பேச்சு:நீர் மின் ஆற்றல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீர் மின் ஆற்றல் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

முக்கியமான தலைப்பின் நல்ல விரிவான கட்டுரை. படத்தேர்வுகளும், மேட்டூர் அணை தேவாலயப் படமும் நன்று. நன்றி தானியேல்.--சிவக்குமார் \பேச்சு 15:11, 1 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

நன்றி சிவக்குமார். உங்கள் பாராட்டு எனக்கு மிகுந்த ஊக்கத்தை அளிக்கிறது. மேட்டூர் ஆலய படத்தை அமேரிக்காவில் வாழும் ஒரு வெள்ளையரிடம் இருந்து அனுமதியுடன் பெற்றேன். :) --Daniel pandian 12:44, 15 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

பாராட்டு + பிற சில கருத்துகள்[தொகு]

தானியேல் பாண்டியன், மிக அருமையாக எழுதியுள்ளீர்கள்! renewable என்பதன் சரியான, ஈடான தமிழ்ச்சொல் புதுப்பிக்கத்தக்க என்பதுதான், ஆனால் உண்மையான பொருள் வற்றாது ஆற்றல் வந்து கொண்டிருக்கும் ஆற்றல் வாய் (energy source). புதுப்புனல் என்பது போல புதுவெள்ளம் என்பது போல புதுறும் ஆற்றல்வாய் அல்லது வற்றா ஆற்றல்வாய் எனலாம் என்று நினைக்கிறேன். அதாவது ஆற்றல் என்பதைவிட ஆற்றல்வாய் (energy source) என்றால் இன்னும் பொருத்தமாக இருக்கும். புதுறும் என்னும் சொல் முதலில் சற்று கடினமாகத் தோன்றலாம், ஆனால் புது என்னும் எளிய சொல் இருப்பதால், பழகிவிடும் என்று நினைக்கிறேன். சுருக்கமாகவும் இருக்கும். எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன். அதே போல wind power என்பதற்கு காற்று மின்னாற்றல் என்றே கூறலாம், அல்லது வளிவீச்சு மின்னாற்றல் எனலாம். wind power என்பதை காற்றுவலு என்று கூறுவது முற்றிலும் சரியே, ஆனால் மின்னாற்றல் என்னும் சொல்லுடன் சேர்த்துச் சொல்லும் பொழுது வேறுவிதமாகச் சொன்னால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். கால் என்றால் காற்று என்று பொருள் (நீர், எரி, கால்..). கால் என்பதுதான் காற்று என்று ஆயிற்று. கல் --> கற்றல்; தோல் --> தோற்றல்; வெல் -> வெற்றி, போல ல்->ற் ஆகும். ஆனால் கால் என்னும் சொல் காற்று என்னும் பொருள் தருவது இலக்கிய வழக்காக இருப்பதாகப் பலரும் உணர்வர். --செல்வா 16:24, 13 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

விளக்கத்திற்கு நன்றி செல்வா. காற்றினைத் தெலுங்கில் காலி என்று கூறுவதும் இங்கு ஒப்புநோக்கத்தக்கது.--சிவக்குமார் \பேச்சு 03:32, 15 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]


உங்கள் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. புதுப்பிக்கதக்க ஆற்றல் என்பதை விட நீங்கள் கூறும் வற்றா ஆற்றல்வாய் பொருத்தமாக இருக்கும். அவ்வாறே மாற்றிவிடலாம் --Daniel pandian 12:50, 15 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நீர்_மின்_ஆற்றல்&oldid=825330" இலிருந்து மீள்விக்கப்பட்டது