பேச்சு:நங்கை, நம்பி, ஈரர், திருனர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரிதாக இருந்தாலும் பரவாயில்லை. இன்னும் தெளிவான தலைப்பு தேவை ஈரர் திருனர் என்ற சொற்கள் பொருளை உணர்த்தவில்லை. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:13, 23 ஏப்ரல் 2013 (UTC)

ஓரளவாவது பயன்பாட்டில் இருக்கும் சொற்களே இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. வேறு பரிந்துரைகள் இருப்பின் குறிப்பிடவும். --Natkeeran (பேச்சு) 22:14, 16 பெப்ரவரி 2015 (UTC)

நங்கை, நம்பி போன்ற சொற்களை பாலியல் நாட்டத்துக்கென்று பயன்படுத்துவதே என்ற முடிந்த முடிவாகக் கொண்டிருப்பது தவறு. இதைப் பற்றிய நீண்ட கருத்துரைகள் நங்கை என்ற தலைப்பின் பேச்சுப் பக்கத்தில் தரப்பட்டுள்ளதைக் கவனிக்கவில்லையா?--பாஹிம் (பேச்சு) 15:19, 28 சூன் 2015 (UTC)[பதிலளி]

அங்கு பதில் தரப்பட்டுள்ளது. நங்கை, நம்பி, ஈரர், திருனர் என்பது தற்போது ஊடகங்களில், இணையத்தில், கூட்டங்களில் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் சொல்லாடலே. --Natkeeran (பேச்சு) 15:27, 28 சூன் 2015 (UTC)[பதிலளி]

மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்கள் --AntanO 16:09, 28 சூன் 2015 (UTC)[பதிலளி]

Natkeeran, நற்கீரன் மேலே குறித்துள்ள கருத்து ஏற்க முடியாதது. நங்கை எனும் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் சற்றும் பொருத்தமில்லாத பதிலை வழங்கி விட்டு அங்கு பதில் வழங்கியதாகச் சொல்வது தவறு. இங்கு வழங்கப்படும் கருத்துக்களை மரபு வழியாக வழங்கப்படும் பொருளுக்கு முற்றிலும் முரண்பட்ட வகையில் வேண்டுமென்றே திணிக்க முயல்வது கிஞ்சித்தும் ஏற்கவியலாததாகும்.--பாஹிம் (பேச்சு) 04:17, 15 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

காதலிக்க நேரமில்லை படத்தில் வரும் பாடலில் நங்கைக்கும், நம்பிக்கும் மணநாளாம்.. என்ற வரிகளைக் கண்ணதாசன் எழுதியிருக்கிறார். அங்கு அது சாதாரண பெண், ஆண் என்ற பொருளிலேயே தந்திருக்கிறார்.--Kanags \உரையாடுக 04:32, 15 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
இக் கட்டுரையில் எந்தப் பொருள் குளப்பமும் இல்லை. முன்னர் குறிப்பிட்டது போன்று, ஒரு சொல் பல பொருட்களில் பயன்படுத்தப்படுவதும், ஒரு சொல் காலப் போக்கில் வேறு பொருளில் பயன்படுத்தப்படுவதும் ஒரு இயங்கிய மொழிக்குப் புதிது அல்ல. விக்கியில் ஒரே சொல் பல பொருட்களைத் தரும் வேளைகளில் துறையை அடைப்புக் குறிக்குள் தரலாம். பயனபாட்டில் இருக்கும் சொற்களை மரபுவழி சமய பண்பாட்டுக் காரணங்களூக்காக தணிக்கை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. --Natkeeran (பேச்சு) 15:08, 15 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

மரபு வழிப் பொருளுக்குத்தான் முன்னுரிமை வழங்க வேண்டுமே தவிர, விளக்கங் குறைந்த சிலரின் கருத்துக்களுக்கன்று. வேண்டுமென்றே திரித்துப் பொருள் வழங்கி அக்கருத்தைத் திணிக்க முயல்வது பிழையான செயல்.--பாஹிம் (பேச்சு) 15:15, 15 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

தமிழ் சிற்றிதழ்களில், வலைப்பதிவுகளில், ந.ந.ஈ.தி தொடர்பான செயற்பாட்டாளர் இலக்கியங்களில், கூட்டங்களில் இச் சொற்கள் வழங்கப்படுகின்றன. தமிழில் இப்பொழுதுதான் இக் கருத்துக்கள் வெளிப்படையாக விபரிக்கப்படுகின்றன, உரையாடப்படுகின்றன. மரபுவழி பொருட்களில் கட்டுரை எழுதவேண்டாம் என்று யாரும் தடுக்கவில்லை. --Natkeeran (பேச்சு) 15:20, 15 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

