பேச்சு:பன்னாட்டு மன்னிப்பு அவை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சர்வதேச மன்னிப்பு சபை என்ற பெயரில் வேறு தமிழ் ஊடகங்களில் இவ்வமைப்பு குறிப்பிடப்பிட்டிருக்கிறதா? தெரிந்து கொள்ள ஆவல்--ரவி 16:31, 7 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

ஆமாம், இலங்கைப் பத்திரிகைகளில் இப்படித்தான் குறிப்பிடுகின்றார்கள். --Natkeeran 17:08, 7 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

சர்வதேசம் = அனைத்துலகம், பன்னாடுகள் எனவும் சபை = அவை என்று இருப்பதும் நல்லது. தொல்காப்பியர், திருவள்ளுவர் காலத்தில் இருந்து அவை, அவையடக்கம், என்று பரவலக ஆளப்பட்டு வந்துள்ளது. ஏன் சபை என்று எழுதவேண்டும்? அனைத்துலக அறம்நிறுவகம் என்று பெயரிடலாம். ஆங்கில விக்கியில்கூறப்பட்டுள்ளது: Amnesty (from the Greek amnestia, oblivion) is an act of justice by which the supreme power in a state restores those who may have been guilty of any offence against it to the position of innocent persons. It includes more than pardon, inasmuch as it obliterates all legal remembrance of the offence. நாளிதழ், மற்றும் பிற இதழ்களில் ஆளப்படும் சொல்(/கள்) சரியானதாக இருந்தால் எடுத்து ஆளலாம், பொருத்தம் இல்லாவிட்டால் சிறந்த, திருத்தமான சொல்லாட்சிகளை கலைக்களைஞ்சியம் போன்ற உறுதுணை நூல்கள் ஆளவேண்டும். பிறைக்குறிகளுக்குள், பரவலாக ஆளப்படும் சொற்களையும் தரலாம். --C.R.Selvakumar 17:30, 7 அக்டோபர் 2006 (UTC)செல்வா[பதிலளி]

செல்வா, உங்கள் மொழிபெயர்ப்பு நன்றாகவே இருக்கின்றது. ஆனால், இலங்கையில் இந்தச் சொல் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படுகின்றது. அச்சபையும் இந்த பெயரையே தன்னை அடையாளப்படுத்த பயன்படுத்துகின்றது என்று நினைக்கின்றேன், ஆனால் உறுதியாக தெரியாது. இந்த நிலையில் என்ன நிலைப்பாடு எடுப்பது என்பது நோக்கி பிற பயனர்களும் கருத்து கூறினால் நன்று. --Natkeeran 17:40, 7 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

நன்றி நற்கீரன். என் வேண்டுகோள் என்னவென்றால், கலைக்களஞ்சியம், அகராதி போன்ற நூல்கள், தரம் நிறுவும் வண்ணம் சிறந்ததாக இருத்தல் வேண்டும். துணிவோடும் செயல்படல் வேண்டும் (துணிவு என்பது இங்கே நாம் செய்யும் பணியின் மீது இருக்கும் நம்பிக்கையால் எழுவது). என் முன்வைப்பை தவறாக எடுத்துக்கொளாதீர்கள். தரம் செய்தல், சீர் செய்தல், சரி செய்தல், துல்லியம் கூட்டல், செழுமையான கருத்துக்கள் சேர்த்தல், தொடர்பு காட்டல் முதலிய பலவகைப் பண்புகள், குறிக்கோள்கள் பின்புலமாக இருந்து நம்மை நெறிப்படுத்துதல் வேண்டும். --C.R.Selvakumar 18:03, 7 அக்டோபர் 2006 (UTC)செல்வா[பதிலளி]