பேச்சு:நிலைக்கருவிலி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தக் கட்டுரை ஏற்கனவே புரோகாரியோட்டு என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. புரோகாரியோட்டு என்பதற்கான தமிழ்ப் பெயர் நிலைக்கருவிலி என எழுதப்படலாம் என ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதால், அந்த தலைப்பில் இரு கட்டுரைகளையும் இணைத்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்த இணைப்பை செய்யக் கூடிய எவராவது செய்துவிடுங்கள்.--கலை 14:31, 26 ஆகஸ்ட் 2010 (UTC)

இரு கட்டுரைகளும் இணைக்கப்பட்டன.--மணியன் 16:15, 26 ஆகஸ்ட் 2010 (UTC)

நிலைக்கருவிலி பெயர் தொடர்பான உரையாடல்[தொகு]

பயனர் சிங்கமுகனின் பேச்சுப்பக்கத்தில் இருந்து[தொகு]

மேலும் prokaryote மற்றும் eukaryote என்பது புதுமையும் ஒற்றுமைக்குமான வார்த்தை. இங்கே கேர்யான் என்னும் வார்த்தை கரு என்னும் அர்த்ததைக்குறிக்கும் சொல். இங்கே நான் சொல்ல வருவது இவைகளுக்குள்ள ஒற்றுமையே என்னை அவ்வாறு செய்யத்தூண்டியது. அதே ஒற்றுமையைத் தமிழில் எதிர்ப்பார்க்கிறேன். ஆகையால் நிலைக்கருவிலி மற்றும் மெய்க்கருவிலி என உருவம் கொடுத்தேன். ஆனால் இங்கே தமிழிலும் மொழிமாற்றத்திலும் ஒரு பிழையுள்ளது. நிலை என்பது மெய் என்றப் பொருளைக்குறிக்கும். இது எவ்வாறு சாத்தியமாகும். இயற்கையின் படைப்பில் மெய்யெது. நாம் காணக்கூடிய அனைத்து படைப்புகளுமே மெய்.

  • கவனிக்க:- நுண்ணுழையாட்கள் மற்றும் ஆர்கி வகை இரண்டும் தான் நிலைக்கருவிலிக்குள் வரும். இங்கே இவ்வுயிர்களுக்கு இக்கரு மெய். நாம் எவ்வாறு நிலைக்கருவிலி என்றுரைக்கலாம். அதேப்போல் நீங்களே மேலே கூறியிருக்கிறீர்கள்:- கருச்சவ்வு பெற்றிருப்பதால் மெய்க்கருவிலி என அழைக்கிறோமென்று. கரு என்பது nucleus எனப் பொருளாகும். இங்கு எங்கே கருச்சவ்வு சொல்லப்பட்டிருக்கிறது. நிலைக்கருவிலி என்றால் நிலையான கருவில்லை என்று பொருள் படும். அப்போது அவை மாற்றம் பெற்றுக்கொண்டிருக்கிறதே என்று பொருள் கொள்ளவேண்டும் (pleomorphic nucleus) என்ற புதிய சொல்லின் பொருளாக்கம் இவை. இங்கே சவ்வை முன்வைப்பது தான் தலையாயப் பிறிவிற்கே காரணம். அதை உணர்த்தாமல் நாம் கருவை இருக்கு இல்லை என்பது போன்று கூறினால் எவ்வாறு சாத்தியமாகும்.
1. நிலைக்கருசவ்விலி:மெய்க்கருசவ்வுயிரி (prokaryote:eukaryote)
2. நிலைக்கருசவ்விலி:நிலைக்கருசவ்வுயிரி
3. மெய்க்கருசவ்விலி:மெய்க்கருசவ்வுயிரி

ஆகிய பெயர்கள் சரியாக வருமென்று பரிந்துரைக்கிறேன்.

இவ்விக்கிப்பீடியாவின் பல அம்சம்கள் எனக்குத் தெறியாது. அதான் என் தகவல் தொடர்புகளில் கொலருபடிகள். எனது கட்டுரையில் மேலும் இத்தவறு நடவாமல் பார்த்துக்கொள்கிறேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. மேலும் நீங்கள் சொன்ன குழுவில் இன்றே இணைவதற்கான ஆயத்த ஏற்பாடுகளை செய்கிறேன். நன்றிகளுடன் - --சிங்கமுகன் 13:53, 3 மார்ச் 2011 (UTC)

