பேச்சு:பனம் பழம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பனம் பழம் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

நுங்கு எனத் தேடியபோது, அது இந்த பனம்பழம் என்னும் பக்கத்தில் கொண்டு வந்து விட்டுள்ளது. ஆனால் நுங்கு என்பது பனையின் இளம் காய்களைக் குறிப்பிடும் பெயராகவும், பனம்பழம் என்பது பனையின் முற்றிய பழங்களைக் குறிப்பிடும் பெயராகவும்தானே உள்ளது. அதனால் நுங்கு என்பதை பனம்பழத்துக்கு மீள்வழிப்படுத்தியுள்ளது சரிதானா?--கலை 00:25, 22 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]

நுங்கு பற்றித் தனிக்கட்டுரை எழுதுவதற்கு அதன் வரைவிலக்கணம் தவிர வேறு தகவல் இல்லையெனில் அது பனம்பழம் கட்டுரைக்கு வழிமாற்று செய்வதில் தவறில்லை. ஆனால் பனம்பழம் கட்டுரையின் முதற் பந்தியில் நுங்கு பற்றியும் குறிப்பிடப்பட வேண்டும். ஆனால் இப்போதுள்ள தகவலைக் கொண்டு அதனைத் தனிக்கட்டுரை ஆக்கினாலும் பரவாயில்லை.--Kanags \பேச்சு 00:56, 22 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]
நன்றி Kanags. ஏற்கனவே இங்கு நுங்கு பற்றி சில குறிப்புக்களை இணைத்துள்ளேன்.--கலை 01:16, 22 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]

நுங்கு[தொகு]

சந்திரவதனா! நுங்கை முழுமையாகவே சிறு சிறு துண்டுகளாக வெட்டி மாட்டின் உணவாக பாவிப்பார்கள். சீக்காயை மட்டுமல்ல. அதனால், அதை மீண்டும் முதல் இருந்ததுபோலவே மாற்றலாம் என நினைக்கிறேன். என்ன நினைக்கிறீர்கள்?--கலை 22:18, 23 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]

வணக்கம் கலை,
எனக்குத் தெரிந்த அளவில், நுங்கைக் குடித்த பின்னர் கோம்பையை ஆடு, மாட்டுக்கு வெட்டிப் போடுவார்கள்.மற்றும் சீக்காய் ஆகி விட்டதென்றால் அப்படியே உள்ளீட்டுடன் சேர்த்து வெட்டிப் போடுவார்கள். நுங்கின் கோம்பை சீவுவதற்குச் சுலபமாக இருக்கும். சீக்காயின் கோம்பை சீவுவதற்கு மிகவும் கடினமாக இருக்கும். கூடுதலாகப் பெண்கள் கோம்பையை தமது முழங்காலுடன் அண்டி வைத்துச் சீவுவார்கள். சீக்காயைச் சீவும் போது கத்தி நழுவி முழங்காலைக் காயப்படுத்தி விடுவதும் உண்டு.
இது எனக்குத் தெரிந்த விடயங்களில் தற்போது ஞாபகத்தில் வந்தவை.

நீங்கள் சொல்வது போல நுங்கையும் ஆடு, மாட்டுக்கு உணவாகக் கொடுப்பார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்த விடயமாக இருந்தால் தயங்காமல் கட்டுரையை மாற்றி (முதலிருந்தது போல) எழுதுங்கள். நன்றி
--Chandravathanaa 13:39, 24 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]

நுங்கு என்று சொல்லும்போது, குடிக்கும் விதைப் பகுதியையும், கோம்பையையும் சேர்த்தே நான் சொன்னதால், நுங்கை வெட்டிப் போடுவார்கள் என்று சொன்னேன். அந்த குடிக்கும் பகுதியை கோம்பையுடன் சேர்த்து கூற வேறு ஏதாவது சொல் உண்டா. எனக்கு பல விடயங்கள் மறந்து போனது :(. --கலை 23:44, 25 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]

கலை,
நுங்கு என்பது பனங்காயின் இளம்பருவம்.
நாம் குடிக்கும் நுங்கு அதனுள் இருக்கும் வரை மட்டுமே அது நுங்கு எனப்படுகிறது.
நுங்கை எடுத்து விட்டோம் என்றால் மிகுதியான பகுதி வெறும் கோம்பையே.
நுங்கும், கோம்பையும் சேர்ந்த நிலையில் ஏதாவது தனிப்பெயர் இருக்கிறதா என்பது எனக்குத் தெரியவில்லை.
யாராவது தெரிந்தவர்கள் சொன்னால் நல்லது.
--Chandravathanaa 06:45, 1 டிசம்பர் 2009 (UTC)


சீக்காய்[தொகு]

எங்கள் பகுதியில் சீக்காய் என்பதற்கு பதில் கடுக்காய் என்பார்கள். மற்ற பகுதிகளில் எப்படி என்று தெரியவில்லை. எ.கா: நுங்கு கடுக்கா ஆயிறுச்சி தின்னா வயிறு வலிக்கும். --குறும்பன் (பேச்சு) 14:23, 14 செப்டம்பர் 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பனம்_பழம்&oldid=1497515" இலிருந்து மீள்விக்கப்பட்டது