பேச்சு:நைதரசன் ஆக்சைடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நைதரசன் ஆக்சைடு என்ற பெயரை முதன்மைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். NOx என எழுதினாலும் நாக்சு என்றோ நொக்ஸ் என்றோ உரைப்பதில்லை.--Kanags \பேச்சு 02:43, 11 மே 2008 (UTC)[பதிலளி]

ஆம் செல்வராசு, இக்கட்டுரையின் தலைப்பை நைட்ரஜன் ஆக்ஸைடு என்றே வைக்கலாமே? நாக்சு என்பதை ஒரு வழி மாற்றாகக் கூட தரலாம். --செல்வா 02:48, 11 மே 2008 (UTC)[பதிலளி]
கனகு, செல்வா, அப்படியே செய்யலாம். மாற்றி விடுங்கள். ஆங்கில விக்கிப்பீடியாவிலும் அப்படித் தான் செய்திருக்கிறார்கள். (ஆனால், நாக்சு என்பது பொதுவில் உள்ள புழக்கம் தான்). --இரா. செல்வராசு 03:09, 11 மே 2008 (UTC)[பதிலளி]

நன்றி செல்வா மற்றும் செல்வராசு. மேலும், நைட்ரஜன் என்பதை ஈழத்தில் நைதரசன் என்றே தமிழ்ப்படுத்தியிருக்கிறார்கள். அப்படியே பல்லாண்டுகளாக எழுதி வந்துள்ளோம். இப்போதும் அப்படியே. ஏன் நைட்ரஜன் என எழுத வேண்டும், ஏன் நைதரசன் என எழுதக்கூடாது என செல்வா அவர்கள் தமது வலிமையான கருத்தை முன்வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.--Kanags \பேச்சு 06:23, 11 மே 2008 (UTC)[பதிலளி]

கனகு, ஐதரசன், நைதரசன் என்பவை எனக்கு உடன்பாடே. ஆனால் தமிழ்நாட்டில் ஹைட்ரஜன், (அல்லது ஹைடிரஜன்) நைட்ரஜன் என்று கூறுவது வழக்கமாக உள்ளது. ஆங்கில ஒலிப்புக்கு நெருக்கமாக இருக்கவேண்டும் என்னும் நினைப்பே இதற்குக் காரணம். இவ்விரண்டு சொற்கள் வழக்கில் இலங்கை வழக்கே நல்லது என்பது என் எண்ணம். ஆனால் ஒட்சிசன், இலத்திரனியல் என்பன இன்னும் விலகிய உணர்வு தருகின்றது. ஆக்ஸிஜன் என்று நான் எழுதுவது கூட ஆங்கில ஒலிப்பை ஒத்து இருக்கவேண்டும் என்று தமிழ்நாட்டுத் தமிழர்கள் நினைப்பதும், தமிழ் எழுத்தொலிகள் கெடாமல் இருக்கவேண்டும் என்பதாலும் ஆகும். ஆக்சிசன் என்று எழுதினால் awk-chi-san என்று ஒலித்தல் வேண்டும். அதில் தவறு இல்லை. ஆனால் ஆக்சிசன் என்று எழுதிவிட்டு ஆக்ஸிசன் என்று சொல்வதால் க் என்னும் வல்லின ஒற்றுக்குப் பின் வரும் வல்லின சி யின் ஒலிப்பு கெடுகின்றது. ஆக்குசிசன் என்றால் குழப்பம் இல்லை, ஆனால் இதன் திரிபு அதிகம் என தமிழ்நாட்டினர் நினைப்பர். வேதிப் பொருள்கள் போன்ற சிலவற்றில் ஆங்கிலச் சொற்களை ஏற்பதென்றால் ஒலிப்பு நெருக்கத்தையும் பின் பற்றலாம். ஆனால் நம் மொழிக்கு ஏற்றார்போல திரித்து எழுதுவதுதான் சிறந்த முறை என்பது என் கொள்கை (இலங்கையில் அதிகம் கிரந்தம் இல்லாமல் இப்படி திரித்து எழுதுவது நெடுங்காலமாக, முறையாக இருப்பதை அறிவேன்). எனவே நைதரசன் என்று எழுதக்கூடாது என்று நினைப்பவன் இல்லை. பொதுவான ஒரு முறை இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன், அது எதுவாக இருக்கவேண்டும் என்பதுதான் கேள்வி. --செல்வா 15:33, 11 மே 2008 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நைதரசன்_ஆக்சைடு&oldid=253881" இலிருந்து மீள்விக்கப்பட்டது