உங்கள் உரையாடற்பக்கத்தில், கட்டுரை விரிவாக்கத்திற்கான தேவையை ஒவ்வொன்றாக கூறுகிறேன். உங்களுக்கு பணியடர்வு குறைவாக இருக்கும்போது செய்து தரவும். சில ஆயிரம் தாவரவியல் கட்டுரைகளுக்கு அடித்தளமாவது இட வேண்டும் என்ற எண்ணம் என்னுள் மேலோங்குகிறது. நானே படித்து புரிந்துகொள்ள நிறையநேரம் செலவாகிறது என்பதால் அவ்வப்போது உங்களது உதவியை நாடுவேன். இனி உங்கள் பக்கத்தில் சந்திக்கிறேன் . வணக்கம். --≈ உழவன் ( கூறுக ) 15:20, 23 சூலை 2013 (UTC)[பதிலளி]

- அவரைக் குடும்பம்[தொகு]

பயறு என்பதை அடிப்படையாகக் கொண்ட Fabaceae எனும் இலத்தீனப்பெயர் தவறுதலானது என்றும் அதை இப்போது பயன்படுத்தத் தயங்குவதாகவும் ஆங்கில விக்கியில் உள்ளது. அவரைக் குடும்பம் என்பதை முதன்மைப்படுத்தலாமா? -- சுந்தர் \பேச்சு 07:23, 21 சூலை 2013 (UTC)[பதிலளி]

  • Leguminosae என்பது இக்குடும்பத்தின் பழைய பெயர். அதனால் தான் பயறு என்ற பெயர், முன்பு கையாளப்பட்டது.--≈ உழவன் ( கூறுக ) 13:05, 21 சூலை 2013 (UTC)[பதிலளி]
  • இக்குடும்பத்தின் பொருளாதாரப்பயன்களைக் காணும் போது, பருப்பினக்குடும்பம் (Leguminosae) என்பதை நீக்கலாமென்று எண்ணுகிறேன். அதனால், Leguminosae என்ற பெயரை, Fabaceae என தாவரவியலாளர்கள் மாற்றினர். மாற்றுக்கருத்து இருப்பின் தெரிவிக்கவும்.--≈ உழவன் ( கூறுக ) 03:54, 23 சூலை 2013 (UTC)[பதிலளி]

ஆங்கில விக்கியில் பின்வருமாறு உள்ளது, தகவலுழவன்.

The name 'Fabaceae' comes from the defunct genus Faba, now included in Vicia. The term "faba" comes from Latin, and appears to simply mean "bean".[1] Leguminosae is an older name still considered valid,[2] and refers to the fruit of these plants, which are called legumes.

அதைப் பார்த்தால் தவறான அடிப்படையில் ஃபபேசியே ஏற்பட்டுள்ளதோ எனத் தோன்றுகிறது. இருபுறம் வெடிக்கும் கனிகளை உடையன என்பதுதான் பொதுப்பண்பு போலிருக்கிறது. -- சுந்தர் \பேச்சு 04:51, 23 சூலை 2013 (UTC)[பதிலளி]

