பேச்சு:நலம் பேணல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நலம் பேணல், நலம் பேண்மை என்பதே இத்தலைப்பை விட நல்லது. நலப்பேண்மை என்றுகூடச்சொல்லலாம். ஏன் தலைப்பை மாற்றினீர்களென்று விளங்கவில்லை. --செல்வா 23:25, 12 டிசம்பர் 2008 (UTC)

Child Care, Elder Care என்று வரும் போது பேணல் பொருந்தி வரவில்லை. மேலும், நூலகத் திட்டத்தில் நலவியல் பகுப்பில் இருந்த நூலில் பராமரிப்பு வழங்கி இருந்தது. கூகிள் தேடலிலும் நலன் பராமரிப்பு இந்த context கூடுதலாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ் விக்சனரியிலும் இவ்வாறே உள்ளது. --Natkeeran 00:45, 13 டிசம்பர் 2008 (UTC)

முதலாவது ஒரே ஆங்கிலச் சொல்லுக்கு எல்லா இடங்களிலும் ஒரே தமிழ்ச்சொல் வரவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. இது தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கும் பொருந்தும். நாம் கடற்கரை, ஆற்றங்கரை என்கிறோம். ஆங்கிலத்தில் இதனை river bank, sea shore, beach என்று கூறுவர். எனவே பலவாறு மொழியீடு இருக்கும். குழந்தை நலம் பேணல், முதியோர் நலம் பேணல் என்பன சரியே. குழந்தை பேணகம், முதியோர் பேணகம் என்பதும் சரியாக இருக்கும். குழந்தை பேண் உதவி == குழந்தை பேணுதவி, முதியோர் பேணுதவி என்பன சரியாக இருப்பதாகவே தோன்றுகின்றது.

நீங்கள் குறிப்பிட்டிருந்த நூலகத் திட்டத்தில் வைத்திய கலாநிதி வி. ஜெகநாதன் அவர்கள் அளித்துள்ள அணிந்துரையில், "பெற்றெடுத்த பிள்ளையைப் பேணி வளர்ப்பது பெற்றோரின் மிகப்பெரிய பொறுப்பு. ஒரு குழந்தை வளர்ச்சி அடையும் போது வெளிக்காட்டும் குண இயல்புகளின் வளர்ச்சி அக்குழந்தை தாயின் கருப்பையினுள் இருக்கும் போதே ஆரம்பமாகின்றது." என முதல் வரியிலேயே கூறியிருக்கின்றார். பேணி வளர்த்தல் என்பது தான் அடிப்படை. மேலும் நீங்கள் child care என்று கூறுவதன் பொருளும், குழந்தை வளர்ப்பும் வேறு. மற்றவர்களின் குழந்தைகளை பகுதிநேர மேற்பார்வை செய்யும் சேவைகளைப் பொதுவாக child care என்னும் சொல் குறிப்பிடும். எப்படியாயினும் பேண் என்பது சுருக்கமான நல்ல சொல். பேண்மை, பேணல், பேண்முறை, பேணுதவி, பேண்சேவை போன்ற பலசொற்களை எளிதாக ஆக்கவும் கூடும். இவை என் கருத்து, உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள். ஆனால் ஒரு மொழியில் உள்ள ஒரு சொல்லுக்கு வேறோர் மொழியில் எல்லா இடங்களிலும் ஒரே சொல்தான் வரவேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல. --செல்வா 01:23, 13 டிசம்பர் 2008 (UTC)

உங்கள் கருத்துடன் ஒத்துப்போகிறேன். முதலில் நலம் பேணல் நல்ல சொல் என்றே நினைத்தேன். உங்கள் கருத்து அதை உறுதி செய்வதால். அதற்கு மாற்றிவிடுகிறேன். --Natkeeran 13:35, 13 டிசம்பர் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நலம்_பேணல்&oldid=317666" இலிருந்து மீள்விக்கப்பட்டது