முதலில் கலங்களில் காணப்படும் கரு என்பதன் வரைவிலக்கணத்தைப் பார்த்தோமானால், மென்சவ்வினால் வரையறைப்படுத்தப்பட்ட, பாரம்பரிய மூலக்கூறுகளை உள்ளடக்கிய ஒரு அணு உள்ளமைப்பு. In cell biology, the nucleus (pl. nuclei; from Latin nucleus or nuculeus, meaning kernel) is a membrane-enclosed organelle found in eukaryotic cells. The prokaryotes (pronounced /proʊˈkæri.oʊts/ or /proʊˈkæriəts/) are a group of organisms that lack a cell nucleus (= karyon), or any other membrane-bound organelles. எனவேதான் Prokaryote க்களில் 'கரு' என்ற அமைப்பு எதுவும் வரையறை செய்யப்பட்டிருக்கவில்லை என்பதால், கருவற்றவை எனக் கருதி நிலைக்கருவிலி எனக் கூறுகின்றோம். Eukaryote க்கள் கருவைக் கொண்டிருப்பதனால் மெய்க்கருவுயிரி என அழைக்கின்றோம்.--கலை 14:36, 3 மார்ச் 2011 (UTC)
கரு என்பது மையம் அவை நிலைக்கருவிலிகளுக்குள்ளும் இருக்கிறது - மெய்க்கருவுயிரிகளுக்கும் இருக்கிறது. பகுத்தலின் முக்கிய நோக்கம் - கருச்சவ்வு என்பதாகும். ஆராய்க.

மேலும், ஆங்கிலத்தில் ஒரு வகையில் பிழை இன்னொரு வகையில் நியாயம்.

  • Prokaryote - first formed nucleus - என்பதே பொருள்
  • Eukaryote - true nucleus - என்பதே பொருள்:- உணர்க.

pro - first; before என்கிற பொருள்; eu - true என்ற பொருள். விளக்கம் ஆங்கில் விக்கிப்பீடியாவிலேயே உள்ளது. இவர்கள் கரு இல்லை என்ற வாதத்தையே முன்வைக்கவில்லை. ஆகையால், அவர்கள் தப்பித்துக்கொண்டார்கள். நாம் முன்தோன்றிகள். எதிலும் ஒரு முன்னுதாரணம். ஆகையால், சவ்வு என்பதை உள்ளடக்கி உருவாக்குவதே சரி. மேலும் ஐயங்களுக்கு தயங்காமல் கேள்வி எழுப்புங்கள். என் மொழியைக் கற்றவர்கள் அறியாதவர்களாகவே இருக்கக்கூடாது. மேலே நான் குறிப்பிட்டுள்ளதில் 2 மற்றும் 3 வது பொருள் வார்த்தை ஒற்றுமை பொறுள் வேற்றுமையை உணர்த்தும். ஆகையால், அது இரண்டில் ஏதாவது ஒன்றை உறுதிப்படுத்தி அனைவரையும் கலந்து ஆலோசித்து தீர்மாணம் இயற்றுவோம். இனி மாறுதலுக்கே வழியில்லை. நன்றிகளுடன். --சிங்கமுகன் 17:15, 3 மார்ச் 2011 (UTC)

//The prokaryotes (pronounced /proʊˈkæri.oʊts/ or /proʊˈkæriəts/) are a group of organisms that 'lack' a cell nucleus (= karyon), or any other membrane-bound organelles.// இது ஆங்கில விக்கிப்பீடியாவில்தான் இருந்தது. அத்துடன் கருவிற்குரிய வரைவிலக்கணமாக //In cell biology, the nucleus (pl. nuclei; from Latin nucleus or nuculeus, meaning kernel) is a membrane-enclosed organelle found in eukaryotic cells// என்பதும் ஆங்கில விக்கிப்பீடியாவில்தான் இருந்தது. அதைத்தான் நானும் குறிப்பிட்டேன். இருப்பினும் ஏனையோரும் சேர்ந்து எடுக்கும் முடிவை ஏற்பதில் மறுப்பில்லை. நன்றி.

--கலை 23:14, 3 மார்ச் 2011 (UTC)

பயனர் செந்தியின் கருத்துக்கள்[தொகு]

  • prokaryotes: are a group of organisms that lack a cell nucleus (= karyon), or any other membrane-bound organelles. en:wikipedia
  • Prokaryotes
   Their genetic material is not enclosed in a membrane ex. Bacterias

General Biology : Paul Doerder, Ph.D. and Ralph Gibson, Ph.D. - Cleveland State University.

