பேச்சு:பசுக் கண்ணிமுடிச்சு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது cow hitch என்று ஆங்கிலத்தில் சொன்னாலும், இதனைக் கொக்கி முடிச்சு அல்லது திறவுக்கோல் முடிச்சு (திறவுக்கோல் முதலியன்வற்றை கட்டித் தொங்கவிடும் முடிச்சு) என்று கூறலாம். மாடுகளைக் கட்டும் முளையில் இடும் முடிச்சு இதுவா எனத் தெரியாது, இருக்கலாம். ஏனெனில் இது முளையைச் சுற்றி நகரக்கூடியது. ஆனால் குட்டை முளையாக இருந்தால் நழுவி வெளி வந்துவிடும். ஆமுளை (ஆ+ முளை) முடிச்சு அல்லது ஆவின் முடிச்சு என்றும் கூறலாம். இச்சொற்களை இங்கு கருதுவதற்காகவும், பதிவாகவும் இருக்கட்டுமே என்றெண்ணியே இடுகின்றேன். தலைப்பை மாற்ற வேண்டும் என்பது நோக்கம் அல்ல. இது ஒரு முக்கியமான எளிய முடிச்சு. --செல்வா 23:02, 29 ஏப்ரல் 2009 (UTC)

உண்மைதான் இந்த முக்கியமான எளிய முடிச்சுப்பற்றி எழுதத் தாமதமானதே இதன் தமிழ்ப் பெயரைக் கண்டு பிடிக்க முயன்றது தான். இதற்கு நிச்சயமாக நல்ல தமிழ்ப் பெயர் புழக்கத்தில் இருக்கும் என்பது எனது கருத்து. பசுக் கண்ணிமுடிச்சு என்பது எனக்கும் பிடிக்கவில்லை. இது பண்ணை விலங்குகளைக் கட்டுவதற்கும் பயன்படுவது என்று இணையதளம் ஒன்றில் பார்த்தபின்னர் தான் "பசுக் கண்ணிமுடிச்சு" எனத் தமிழ்ப்படுத்தினேன். ஆமுளைக் கண்ணிமுடிச்சு நன்றாகவே இருக்கிறது இப்போதைக்குப் பயன்படுத்தலாம். இதுபோலவே Overhand Knot என்னும் மிக எளிமையான முடிச்சுக்கும் ஒரு தமிழ்ப் பெயர் வேண்டும். மயூரநாதன் 01:49, 30 ஏப்ரல் 2009 (UTC)

இது மாடுகளை கட்டும் முடிச்சு மாதிரி தெரியவில்லை. ஒத்தக்கயிறு தான் கால்நடைகளை கட்ட பயன்படுத்துவோம், ஒரு பக்கம் கால்நடைகள் கட்டப்பட்டிறுக்கும், படத்தில் இருக்கும் முறைப்படி கால்நடைகளை கட்டி நான் பார்த்ததில்லை. --குறும்பன் 02:04, 30 ஏப்ரல் 2009 (UTC)

எனக்கும் அதே ஐயம்தான் ஏற்பட்டது. மறுமுனையில் கயிறு மாட்டின் கழுத்திலல்லவா இருக்கும்? அதை எப்படி உள்ளே நுழைப்பது? ஒருவேளை சில இடங்களில் கயிறு கண்ணியோடு இருக்கும், முதலில் முடிச்சுப்போட்டுவிட்டுப் பின்னர் மாட்டைக் கட்டுவார்களோ? -- சுந்தர் \பேச்சு 04:37, 30 ஏப்ரல் 2009 (UTC)