பேச்சு:நீரகக்கரிமம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையில் backbone என்பதற்கு இணையாக அடிப்படைச் சட்டம் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளேன். இதற்குப் பொருத்தமான சொற்களைப் பரிந்துரைக்கவும். --Sivakumar \பேச்சு 17:13, 22 பெப்ரவரி 2007 (UTC)

அருமையான சொல்லாட்சி. சிவகுமார், என் பாராட்டுகள்! அடிச்சட்டமாக, பிணைச்சட்டமாக என வேண்டுமானால் சொல்லலாம். --செல்வா 17:39, 22 பெப்ரவரி 2007 (UTC)

பிணைச்சட்டம் என்பது கூடுதல் பொருத்தமாகத் தெரிகிறது. பிணைத்தல் (bonding) என்ற அறிவியல் நோக்கும் இதில் தெரிகிறது அல்லவா?--Ravidreams 17:58, 22 பெப்ரவரி 2007 (UTC)

கட்டுரையில் உள்ள தமிழ்க் கலைச்சொல் பயன்பாடு மிக அருமை. ஆங்கில வழியத்தில் படித்து, இதற்குத் தொடர்பான துறையில் பணியாற்றிய எனக்குக் கூட தமிழில் படிக்கும் போது பொட்டில் அடித்தாற் போல் பொருள் புரிகிறது. --இரவி 15:35, 19 பெப்ரவரி 2012 (UTC)

நீரகக்கரிமம்[தொகு]

Hydrocarbon என்ற சொல்லுக்கு நீரகக்கரிமம் என்ற சொல்லை பரிந்துரைக்கிறேன். --இராச்குமார் (பேச்சு) 14:27, 10 ஏப்ரல் 2013 (UTC)

இக்கருத்துக்கு மறுப்பேதுமில்லையென்றால் நீரகக்கரிமம் என்றப் பக்கத்திற்கு வழிமாற்று தரலாமா? --இராஜ்குமார் (பேச்சு) 18:58, 12 ஏப்ரல் 2013 (UTC)
👍 விருப்பம்--Kanags \உரையாடுக 22:18, 12 ஏப்ரல் 2013 (UTC)
👍 விருப்பம், வழிமாற்று இருத்தல் நலம். பொதுப் பெயராக இதைக் கொள்ளலாம் என்றாலூம், கூட்டுப் பெயராக வரும்போது நைட்ரிக் நீரகக் கரிமம் என்றால் புரியக் கடினமாக இருக்குமோ? தங்கள் பரிந்துரை சிறப்பு -தமிழ்க்குரிசில் (பேச்சு) 02:45, 13 ஏப்ரல் 2013 (UTC)

நீரகக்கரிமம் - பொருள் சரியாக வரவில்லை (அல்லது எனக்கு விளங்கவில்லை). நீர் + அகம் + கரிமம் = நீரினுள் உள்ள கரிமம் என பொருள் வருகிறது. இது தவறல்லவா? Hydro என்னும் ஆங்கிலச்சொல் பொதுவாக நீரைக் குறித்தாலும் வேதியியலில் ஹைட்ரஜனைக் குறிக்கும். தமிழ் விக்கியில் ஹைட்ரஜனை நீரியம் என குறிப்பதால், நீரியம் (Hydrogen ) மற்றும் கரிமம் (Carbon) சேர்ந்து உருவாக்கும் வேதிப்பொருட்களை நீரியக்கரிமம் (Hydrocarbon) என்று வேண்டுமானால் விளிக்கலாம்.
அதன்முன், ஹைட்ரஜனை நீரியம் எனக் குறிப்பதற்கான காரணத்தையும் விளக்க வேண்டுகிறேன். காரணத்தை எங்கும் காண முடியவில்லை. ஹைட்ரஜனை நீரியம் என குறிப்பதால் பல இடங்களில் பொருளை விளங்கிக்கொள்வதில் குழப்பம் ஏற்படுகிறாது. எ.கா. Hydrotreater, Hydrocracker போன்றவற்றை நீரிய சிகிச்சை, நீரிய உடைப்பு எனக் குறிக்கும் போது, ஹைட்ரஜன் சிகிச்சை, ஹைட்ரஜன் தொடர் உடைப்பு என விளங்கிக்கொள்ளாமல் நீரைக்கொண்டு செய்யும் சிகிச்சை, நீரை உடைத்தல் என பொருள்கொள்ள வாய்ப்புள்ளது (நான் முதல்முறை படிக்கும் போது இவ்வாறு குழப்பமான பொருளையே யோசித்தேன்). மேலும், தமிழக அரசு பாடபுத்தகங்களில் Hydrogenஐ ஹைட்ரஜன் எனவும், Hydrocarbonஐ ஹைட்ரோகார்பன் எனவுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புத்தங்களை அடிப்படையாகக் கொண்டு படிக்கும் அனைவருக்குமே தமிழ் விக்கியின் பெயர்கள் அந்நியமாகவே படும். பொதுவான, அனைவருக்கும் விளங்கக் கூடிய பெயர்களை உபயோகித்தால் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து. இப்போது பயன்படுத்தப்பட்டுள்ள பெயர்களை அடைப்புக்குறியில் கொடுத்துவிட்டு, அனைவரும் கற்கும் பெயர்களை முதன்மைப் பெயர்களாக பயன்படுத்தினால் விளங்கிக் கொள்ள எளிமையாக இருக்கும்; தமிழ் விக்கியும் அந்நியப்படாமல் இருக்கும் என்பது எனது கருத்து. --சத்தியராஜ் (பேச்சு) 13:18, 1 மார்ச் 2016 (UTC)