நீங்கள் மட்டும் தான் இச்சொற்களுக்கு இக்கருத்துக்களை வழங்குவதாகத் தெரிகிறது. விக்கிப்பீடியர்களில் பொதுவாக எவரும் நீங்கள் வழங்கும் இக்கருத்துக்களை ஏற்பதாகத் தெரியவில்லை. விளக்கக் குறைவான சிலர் ஆங்காங்கு எழுதினால், அது சரியாகிவிடுவதில்லை. குறைந்த பட்சம் இச்சொற்களை மேற்படி பொருளில் பயன்படுத்துவது தொடர்பாக ஒரு வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 15:27, 15 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

en:Wikipedia:Requested moves என்பதை இங்கு கொண்டு வரவேண்டும். அதன் மூலம் பல ஆண்டுகளாக தேங்கிக் கிடக்கும் தலைப்புகளுக்கு வழியேற்படும். --AntanO 15:33, 15 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

சிறுபான்மைக் குரல்களை வாக்கெடுப்புப்புக்கு விடுவதுதான் சிறந்த வழி. இலங்கையில். சவூதி அரேபியாவில் இதே வழியைத்தான் பின்பற்றுகிறார்கள். விக்கிப்பீடியாவை பெரும்பான்மைக் குரலினின் ஆதிக்கமாக மாற்றுவதற்கான முதல் படி. --Natkeeran (பேச்சு) 15:36, 15 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

பெரும்பான்மைக் குரல், சிறுபான்மைக் குரல் என்பதன்றி நீங்கள் வேண்டுமென்றே திணிக்க முயலும் ஒரு கருத்தாகவே நான் இதனைப் பார்க்கிறேன். வேண்டுமென்றே மரபு வழிப் பொருளுக்கு மாற்றுப் பொருள் வழங்கும் முயற்சியாகவே இது தெரிகிறது. அதனாற்றான் நான் இதனைக் கூறுகிறேன்.--பாஹிம் (பேச்சு) 15:39, 15 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஆம், இங்கு பேச்சு தடம் மாறுகிறது. --AntanO 15:44, 15 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
en:Wikipedia:What_Wikipedia_is_not#Wikipedia_is_not_censored. மீண்டும் நான் கூறாததை நீங்கள் நான் கூறியதாக கூறி உள்ளீர்கள். ஒரு சொல் பல பொருட்களில் பயன்படுத்தப்படுவது, புதிய பொருளில் பயன்படுத்தப்படுவது புதிது அல்ல. துறை வேறுபடுத்தி, புதிய பொருளில் பயன்படுத்துவதை நீங்கள் தணிக்கை செய்ய முடியாது. --Natkeeran (பேச்சு) 15:46, 15 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

தொடர்புபட்டது[தொகு]

இவையும் முறையாக மாற்றப்பட்ட தலைப்புபகளல்ல. --AntanO 15:36, 15 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஐயங்கள்[தொகு]