  • (Biology a functional approach, Grove and Knewell )


// இங்கே தமிழிலும் மொழிமாற்றத்திலும் ஒரு பிழையுள்ளது. நிலை என்பது மெய் என்றப் பொருளைக்குறிக்கும். இது எவ்வாறு சாத்தியமாகும். இயற்கையின் படைப்பில் மெய்யெது. நாம் காணக்கூடிய அனைத்து படைப்புகளுமே மெய்.// தமிழில் ஒரு சொல்லுக்குப் பல பொருள் இருப்பதை வைத்து நாம் ஆராயத் தொடங்கினால் ஒவ்வொரு சொற்களுக்கும் வெவ்வேறு பொருள் வரும் என்பதை நோக்கலாம். எனினும் நிலை என்பதற்கு மெய் என்று எந்த அகரமுதலியில் கூறப்பட்டுள்ளது எனக்கூறமுடியுமா? இவ்வார்தைகளை யான் பரிந்துரைத்தவன் எனும் வகையில் அவற்றை விளக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

"நிலை: தன்மை ; இடம்; உறுதி; தூண்; பசு ஒரு தடவை கழிக்கும் சாணி." (கழகத்தமிழ் அகராதியில் இருந்து)

நிலைக்கருவிலி : உறுதியான கரு இல்லாதது; தாங்கள் கூறிய "மெய்" என்பதுடன் பொருத்தினாலும் மெய்யான கரு அற்றது எனும் பொருளில் வருகின்றது, இங்கே படைப்பைப் பற்றி ஆராயத்தேவையில்லை எனக் கருதுகின்றேன் (ஆராய்வது ஒரு உயிருக்குள் இருக்கும் புன்னங்கங்களைப் பற்றியது எனும்படியால்). நாம் ஆங்கிலத்திலோ அல்லது வேற்றுமொழியிலோ இருப்பதை அப்படியே மொழிபெயர்க்கவேண்டும் என்பதில்லை என்பதும் எனது தனிப்பட்ட கருத்து. அவற்றின் பொருள் உணர்ந்து, ஒரு நெருங்கிய தொடர்பு உண்டாக்கி, படிப்போர் இலகுவில் ஒரு சொல்லிலேயே அர்த்தம் தெரிந்து கொள்ளக்கூடியவாறு ஏற்படுத்தல் சாலச்சிறந்தது.

// நுண்ணுழையாட்கள் மற்றும் ஆர்கி வகை இரண்டும் தான் நிலைக்கருவிலிக்குள் வரும். இங்கே இவ்வுயிர்களுக்கு இக்கரு மெய். நாம் எவ்வாறு நிலைக்கருவிலி என்றுரைக்கலாம். //

ஆரம்ப காலத்தில் (நிலைக்கருவிலிகள்) மொனேரா இராச்சியதுக்குள் (kingdom monera) பக்டீரியாவும் ஆர்க்கீயாவும் அடக்கப்பட்டன, பின்னர் நிகழ்ந்த வேறுபாடுகளால் இவை பிரிக்கப்பட்டுள்ளன. இன்று 2004க்குப் பின்னர் இவற்றின் பாகுபாட்டில் பக்டீரியாவும் ஆர்க்கீயாவும் பாக்டீரியா என்னும் தனிக்குழுமத்தில் பேராசிரியர் கவலியர் சிமித்து என்பவரால் அடக்கப் பரிந்துரைக்கப்பட்டது.

நிலைக்கருவிலிக்குக் கருவே இல்லை, (//இங்கே இவ்வுயிர்களுக்கு இக்கரு மெய்//) பின்னர் எப்படித்தாங்கள் கரு உள்ளதென்று கூறுவீர்கள்? அவற்றில் "கரு மாதிரியான" | nucleiod region பகுதி உள்ளது. எனவேதான் அதனை ஒரு நிலையான கரு இல்லாதது (நிலைக்கருவிலி) எனப் பரிந்துரைத்தேன்.

Prokaryotes are the single-celled organisms, such as bacteria, and are roughly one micrometer in diameter. Unlike Eukoryotes, prokaryotes do not have a nucleus that houses its genetic material. Rather, the genetic material of a prokaryote cell consists of a large DNA molecule compacted in an area of cytoplasm called the nucleiod region.

