பேச்சு:பச்சைப் பஞ்சுருட்டான்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணக்கம் ராஜ்குமார், நீங்கள் பச்சை ஈப்பிடிப்பான் கட்டுரையின் உள்ளடக்கங்களை நீக்கிவிட்டு இந்தக் கட்டுரைக்கு வழிமாற்று இட்டுள்ளீர்கள். உங்கள் கட்டுரையில் இந்த இரண்டு கட்டுரைகளையும் இணைக்க(உள்ளடக்கங்களை இணைக்க) மட்டுமே வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. தமிழ்விக்கியில் முன்னமே உள்ள கட்டுரையை வேறுதலைப்பில் ஆரம்பித்தால், அதை முதலில் உருவாக்கிய கட்டுரையுடன் இணைப்பதே வழக்கம். இதுகுறித்த மேலதிக விவரங்களுக்கு விக்கி நிர்வாகிகளை அணுகுங்கள் அல்லது ஒத்தாசை பக்கத்தில் கேளுங்கள். அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 09:14, 31 மார்ச் 2013 (UTC)

அறியாமல் செய்த தவற்றை மன்னிக்கவும். வழி காட்டியமைக்கு நன்றி. இனி அவ்வாறே செய்கிறேன். முனைவர் இராஜ் குமார் 10:42, 31 மார்ச் 2013 (UTC)

நானும் எல்லா தவறுகளையும் செய்தே வந்திருக்கிறேன், காயப்படுத்தியதாக எண்ணாமல் புரிந்துகொண்டமைக்கு நன்றி. மன்னிப்புலாம் பெரிய வார்த்தைங்க, நான் பொடியன். விக்கில எல்லாருமே தப்புசெஞ்சுதான் கத்துக்கறோம். உங்க பங்களிப்பு வேகத்தப் பாக்கறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு, தொடர்ந்து பங்களிங்க. -- அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 11:11, 31 மார்ச் 2013 (UTC)
👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:18, 31 மார்ச் 2013 (UTC)
👍 விருப்பம்முனைவர் இராஜ் குமார் 06:25, 1 ஏப்ரல் 2013 (UTC)
வணக்கம் முனைவர் ராஜ்குமார், நீங்கள் இக்கட்டுரையை எழுதி முடித்தவுடன் நிருவாகி ஒருவர் இரு கட்டுரைகளையும் இணைத்து விடுவார். பச்சைப் பஞ்சுருட்டான் என்ற தலைப்பையே முன்னிலைப்படுத்தலாமா?--Kanags \உரையாடுக 11:17, 31 மார்ச் 2013 (UTC)
வணக்கம் திரு கனகரத்தினம் அவர்களே. பச்சைப் பஞ்சுருட்டான் என்ற தலைப்பே சரியான தமிழ்ச்சொல் (BNHS ஆராய்ந்து வெளியிட்ட புத்தகத்திலும் அவ்வறே உள்ளது). பச்சை ஈப்பிடிப்பான் (green bee eater) என்பது ஆங்கிலப்பெயரின் கொச்சையான மொழிமாற்றமாக இருக்கலாம் (அருவி என்று வழங்காமல் நீர்வீழ்ச்சி என்று வழங்குவதைப்போல்). முனைவர் இராஜ் குமார் 06:25, 1 ஏப்ரல் 2013 (UTC)