நற்கீரன்,

  • இத்துறை குறித்த கட்டுரைகள் பலவற்றை நீங்கள் 2010 அல்லது 2011 வாக்கில் தொடங்கியிருப்பதைக் கவனிக்கிறேன். இச்சொற்கள் விக்கிப்பீடியாவில் இருந்தே பொது வெளிப் பயன்பாட்டுக்கு வந்திருக்கும் வாய்ப்பு உண்டா? ஏன் எனில், ஓரினம் முதலிய தளங்களின் செயற்பாடுகள் கடந்த ஓரிரு ஆண்டுகளாகத் தான் கவனித்து வருகிறேன்.. அதுவும், நங்கை, நம்பி, ஈரர், திருனர் என்று அப்படியே நமது வழக்கையே அவர்கள் பயன்படுத்துவதும் இவ்வையத்தை எழுப்புகிறது. எனவே, நீங்கள் இக்கட்டுரைகளை எழுதும் முன்னரே, இச்சொற்களைப் பொதுவெளியில் (சிற்றிதழ்கள், இத்துறை சார் அமைப்புகளின் வெளியீடுகள் முதலியன ஏற்புடைய ஆதாரங்கள் தாம்) கண்டதற்கான குறிப்புகள் உள்ளனவா?தமிழ் விக்கிப்பீடியாவில் இடம்பெறுவதற்கு முன்பே உள்ளது. --இரவி (பேச்சு) 15:01, 16 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
  • Transgender பெண்களைக் குறிக்கும் திருநங்கை என்ற சொல் மிகவும் பரவலான பொதுப்புழக்கத்துக்கு வந்து விட்டது. நான் அறிய பின் 2006 வாக்கில் Living Smile வித்யா மூலமாகவே இச்சொல் வலைப்பதிவுலகில் பரவத் தொடங்கியது. இந்த இடுகையில் இச்சொல் ( சேர்ந்தெழு நங்கை மாரே திருநங்கை மார்கள் ) சீவகசிந்தாமணியில் இடம்பெற்றிருக்கிறது என்கிறார். ஆனால், இப்பாடலுக்கு கிடைக்கும் விளக்கம் தெளிவாக இத்தகைய பெண்களைச் சுட்டுவதாக இல்லை. எனினும், இத்தகைய பெண்களை இழிவாக நோக்கும் சமூகச் சூழலில் இவர்கள் மதிப்பிற்குரிய பெண்கள் என்ற பொருளிலேயே இச்சொல்லைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று புரிந்து கொண்டிருக்கிறேன். ஆனால், இதே போல், திருநம்பி என்ற சொல் தோன்றிய மூலம் அறிய முடியவில்லை. ஒரு வேளை, நங்கை - நம்பி என்று ஒலிப்பு ஒற்றுமைக்காக இச்சொல் இணையான புழக்கத்துக்கு வந்திருக்குமோ? எப்படி இருப்பினும், இவ்விரு சொற்களும் வெகுமக்கள் ஊடகப் புழக்கத்துக்கு வந்துவிட்டதற்கான ஆதாரமாக, பி. பி. சி. , தினமலர் செய்திகளைக் காணலாம்.
  • இதே போல் Lesbian, Gay ஆகிய சொற்களுக்கு நங்கை, நம்பி ஆகிய சொற்கள் பயன்படத் தொடங்கிய வரலாற்றையும் அறிய விரும்புகிறேன். திருநங்கைகள், திருநம்பிகள் ஆகிய சொற்களில் இருந்து அப்படியே இவற்றுக்கு எடுத்துப் பொருத்தி விட்டார்களோ என்று ஐயமாக உள்ளது. ஆனால், இவை இரண்டும் வெவ்வேறு தன்மைகளைச் சுட்டுவன. இச்சொற்கள் சமயம், பண்பாடு, மொழி மரபு முதலிய காரணங்களுக்காக ஏற்புடையதா இல்லையா என்பதை விட, இத்தன்மைகளைச் சுட்ட சரியான சொற்களாக உள்ளனவா என்பதை அறிய விரும்புகிறேன். அதே வேளை, திட்டமிட்டு உருவாகாத பல கலைச்சொற்கள், துல்லியம் இல்லாவிட்டாலும், காலப்போக்கில் குறித்த பொருளில் புரிந்து கொள்ளக்கூடியதாய் நிலைப்பதையும் ஏற்கிறேன். ஓரினம் போன்ற தளங்களைத் தாண்டி பரவலான தங்களில் இச்சொற்கள் பயன்பாட்டில் உள்ளதைச் சுட்ட முடியுமா?

நன்றி--இரவி (பேச்சு) 12:48, 16 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