எனினும் தங்களின் விளக்கமும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே, ஆனால் மென்சவ்வு உண்டு இல்லை எனப்பார்த்துப் பெயரிடுவதானால் இங்கு கருவை மட்டும் குறிப்பது சரியில்லையல்லவா? ஏனெனில் நிலைக்கருவிலிகள் மென்சவ்வு அற்ற புன்னங்கங்களை மட்டுமே கொண்டிருப்பவை. எனவே எனது கருதுகோளின்படி பயனர் சிங்கமுகன் பரிந்துரைத்த சொற்களையும் உபயோகிக்கலாம் என்பதே ஆனால் அதற்கு அவர் கூறிய விளக்கம் என்னைப் பொறுத்தவரையில் முழுமை இல்லை என்றே கருதுகின்றேன்.

   1. நிலைக்கருசவ்விலி:மெய்க்கருசவ்வுயிரி (prokaryote:eukaryote)
   2. நிலைக்கருசவ்விலி:நிலைக்கருசவ்வுயிரி
   3. மெய்க்கருசவ்விலி:மெய்க்கருசவ்வுயிரி 

மேலும் மாற்றிய பயனர்களின் கருத்துகளுக்குப் பின்னர் பெயர் மாற்றீடு தேவையா என்பது பற்றி ஆலோசிக்கலாம்.

பயனர் கலையின் கருத்து[தொகு]

கரு என்பது கருமென்சவ்வால் சூழப்பட்ட ஒரு புன்னங்கம் என்ற வரைவிலக்கணத்துக்கு உட்படுகின்றமையால், Prokaryotes இல் கருவே இல்லை என்பதாலும், Eukaryotes இல் கரு என்ற அமைப்பு இருப்பதாலும், ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கும் நிலைக்கருவிலி, மெய்க்கருவுயிரி என்ற பெயர்களையே தொடர்ந்து வழங்குவது நல்லது என்பது எனது கருத்து.

மேலதிக விளக்கம் அனைவராலும் அறியப்படவேண்டியது:[தொகு]

நிலைக்கருவிலிகள் பற்றிய தவியில் உள்ள கட்டுரைகள் தொகுப்போர் இவற்றையும் கவனத்தில் கொள்க: (http://en.wikipedia.org/wiki/Monera#Summary) (http://en.wikipedia.org/wiki/Kingdom_(biology)) (http://en.wikipedia.org/wiki/Five-kingdom_system)

நன்றி, --சி. செந்தி 17:51, 4 மார்ச் 2011 (UTC)

நிலைக்கருச்சவ்விலி:நிலைக்கருச்சவ்வுயிரி[தொகு]

முதலில் விவாதங்கள் என்று வந்த பிறகு கருத்துக்கள் மற்றும் செயல்களில் பின்வாங்குவது முறையும் இல்லை அறிவியலாளர்களுக்கு அழகுமில்லை. நாம் படித்தவற்றை மற்றவர்களுக்கு உணறும் வகையில் விளக்கத் தெறியாவதின் படித்ததே வீண் என்று நம்புகிறவன். இப்போது இல்லையெனில் எப்போது தெளிவுறுவது. இது மதிப்பிற்குரிய கலை அவர்களுக்கு.

நிலை என்ற சொல் - Standard என்ற ஆங்கிலப்பொருளைக்குறிக்கும். இதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன் மரு. செந்தில் அவர்களே.

மேலும், நுண்ணுழையாட்களுக்கு கரு இல்லை என்பது அப்பட்டமான தவறு. அவைகளுக்கு கரு உள்ளது. கரு என்பது மையம்; மூலம் இப்பொருள்களையேக் குறிக்கும். தெளிவாக பொருள் கொள்ளுங்கள் ஆங்கில விக்கிப்பீடியாவிலிருந்து இருவரும் மேற்கோள் காட்டியது முதல் வரியில் கொடுக்கப்பட்டுள்ள சொற்களை. அது Prokaryote - என்னும் சொல்லின் பதத்தையும் உணர்த்தவில்லை, அவை சார்ந்த உயிர்களின் பண்புகளையும் உணர்த்தவில்லை. அவ்வாங்கில விக்கிப்பீடியாவில் முதல் பத்தியில் கடைசி வரிகளில் (The word prokaryote comes from the Greek πρό- (pro-) "before" + καρυόν (karyon) "nut or kernel"). உங்களுக்காக நான் நகலெடுத்து இட்டுள்ளேன். நான் மறுபடியும் சொல்கிறேன் எனது வாதத்தில் தவறில்லை.

