பேச்சு:நீலான்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீலான் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia
நீலான் என்ற இக்கட்டுரை, விக்கித் திட்டம் இந்தியத்துணைக்கண்டப் பாலூட்டிகள் என்னும் திட்டத்துள் அடங்கியதாகும்.

இத்திட்டக் கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடையவர், இத்திட்டத்தில் உறுப்பினராகலாம். இத்திட்டத்தில் பங்களிக்க விரும்புவர், இத்திட்டப் பக்கத்திற்குச் சென்றால், அங்கு நிறைவேற்ற வேண்டியப் பணிகளின், பட்டியலைக் காணலாம்.

நீலான் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

உட்பிரதேசத்துக்குரிய உயிரி[தொகு]

உட்பிரதேசத்துக்குரிய உயிரி = வட்டார உயிரி?--ரவி 06:47, 31 ஜூலை 2009 (UTC)

ரவி தற்போது இருக்கும் இந்த பெயரில் எனக்கு உடன்பாடில்லை. "பிரதேசம்" என்னும் சொல்லை நீக்கவேண்டுமென்று எண்ணினேன். மயூரன் endemic என்பதன் இலங்கை வழக்காக "உட்பிரதேசத்துக்குரிய அங்கி" என்று கூறினார் (விக்சனரி குழுமத்தில்) ஆதலால் அதையே வைத்துவிட்டேன். வட்டாரம் என்பதை விட இன்னும் கொஞ்சம் சிறப்பான சொல்லாக இருந்தால் நன்றாக (catchy) இருக்கும் என நினைக்கிறேன். :)--கார்த்திக் 09:28, 31 ஜூலை 2009 (UTC)
அகவலைய, அகணி, உள்ளக, என பலசொற்களால் குறிக்கலாம். பிரதேசம் என்பது பகுதி (நிலப்பகுதி). --செல்வா 00:40, 4 ஆகஸ்ட் 2009 (UTC)

சிறப்புக் கட்டுரை நியமனம்[தொகு]

தமிழ் விக்கியில் சிறப்புக் கட்டுரைகளை இனங்கண்டு ஆண்டுகள் ஆகின்றன :) கார்த்திக் எழுதி வரும் விலங்குகள் தொடரில் பலவும் முழுமை வாய்ந்த, தமிழ் அறிவுலகில் காணாத சிறந்த கட்டுரைகள். கார்த்திக்கு என் நன்றியும், பாராட்டுகளும்.--ரவி 06:49, 31 ஜூலை 2009 (UTC)

தமிழ்ப்பெயர்[தொகு]

இவ்விலங்கின் தமிழ்ப்பெயர் Manu-potu என்று இலைடக்கர் எழுதியுள்ளார்.[1] அவரது ஒலிபெயர்ப்பு விளங்கவில்லை. கார்த்தி, செல்வா விளக்கவும். -- சுந்தர் \பேச்சு 08:19, 22 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

தொடர்புடைய உரையாடல் பக்கம். இங்கு மரையா அல்லது மரை ஆன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. --சிவக்குமார் \பேச்சு 06:18, 17 மே 2012 (UTC)[பதிலளி]

மேற்கோள்கள்[தொகு]

  1. Richard Lydekker (1907). The Game animals of India, Burma, Malaya and Tibet: Being a now and Rev. Ed. of The Great and Small Game of India, Burma and Tibet. Rowland Ward. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நீலான்&oldid=1110079" இலிருந்து மீள்விக்கப்பட்டது