நீண்ட காலமாக அடக்கி வைக்கப்பட்ட குரல்களின் உரையாடல்களுக்கு தமிழ் வெகுமக்க ஊடகங்களில் சொற்கள் இல்லை என்பது வியக்கத்தக்கது இல்லை. தமிழ்ச் சினிமா போன்ற ஊடகங்களில் நகைச்சுவைக்கு உரிய, வியப்பு உரிய வாழ்வியலாக இருக்கின்றது. அப்படி இருந்தும் குங்குமம், விகடன் வெளியீடுகள், kalapam.ca போன்றவற்றில் இவை இடம்பெற்று உள்ளன. முற்றிலும் புதிய சொற்களை உருவாக்குவதை விடுத்து, ஓரளாவாது பயன்பாட்டில் இருக்கும் தமிழ்ச் சொற்களை பயன்படுத்துவது விக்கியின் வழக்கம். பழைய சொற்களை புதிய பொருளில் பயன்படுத்துவது நீண்டகாலமாக தமிழிலும், பொதுவிலும் கலைச்சொல்லாக்கத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வழிமுறை. இந்தப் பொருத்தப்பாடுகள் இருப்பையினால்தான் விக்கியில் இச் சொற்களை எடுத்தாள்வது இயல்பானது என்று கருதுகிறேன். ஏராளமான சொற்களை புதிய பொருளில் இயல்பாகப் பயன்படுத்துகிறோம். உலாவி, வழு, கணியன் (https://ta.wiktionary.org/s/i8l) என்று பல. உலாவி என்பது தமிழ் உலா இலக்கியத்துடன் குளப்பம் தரும் என்று அச் சொல்லைப் பயன்படுத்த வேண்டாம் என்பதோ, அல்லது கணியன் என்பது கணியன் பூங்குன்றனார் பெயருடன் குளப்பம் தரும் போன்று கூறுவது சிறுபிள்ளைத்தனமான வாதம். நங்கை, நம்பி ஆகிய சொற்களை பாலியல் அடையாளங்களை குறிக்கப் பயன்படுத்துவது மரபுவழியாகப் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்த ஆண், பெண் அடையாள நபர்களோடு குளப்பம் தரும் என்பது ஓரளவு ஏற்றுக் கொள்ளுத்தக்க விமர்சனம். ஆனால், சொல்லை, அதன் context இல் பயன்படுத்தும் போது இந்தக் குளப்பம் மிகையாகாது என்று கருதுகிறேன். --Natkeeran (பேச்சு) 15:17, 19 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஆலமரத்தடி உரையாடல்[தொகு]

நங்கை, நம்பி, ஈரர், திருனர் என்ற கட்டுரையில் ஒரு மரபுவழிச் சொல் புதிய பொருளில் பயன்படுத்துவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இத் துறைகளில் பொதுவில் வழங்கும் சொற்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்ச் சூழலுக்கு இவை ஒப்பீட்டளவில் புதிய கலைச்சொற்கள் ஆகும். ஆனால் இவையே பெருதும் சிற்றிதழ்களில், வலைப்பதிவுகள், activist literature, கூட்டங்களில் பயன்படுத்தப்படும் சொற்கள். விக்கியில் நடைமுறைப்படி அடைப்புக் குறிக்குள் துறை வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது. பலவேறு நன்கு அறியப்பட்ட காரணங்களுக்கா, குறிப்பாக சமய/பண்பாட்டுக் காரணங்களுக்கான இச் சொற்களை பலர் எதிர்க்கின்றனர். முற்றிலும் புதிய, இழிவுபடுத்தும் வகையிலான சொற்களை அறிமுகப்படுத்துகின்றனர். விக்கியில் தனிப்பட்ட நோக்கில் ஓவ்வாத கருத்துக்களை வாக்கெடுத்து தணிக்கை செய்வதை நான் எதிர்க்கிறேன். --Natkeeran (பேச்சு) 15:41, 15 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

இவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்:
  • மரபுவழிச் சொல் புதிய பொருளில் பயன்படுத்துவது - யார் பயன்படுத்துவது? எ.கா: அகராதிகள்
  • சிற்றிதழ்களில், வலைப்பதிவுகள், activist literature, கூட்டங்களில் பயன்படுத்தப்படும் சொற்கள். - குறிப்பிடத்தக்கதல்ல
  • சமய/பண்பாட்டுக் காரணங்களுக்கான இச் சொற்களை பலர் எதிர்க்கின்றனர் - சமய/பண்பாட்டுக் காரணங்கள் என்பது தன்னிலை விளக்கம். யார் அவ்வாறு விளக்கம் தந்தது?
  • புதிய, இழிவுபடுத்தும் வகையிலான சொற்களை அறிமுகப்படுத்துகின்றனர் - எது இழிவுபடுத்தல்?
  • தனிப்பட்ட நோக்கில் - வாக்கெடுப்புக்கு விட்டால் தனிப்பட்ட நோக்க இல்லாது போய்விடும்.