தமிழகப் பாடத்திட்டங்களில் இப்பெயரை பேபேசி குடும்பம் எனக்குறிப்பிட்டுள்ளனர். நான் Fabaceae என்பதில் வரும் இறுதியொலிக்காக, 'யே' என்பதனை இணைத்தேன். இன்னும் நுணுக்கமாக செல்வா,ஃபபேசியே எனக்குறிப்பிட்டார். எங்களுக்குப் பிறகு யாரோ? இவை தவறெனில் விட்டு விட்டு, கீழே குறிப்பிட்டக் காரணங்களுக்காக, முதலில் வகைப்பாட்டியல் விதிகளின் படி, இலத்தீனியப்பெயரை அமைத்து வழிமாற்றாக தமிழ் பெயரை வைக்கலாம். அதனால் கீழே குறிப்பிட்ட அறுபட்ட பக்கங்கள் இல்லாமல் போகும். நமக்கும் பணியடர்வு குறையும். --≈ உழவன் ( கூறுக ) 09:47, 23 சூலை 2013 (UTC)[பதிலளி]
இந்தப் பெயர்களில் எதுவானாலும் எனக்கு உகப்புதான். ஆங்கில விக்கியில் அவ்வாறு தந்திருப்பதால், சரியான பெயரை இடும்போது தமிழில் வழங்கலாம் என்றெண்ணினேன். முதல் பத்தியில் இலத்தீனப் பெயரையும் இட்டால் படிப்பவர்களுக்கு இரண்டும் புலனாகும். சரியான பெயர் எதுவென முடிவு செய்யலாம். இலத்தீனம்தான் வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, இருந்தாலும் எனக்கு மறுப்பில்லை. இடாய்ச்சில் நிறைய அறிவியற் வகைப்பாட்டியற் சொற்களை மொழிபெயர்த்துள்ளார்கள் என நினைக்கிறேன். அவரைக்குடும்பம் (சங்குப்பூச்செடிக் குடும்பம்), வாழைக்குடும்பம், போல அழைத்தால் பெயரைப் படித்தவுடன் விளங்கும் என்பதால் எனக்குப் பிடித்துள்ளது. பிறகு இங்குள்ளவற்றைத் தானியங்கி கொண்டு ஒரேடியாக மாற்றிவிடலாம். அது பெரிய சிக்கலே இல்லை. மென்ம வல்லுனர் அணுக்கம் இருந்தால் 5 விநாடிதான் பிடிக்கும், நமக்கு 15 நிமிடம் ஆகலாம். -- சுந்தர் \பேச்சு 14:36, 23 சூலை 2013 (UTC)[பதிலளி]
சுந்தர்! தானி வழியே பகுப்பிடலை, AWB, py.wiki இரண்டு முறைகளிலும், விக்சனரியில் செய்து பார்த்துள்ளேன். அது எளிமைதான். ஆனால், இலத்தீனப் பெயரை, இங்குள்ள அனைத்து உயிரியல் கட்டுரைகளுக்கும் தேவைப்படும் இடத்தில் வைத்து வழிமாற்றாக தமிழ் பெயரை வைத்தால், இது போன்ற பகுப்புத்தானிகளே தேவைப்படாது. மற்றொரு நன்மை, இலத்தீனிய பெயரிடல் முறை தோன்றியதே, உள்ளூர் மொழி பெயர்களை தவிர்க்கத்தான். அதனால் பல இடர்கள் நீங்கும். முதல் பலன் யாதெனில், பேபேசி என்று தமிழகத்தில் பலபாடங்களில் உள்ளது. அதை அவர்கள் தேடிப் பார்க்கும் போது, இக்கட்டுரை இருந்தும், இப்பொழுது தேடுசாளரவிளைவில் வரவில்லை. அதனால் தான் தமிழ் பெயர்களுக்கு பின்னால் மறைமுக வழிமாற்றாக, இலத்தீனிய பெயர் வைக்கலாமென்றே கருதுகிறேன். உங்கள் நிலை அறிய ஆவல்.--≈ உழவன் ( கூறுக ) 17:42, 24 சூலை 2013 (UTC)[பதிலளி]

மேற்கோள்[தொகு]

  1. Wiktionary. "Faba". Searched November, 2011. http://en.wiktionary.org/wiki/faba
  2. International Code of Botanical Nomenclature Art. 18.5 (Vienna Code)

இலத்தீனியத் தலைப்பு[தொகு]

( கருத்திடுக ! )

இப்பக்கத்தில், இவ்வுட்பிரிவை, ஒரு வழிகாட்டலாக அமைக்கவேத் தொடங்குகிறேன்.

  1. APG III படி, ஒவ்வொரு பூக்கும் தாவர வகைப்பாட்டியல் சொல்லும், முதலில் இலத்தீனிய மொழியில் தான் கட்டாயம் குறிக்கப்பட வேண்டும் என்று இயலுகிறது. இது பன்னாட்டு அறிஞர்கள் கூடி உருவாக்கி பின்பற்றும் நெறிமுறை. வகைப்பாட்டியல் நோக்கமே, பல மொழிகளையும், ஒவ்வொரு மொழியிலுமுள்ள வேறுபாடுகளையும் தவிர்ப்பதே ஆகும். அதனால் அறிஞர்களிடம் ஏற்பட்ட குழப்பங்களும், விவாதங்களைம் தவிர்க்கப் பட்டன. நாமும் அதை பின்புலமாக வைத்து, வழிமாற்றாக நம் மொழியின் சொல்லை வைத்தால், சிறந்த பலன்கள் கிடைக்கும். அவற்றுள் சில பயன்கள் வருமாறு:-
  2. பகுப்பிடும் நேரம் மீதமாகும். இங்கு ஃபபேசியே கட்டுரை இருந்தும், அது ஏற்கனவே, இருக்கும் கட்டுரைகளுக்கு உரிய உள்ளிணைப்பு இல்லாமல் அறுபட்டு இருக்கின்றன.
    ஏனெனில், இதுவரை உள்ள பெரும்பான்மையான உயிரியல் கட்டுரைகளை பார்க்கும் போது, Taxobox அப்படியே நகலெடுத்து இங்கு ஒட்டப்படுகிறது. இது பெரும்பான்மையான பிற மொழி விக்கித்திட்டங்களும் பின்பற்றப் படுகிறது.
  3. அப்படி செய்தால் கட்டுரை உருவாக்கிய உடனே அச்சொல் இருக்கும் , அனைத்து Taxobox-களிலும் தெரியும். இல்லையெனில் ஒவ்வொரு கட்டுரையையும் திறந்து, அந்த குறிப்பிட வகைப்பாட்டியல் சொல்லை மாற்றவேண்டும்.
  4. எனவே, இங்குள்ள தலைப்புக்கு பின்புலமாக, APG IIIபடி உருவாக்கப்பட்ட சொல்லான Fabaceae அமைக்க என்ன செய்ய வேண்டும்?--≈ உழவன் ( கூறுக ) 03:43, 22 சூலை 2013 (UTC)[பதிலளி]

