பேச்சு:பண்ணுறவாண்மை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்ணுறவாண்மை என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

Diplomatic speech, talk என்பதற்கு பண்மொழி எனலாம். அரசுகள் பிற அரசுகளுடன் உறவு கொள்ளுவோரை பண்ணுறவாளர் என்று, அவர்கள் உறவாட்டங்களை பண்ணுறவாட்டம், பண்ணுறவு என்றும் கூறலாம். தூதுவர் என்பவர் ambassador(/s). மேலும் Messengers, agents, emissaries என்பனவற்றுக்கு பண்புரைப்பார் என்று செ.ப அகராதி குறிக்கின்றது. வினையுரைப்போர் என்னும் சொல்லை Messengers, ambassadors என்பதற்கு ஈடாக அதே அகராதி குறிக்கின்றது. அரசுப் பண்புறவாளர், அரசுப் பண்புரைப்பார் என்னும் சொற்களையும் எண்ணிப்பார்க்கலாம். Diplomacy என்பதற்கு பண்புறவாண்மை, பண்புரைவாண்மை எனலாம். Diplomat = பண்புரைவார் (அரசுப் பண்புரைவார்), பண்புரைவாளர் என்று குறிப்பிடலாம். இராசதந்திரம் என்பதன் பொருள் வேறு என்று நினைக்கிறேன். More like clever strategy. State manouvers. அரசுதந்திரம் என்பதன் சரியான பொருள் விளக்கும் கூற்றுகள் இருந்தால் பயனுடையதாக இருக்கும்.--செல்வா 16:11, 9 டிசம்பர் 2008 (UTC)

Diplomatic என்பதற்கும் பண்ணுறவு, பண்ணுறவாளர் போன்றவற்றில் வரும் "பண்" என்பதற்கும் என்ன தொடர்பு? பண்பு, பண்பாடு போன்றவற்றில் வருவது போன்றதா? மயூரநாதன் 16:48, 10 டிசம்பர் 2008 (UTC)
பண் என்பது harmonious, "in an agreeable fashion" என்னும் அடிக்கருத்துடையது. பாடல்களின் பண் இசைவு தருவதால் (உள்ளே இன்பம் தரும் இணக்க, இசைவு உணர்வு தருவதால்), பண் எனப்படுகின்றது. நேர்த்தியாய் செய்த பொருள் பண்டம், இசைவாய், இயல்பாய் ஒன்றில் அமைந்து இருப்பதால் பொருட்களின் பண்பு என்கிறோம். மாந்தர்களின் நடத்தையில் (பேச்சு, நடை, உடை பாவனையின்) இசைவான, இணக்கமான இயல்பு இருப்பதை பண்பு என்கிறோம். பண்பான பேச்சு, பண்பட்ட பேச்சு. பண்பாடு என்பது ஒரு மக்கள் குழாம் தாங்கள் தங்கள் வாழ்முறைகளில் தோன்றி செப்பம் அடைந்து, இனிமை, இசைவு, இணக்கம் பெற்றதாய், எய்தியதாய், உணரப்படும் நிலை, வாழக்கை முறை, கலை எழில் சிறப்பு பண்பாடு. இசைவடிவாக இறைவன் இருப்பதாக தமிழர்கள் நினைப்பதால் இறைவனைப் பண்ணவன் என்று சம்பந்தர் காலத்திலிருந்து அழைத்து வருகிறார்கள். ஆங்கிலத்தில் diplomat, diplomatic என்னும் சொற்கள், அரசு சார்பாக இணக்கமுற பேசுவதும், அரசுக்கும் அரசுக்கும் இடையே இசைவாக உறவாட்டங்கள் நிகழ்வதின் தொடர்பாகக் கூறப்படும் சொற்கள் பற்றி வெளியுறவு உயர்பதவியாளர்களை ஒட்டிப் பயன்படுத்தும் சொற்கள். உயர்பதவியாளர்கள், பற்பல சூழ் நிலைமைகளை நன்குணர்ந்து, கூடியவாறு இசைவுடன், இணக்கமுடன் உரையாடி, அரசுகளுக்கிடையே உறவாடுவதுதானே இது?--செல்வா 17:19, 10 டிசம்பர் 2008 (UTC)

பண்ணுறவாண்மை = பண்? உறவு? ஆண்மை? இவைகள் எதைக் குறிக்கின்றது என்பது கேள்வியாக உள்ளது.Multi= பல, Multination= பன்னாடு என்று வரலாம் ,பல நாடுகள் சேர்ந்து இருப்பதால் என்று பெயரிடப்பட்டுள்ளதா?,பண்ணுறவாண்மை- (ஆண்மை =செயல்=நயம்=ஆளுமை) கல்வியை குறித்த சொல்லாக உள்ளது. இது தனித் தலைப்பா அல்லது ஆங்கிலத்துக்கு ஒட்டிய தலைப்பா? பிரித்தால் பொருள் தரவில்லை. ஆங்கிலத்துக்கு ஒட்டியவை என்றால் பொருள் தரவில்லை. அகராதியிலும் இது குறித்து தேடினால் இம்மாதிரி இல்லை. அகராதியில் Diplomacy=அரசியல் செயலாட்சித்திறம், செயல்நயம்,ராஜதந்திரம், diplomat= அரசியல் நிபுணர் இப்படித்தான் உள்ளது இணைய அகராதியிலும் இப்படித்தான் உள்ளது கட்டுரையும் இந்தப் பொருளுடன் ஒற்றியுள்ளது. இன்னும் பொருத்தாமாக மாற்றுவது சிறந்தது--செல்வம் தமிழ் 03:30, 13 ஏப்ரல் 2009 (UTC)

Diplomacy =அணுகு திறன்/அணுகு உத்தி என்று தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது--செல்வம் தமிழ் 17:46, 13 ஏப்ரல் 2009 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பண்ணுறவாண்மை&oldid=2428196" இலிருந்து மீள்விக்கப்பட்டது