பேச்சு:நிலைமாற்றி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நற்கீரன், நிலைமாற்றி என்பது transformer என்பதைக் குறிக்கும். Switch என்பதை தொடுப்பி, தொடுக்கி என்று கூறலாம். நிலைமாற்றி என்பது சரியாகப் படவில்லை. --செல்வா 19:53, 15 மார்ச் 2008 (UTC)

இந்த சொல் பயன்பாட்டில் இருப்பதாகத்தான் தெரிகிறது. எ.கா. http://www.tcwords.com/. மேலும் transformer என்பதற்கு மின்மாற்றி என்று ஒரு கலைச்சொல் அகராதியில் தரப்பட்டிந்தது. (tamilvu.org என்று நினைக்கிறே, தற்போது அது இயங்கவில்லை.)--Natkeeran 20:03, 15 மார்ச் 2008 (UTC)

மின்மாற்றி என்பது transformer என்பது சரிதான், ஆனால் நிலைமாற்றி என்பது மின்னழுத்த நிலை மாற்றி என்று பொருள்தரும். வெப்பம், வெப்பநிலை போல, நிலை என்றால் பொதுப்பட மின்னுலகில் "மின்நிலை" --> மின்னழுத்தநிலை என்று பொருள் வரும். switch (சுவிச்சு) என்பதற்கு யாரோ நேரடியாக மொழிபெயர்த்துள்ளார்கள். நிலைமாற்றி என்பது நிறைவு தரவில்லை.நீங்கள் மேலே கொடுத்த வலைத்தலத்தில் உள்ளதைப் பார்க்க வேறு எழுத்துரு தேவைப்படுகின்றது. அங்கிருந்து வெட்டி எடுத்து இங்கு இட்டால் என்ன என்று புரிந்துகொள்லலாம்.--செல்வா 20:36, 15 மார்ச் 2008 (UTC)--செல்வா 21:08, 15 மார்ச் 2008 (UTC)
மின் மாற்றி, நிலைமாற்றி என்பன transformer ஐக் குறிக்கவே பயன்படுகின்றன. Switch என்பதை ஆளி என்று இலங்கையில் வழங்குகிறோம்.--சஞ்சீவி சிவகுமார் 23:22, 6 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நிலைமாற்றி&oldid=837977" இலிருந்து மீள்விக்கப்பட்டது