இங்கே, Prokaryote denotes the first formed nucleus. நீங்கள் உணர வேண்டும், இங்கு முதல் வரிகளில் The prokaryote, a group of organisms that lack cell nucleus. You have to understand the mistakes there that they are lacking defined and matured nucleus not nucleus at all. இங்கு Nucleoid என்ற தலைப்பில் உள்ள முதல் வரியை எடுத்துப்பாருங்கள் தொகுத்தவர் அழகாகவும் தெளிவாகவும் தொகுத்துள்ளார். அங்கே, The nucleoid (meaning nucleus-like) is an irregularly-shaped region within the cell of prokaryotes which has nuclear material without a nuclear membrane and where the genetic material is localized. கரு என்பது மையம். கவனிக்க:- இங்கே கரு அல்லது மையம் என உணர்த்தக் கூடியது ”The word genetic material" தமிழில் தெளிவானப் பெயரைக்கையாண்டிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள். இங்கு Nuclear Membrane இல்லையென்ற காரணத்தால் நாம் கரு இல்லையென்பது ஒத்துக்கொள்ள இயலாது அல்ல முடியாது.

ஆங்கிலத்தில் பெயர் எப்படி இட்டிருப்பார்கள் என வர்ணனை: (நகைச்சுவைக்காக மட்டுமே). அவர்கள் இரண்டிற்குள்ளும் ஒரு ஒற்றுமையை எதிர்பார்த்தனர். அவர்களால் வேற்றுமை என்னும் சொல்லை உணர்த்த membrane என்னும் வார்த்தையை நுழைத்தால் அது நீண்டுவிடுமே என்ற அச்சம். ஆகையால், இம்முழுமை அல்லது சவ்வினால் மூடப்பட்ட புன்னகங்கல்

The word nucleus - kernel which means the seed in general sense the central part of anything. Here, the cental part is the genetic material DNA, so it has nucleus. This is the problem with the english Prokaryotes that's the author of article mistakenly wrote as the above you people have mentioned.

சவ்வே மையப்படுத்த வேண்டும் - பெயரே விளக்கமாக அமையும். தெளிவாகவும் உரைக்கும் பிரிவின் சூட்சமத்தை. இது ஆங்கிலத்தைத் தழுவியல்ல தெளிவான, ஆழ் அர்த்தங்களுடன், அனைவரும் பெயரை உரைத்தாலே உணரும்படியும் அமையப்பெற்றச்சொல். உணர்க. இதற்கு மேலும் விளக்கம் தேவையில்லை. ஐயம் இருப்பின் அறிவியுங்கள் - விளக்கவும் விவரிக்கவும் நான் தயாராக இருக்கிறேன்.

மேலும், கலைச்சொல்லாக்கத்தில் சொல்லின் ஆழ்பொருளையும், அது இட்டதிற்கான காலச்சூழ்நிலையையும், உணர்ந்து, Etymology + Meaning, கொடுக்கும் நிரந்தரம் மற்றும் நிலையான வார்த்தையை. அதைத்தான் நான் செய்துக்கொண்டிருக்கிறேன். உங்களுக்கு உதவுமே என்று இவ்வலைத்தளங்களை இங்கு இடுகிறேன்.

மேலும், எனது வாதத்தில் உள்ள பின்னூட்டங்களையும் பெயர்க்காரணத்தில் பிழையும் முன்வையுங்கள் - நிறந்தரத்தீர்வுக்கான).

நன்றிகளுடன் --சிங்கமுகன் 05:37, 5 மார்ச் 2011 (UTC)

மறுமொழி[தொகு]

சிங்கமுகன், அருள் கூர்ந்து விக்கிப்பீடியாவின் கொள்கைகளையும் விக்கிப்பீடியாவில் நாம் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பது பற்றியும் நினைவில் நிறுத்திக்கொள்வீர்கள் என நம்புகின்றேன். மேலும்...எனது பெயரை செந்தி (அல்லது சி.செந்தி) என்று அழைத்தால் மட்டும் போதுமானது என்பதைத் தயவு செய்து ஏற்றுக்கொள்ளுங்கள். மேலும் இது ஒரு கலந்துரையாடலே. இங்கு தங்களால் தெரிவிக்கப்படுவதை ஆங்கிலத்தில் தெரிவிப்பதைவிட தமிழில் தெரிவித்தால் மிக்க நன்று.

  • //நிலை என்ற சொல் - Standard என்ற ஆங்கிலப்பொருளைக்குறிக்கும்.//

இதிலிருந்து தாங்கள் ஆங்கிலக்கருத்தையே எடுத்துக்கொள்வது புலனாகின்றது. நிலை என்பதற்கு கழகத் தமிழ் அகராதியில் கொடுக்கப்பட்ட விளக்கங்கள் ஏற்கனவே எழுதியுள்ளேன்.