செய்ய வேண்டியன[தொகு]

  • சோர்னியா தைஃபில்லா என்ற தாவரவியல் பெயர் இங்குள்ளது. அப்பெயரில் ஒரு பேரினம், இக்குடும்பத்தில் இருக்கிறதா என்பது ஐயத்திற்குரியது. ஒருவேளை இக்குடும்ப பேரினங்கள்740பட்டியலிட்டால் அறிவதற்கு ஏதுவாகும். இவற்றில் 19,400 இனங்கள் இருப்பதால் அவற்றிலும் தேடலாம். பேரினப்பட்டியலில் தேடுவதே எளிது. இருப்பினும், பேரினப்பெயர் தவறாகக் குறிக்கப்பட்டால், சிற்றினப்பெயர்கள் உதவலாம். தமிழகப் பள்ளிப்பாடங்களில் இது கையாளப்படுவதால், அவர்கள் விரிவாக அறியும் பொருட்டு இது அவசியமாகிறது. விவரம் அறிந்தவர்கள் விவரங்களிடக் கோருகிறேன்.--≈ உழவன் ( கூறுக ) 03:47, 23 சூலை 2013 (UTC)[பதிலளி]
  • இனப்பெருக்க வட்டம் என்பதிலுள்ள வெளிப்புற இணைப்பு அறுபட்டாலும் அறுபடும் எனவே, அத்தரவுகளை <notes> வசதிமூலம் இடணும்.--≈ உழவன் ( கூறுக ) 15:35, 23 சூலை 2013 (UTC)[பதிலளி]

(மொழியாக்கம் செய்ய வேண்டியன)

Crop 	Production 	Area Harvested
	Mt × 106 	ha × 106
Grain legumes 	275 	160
Forage legumes 	605 	20
Wheat 	583 	214
Rice (Oryza sativa) 	590 	152
Maize (Zea mays) 	609 	138
Barley (Hordeum vulgare) 	141 	54
Potatoes (Solanum tuberosum) 	308 	19
Cassava (Manihot esculentaCrantz.) 	179 	20
Total 	3,320 	777

Source: Food and Agriculture Organization of the United Nations (FAO) database 

(பொதுவகத்திற்கு மாற்ற வேண்டியன)

  1. EthnoBiologists
பேபேசி என்ற பெயர் தமிழகப் பாடநூல்களில் உள்ளதாக நினைவு. --கி.மூர்த்தி (பேச்சு) 15:07, 30 சூலை 2016 (UTC)[பதிலளி]

காப்புரிமை ஐயமுள்ள தரவுகள்[தொகு]

பூவின் வட்டங்கள்[தொகு]

Wisteria sinensis

அல்லிவட்டம்[தொகு]

அல்லிகள் ஐந்து இருக்கின்றன. வண்ணமானது. தனித்த அல்லிகள். இறங்கு தழுவு இதழமைவில் உள்ளன, இது வெக்சில்லரி(vexillary aestivation) இதழமைவு என்றும் அழைக்கப்படும். மேற்புறத்தில் உள்ள அல்லி பெரியது. இது கொடியல் அல்லது வெக்சில்லம் என்றும் அழைக்கப்படும். பக்கவாட்டு இரண்டு அல்லிகள் மேற்பக்கத்தில், கூர்மையாக உட்புறமாக மடங்கி காணப்படும், இவ்விரு அல்லிகளும் சிறகல் அல்லது ஆலே எனப்படும். கீழ்ப்புறத்திலுள்ள இரு அல்லிகளும் இணைந்து, மகரந்தத்தாள்களையும் சூலகத்தையும் பாதுகாக்கிறது. இவ்விரு அல்லிகளும் படகல் அல்லது காரினா(carina) எனப்படும். அனைத்து அல்லி இதழ்களின் அடிப்பகுதியும் குறுகிக் காணப்படும், இத்தகைய அல்லிவட்டம், வண்ணத்துப் பூச்சி வடிவ அல்லிவட்டம் எனப்படும்.