@செல்வா:.--Kanags \உரையாடுக 13:20, 1 மார்ச் 2016 (UTC)
நீரகக்கரிமம், நீரியக்கரிமம் ஆகிய இரண்டும் சரியானவையே. நீர்த்தொடர்புடையது நீரக, நீரிய. ஐதரசன் என்பதைப் சில ஐரோப்பிய மொழிகள் நீர்ப்பொருள் என்பது போல கலைச்சொல் கொண்டிருக்கின்றன. எ.கா. இடாய்ச்சு மொழியில் Wasserstoff, நெதர்லாந்திய மொழியில் Waterstof. ஆகவே நீரகம், நீரியம் என்பது ஏற்கத்தக்கதே. சத்தியராசு சொல்வதுபோல முதலில் குழப்பம் வரநேரிடலாம், ஆனால் அவையெல்லா மொழிக்கும் உண்டானதுதான் (//Hydrotreater, Hydrocracker போன்றவற்றை நீரிய சிகிச்சை, நீரிய உடைப்பு எனக் குறிக்கும் போது, ஹைட்ரஜன் சிகிச்சை, ஹைட்ரஜன் தொடர் உடைப்பு என விளங்கிக்கொள்ளாமல் நீரைக்கொண்டு செய்யும் சிகிச்சை, நீரை உடைத்தல் என பொருள்கொள்ள வாய்ப்புள்ளது //). நாம் ஆங்கிலத்திலே hydrology, hydrological, hydrometer முதலான பல சொற்களில் வரும் hydro--என்பதைக்கொண்டும் குழம்பலாம். Hydrocracker என்பதை நீரியக்கரிமப் பிளப்பு/உடைப்பு/பிரிப்பு எனச்சொல்லலாம். Hydrotreater என்பதை நீரியக்கரிமத்தில் கந்தகநீக்கம் எனக்குறிக்கலாம். பள்ளிநூல்களில் சீரற்ற கைச்சொற்களைப் பயன்படுத்துகின்றார்கள். பலநாடுகளிலும் பலவாறு பயன்படுத்துகின்றார்கள். பிறைக்குறிகளுக்குள் கொடுக்கவேண்டியிருக்கலாம். நாம் ஐதரசன் எனக்கூறுவதிலும் தவறில்லை. //தமிழ் விக்கியின் பெயர்கள் அந்நியமாகவே படும்// என்பதும் கருதவேண்டிய ஒன்று. மேலோட்ட,மாகப் பார்க்கும்பொழுது முதலில் சற்று அந்நியமாகத்தோன்றினும், ஒழுக்கமான சீரான முறையில் எழுதிவந்தால், அதன் தரத்தாலும் சீமையாலும் கருத்துகள் செம்மையாக உள்வாங்கப்படும், நிலைத்தும் நிற்கும். --செல்வா (பேச்சு) 13:56, 5 மார்ச் 2016 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நீரகக்கரிமம்&oldid=2519794" இலிருந்து மீள்விக்கப்பட்டது