  • //(The word prokaryote comes from the Greek πρό- (pro-) "before" + καρυόν (karyon) "nut or kernel"). உங்களுக்காக நான் நகலெடுத்து இட்டுள்ளேன். நான் மறுபடியும் சொல்கிறேன் எனது வாதத்தில் தவறில்லை.//

தங்களது கூற்றில் தவறில்லை எனத் தாங்களே பரிந்துரைத்தல் சரியல்ல. மீண்டும் தாங்கள் கொடுத்த ஆங்கில விளக்கத்தைப் பாருங்கள் அதனை “before – முன்பு + karyon – கரு “ என்று வருவதனைப் பாருங்கள். கரு என்று ஒரு புன்னங்கம் உருவாகுவதற்கு முன்னோடியான அமைப்பு என்பதே அதன் அர்த்தம் ஆகும்.

(நீங்கள் யாவற்றையும் ஆங்கில விக்கிப்பீடியாவில் பார்ப்பதனால், அங்கிருந்தே எடுத்துத் தருகின்றேன்.) http://en.wikipedia.org/wiki/Prokaryote#Relationship_to_eukaryotes இதனை ஏற்கனவே தெரிவித்திருந்தேன் தாங்கள் கவனிக்கவில்லை போலும் “Prokaryotes are single-cell organisms that do not have a nucleus,” இது மேற்கண்ட தொடுப்பில் சென்றால் படிக்கலாம்.

தங்களது கூற்றில் monera அல்லது Prokaryote அல்லது bacteria என்பவை கருக் கொண்டவை என்று தெரிகின்றது. நான் கூறுவது அவற்றிற்குத் திட்டவட்டமான கரு என்று சொல்லக்கூடிய அமைப்பு இல்லை என்று.

  • // இங்கு Nuclear Membrane இல்லையென்ற காரணத்தால் நாம் கரு இல்லையென்பது ஒத்துக்கொள்ள இயலாது அல்ல முடியாது.//

கரு என்பதற்கு வரைவிலக்கணம் (ஆ.வியில்),

the nucleus (pl. nuclei; from Latin nucleus or nuculeus, meaning kernel) is a membrane-enclosed organelle found in eukaryotic cells. It contains most of the cell's genetic material

அதாவது கரு என்றால் ஒரு மென்சவ்வால் சூழப்பட்டிருக்கவேண்டும், இயுகரியோட்டுக்களில் (மெய்க்கருவுயிரி) காணப்படவேண்டும், அவற்றுள் மரபணுப் பொருட்கள் இருக்கவேண்டும்.

அவற்றில் "கரு மாதிரியான" | nucleiod region பகுதி உள்ளது என்று ஏற்கனவே கூறியுள்ளேன்.

  • //கரு என்பது மையம்.//

கரு என்பது மையம் என்பது உயிரணுக்களுக்குப் பொருந்தாது, உதாரணமாக நிணநீர்க்குழியங்களை (lymphocyte) எடுத்துக்கொண்டால் அவற்றின் கரு, குழியமுதலுருவின் பெரும்பகுதியை ஆட்கொண்டிருக்கும்.

  • தங்களது தொடுப்புக்கள் இரண்டுமே வெற்று விளைவுகளைத் தருகின்றதே.
பெயர் மாற்றம் தொடர்பான எனது கருத்து[தொகு]

நிலைக்கருவிலி, மெய்க்கருவுயிரி என்ற பெயர்களையே தொடர்ந்து வழங்குவது.

--சி. செந்தி 14:43, 5 மார்ச் 2011 (UTC)
'சூழ்சவ்விலிக் கரு', சவ்விலிக் கரு என்ற சொற்கள் ஒருக்கால் பொருத்தமாயிருக்கலாம்;

ஏனெனில், கரு உருவாகிவிட்டது; தனித்துத் தெரிகின்ற விதத்தில் அதைச் சூழ்ந்த சவ்வு இல்லை என்பதுதான் prokaryote. தொகுப்பு: ப்ரவாஹன் (pravaahan@yahoo.co.in) ”சவ்வே மையப்படுத்தப்படவேண்டும். பெயர் விளக்கமாக அமையும்” என்ற சிங்கமுகனின் கருத்துக்கு இது அதிகமும் இயைந்திருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நிலைக்கருவிலி&oldid=921433" இலிருந்து மீள்விக்கப்பட்டது