புல்லிவட்டம்[தொகு]

  • புல்லிகள் ஐந்து உள்ளன. பசுமையானது. அவைகள் தொடு இதழ் அமைவில் இணைந்துள்ளன. ஒற்றைப்புல்லி மலரின் கீழ் பாகத்திலுள்ளது,


பொருளாதாரப் பயன்கள்[தொகு]

கீழ்கண்ட சிற்றினங்களால், நமது அன்றாட வாழ்வின் பொருளாதாரம் பெருகி, வாழ்க்கையும் சீராகிறது.

  1. பருப்பு வகைகள்
    கஜானஸ் கஜான் (துவரை). விக்னா முங்கோ (உளுந்து). விக்னா ரேடியேட்டா (பச்சைப்பயறு). விக்னா உங்கிகுளேட்டா (கொள்ளு), சைசெர் ஆரிடினம் (மூக்கடலை) முதலியன புரதச்சத்து மிகுந்த பருப்பு வகைகளாகும்.
  2. காய்கறி வகைகள்
    முதிர்ச்சியடையாத லாப்லாப் பர்பூரீயஸ் (அவரை) தாவரக் கனியும், செஸ்பேனியா கிராண்டிஃபுளோரா (அகத்தி) தாவர இலைகளும் சமையலுக்கும் பயன்படுகின்றன.
  3. எண்ணெய்த் தாவரங்கள்
    அராக்கிஸ் ஹைபோஜியா (வேர்கடலை) தாவர விதைகளிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் சமையலுக்கு பயன்படுகிறது. மேலும், அவ்விதைகள் உண்ணக்கூடியவை. பொங்கேமியா பின்னேட்டா (புங்கம்) தாவர விதைகளிருந்து பிரித்தெடுக்கப்படும் புங்க எண்ணெய் மருத்துவ குணமுடையது. மேலும், இது சோப்பு தயாரிக்கவும் பயன்படுகிறது,
  4. தச்சுமரக்கட்டைத் தாவரங்கள்
    டால்பெர்ஜியா லாட்டிஃபோயா (நூக்க மரம்) மற்றும் டிரோகார்ப்பஸ் சாண்ட்டனஸ் (வேங்கை ) முதலியன தச்சுமரக்கட்டைத்தரும் தாவரங்களாகும். இக்கட்டை மரச்சாமான்கள் செய்வதற்கும். உள் அலங்காரப் பெட்டிகள் தயாரிக்கவும், கட்டுமானப் பொருளாகவும் பயன்படுகின்றன.
  5. நார்த் தாவரங்கள்
    குரோட்டலேரியா ஜன்சியா (சணப்பை). செஸ்பேனியா ஏஜிப்டியாக்கா (செஸ்பேன்) போன்ற தாவரங்களிருந்துப் பெறப்படும் நார்கள் கயிறு தயாரிக்கப் பயன்படுகின்றன.
  6. சாயத் தாவரங்கள்
    இன்டிகோஃபெரா டிங்டோரியா (அளிகி) தாவரத்திருந்து பெறப்படும் "இன்டிகோ" என்ற நீல சாயம் அச்சு மை மற்றும் சாயக்குழம்பி(paint) தயாரிக்கப் பயன்படுகிறது. கிளைட்டோரியா டெர்னேசியா தாவர மலர் மற்றும் விதைகளிருந்தும் நீல சாயம் தயாரிக்கப்படுகிறது.
  7. அலங்காரத் தாவரங்கள்
    பியூடியா பிராண்டோசா (காட்டுத்தீ); லூபினஸ் ஹிர்சுட்டஸ்; கிளைட்டோரியா டெர்னேசியா; லாத்திரஸ் ஓடோரேட்டஸ் (இனிப்புப் பட்டாணி) போன்றவை தாவரங்கள் அழகுக்காக தோட்டங்களில் வளர்க்கப் படுகின்றன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பபேசியே&oldid=2169751" இலிருந்து மீள்விக்கப்பட்டது