--AntanO 15:51, 15 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

நான் இச் சொற்கள் பயன்படுத்துவது குறித்து பல ஆதாரங்களைச் சுட்டினே. பொது ஊடகங்களில் இருந்தும். விக்கியில் ஒரு சொல்லில் பல கட்டுரைகள் இருப்பதது ஒன்றும் புதிது அல்ல. வாசகர் context அறிந்து புரிந்து கொள்வது கடினம் அல்ல. மரபுவழி சொற் பயன்பாட்டைக் காட்டி முற்றிலும் புதிய சொற்களால் மாற்றுவது எந்த வகையில் பொருந்தும்? அந்த மரபுவழிச் சொற்களில் விக்கியில் கட்டுரையில் உருவாக்கக் வேண்டும் என்றால் உருவாக்கவும். வேறுபடுத்திக் காட்ட முடியும். அதை விடுத்து நாங்கள் மரபிலேயே இருக்க வேண்டும். புதிய பயன்பாட்டுகளைத் தடை செய்ய்வோம். அப்படி செய்ய வேண்டும் என்றால் ஒரு அகராதியை வெளியிட்டுவிட்டு வாரும் என்று கூறுவது பொருத்தமன்று. தமிழில் சிற்றிதழ்கள் குறிப்பிடத்தக்கதல்ல என்பது குறிப்பிட்டது வியக்கத்தக்கது. --Natkeeran (பேச்சு) 16:10, 15 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஒரு சிலர் தம்மைத் தத்தம் பாலியல் நாட்டத்துக்குத் தக்கவாறு அடையாளப்படுத்துகின்றனர். பிறருக்கு அது இழிவோ இல்லையோ, அவ்வடையாளத்தைக் கொண்டு அதனை வெளிப்படுத்துவோர் அதனை இழிவாகக் கருதுகின்றனரா? மேற்படி சொற்கள் விடயத்தில் வேறு சொற் பரிந்துரைகள் இருக்கும் போது ஓரிரு சொற்களுக்கு மரபுக்கு மாற்றமாகக் கருத்து வழங்கி அதில் விடாப்பிடியாக நிற்பதைத்தான் ஏற்க முடியவில்லை. சமய/பண்பாட்டுக் காரணங்களுக்காக எவரும் சொல்லை எதிர்ப்பதில்லை. செயலை எதிர்க்கலாம், சொல்லையல்ல.--பாஹிம் (பேச்சு) 16:16, 15 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

என்னுடைய குறிப்புகளுக்கான பதில் இல்லை. நிற்க, புதிய சொற்களை உருவாக்கியது யார்? விக்கிப்பீடியா சிற்றிதழ்களில், வலைப்பதிவுகள், activist literature, கூட்டங்களில் பயன்படுத்தப்படும் சொற்களை ஏற்றுக் கொள்ளுமா? இதற்கும் மரபுக்கும் தொடர்பில்லை. அவ்வாறு தன்னிலை விளக்கம் கொண்டால் என்ன செய்வது? புதிய சொற்களால் என்ற பெயரில் கண்டதையெல்லாம் உள்வாங்குமா விக்கிப்பீடியா? சிற்றிதழ்களில், வலைப்பதிவுகள் இலக்கணம் தொலைத்து புகுத்தும் தமிழே அல்லாத சொற்களை ஏற்றுக் கொள்ளலாமா? --AntanO 16:22, 15 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

சொல்லை எதிர்ப்பது செயலை எதிர்ப்பதற்கான ஒரு வழி என்பத இங்கு குறிப்பிடத்தக்கது. மாற்றுத்திறனாளி என்று குறிப்பிடுகிறோம். பல்வேறு இழிவு சொற்களைப் பயன்படுத்துவது இல்லை. நிச்சியமாக தமிழ் விக்கிப்பீடியாவில் ஏராளமான கலைச்சொற்கள் சிற்றிதழ்களில் இருந்து பெறப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. உறைந்த மொழிகள் மாறாப் பொருட் கொன்ற சொற்களைக் கொண்டு இருக்கலாம். ஆனால் இயங்கில் மொழிகள் அப்படி அல்ல. எ.கா பகுப்பு:கலை இயக்கங்கள் என பகுப்பை நோக்கிலான். பெரும்பாலான சொற்கள் அகராதியில் இல்லை. --Natkeeran (பேச்சு) 16:32, 15 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
கருத்தினை உள்வாங்கி விடயத்துடன் உரையாடுவது நன்று. தணிக்கை, இழிவுபடுத்தும் வகை, எதிர்க்கின்றனர், சமய/பண்பாட்டுக் காரணம் என தொடர்பே அற்று, மாற்றுக் கருத்துள்ளவர்கள் மேல் பிழையான தோற்றத்தை ஏற்படுத்த வேண்டாம். குறித்த கட்டுரைகளில் பலர் தங்கள் கருத்தை, தலைப்பு மாற்ற வேண்டிய அவசியத்தை தெரிவித்தும், இல்லை என்று எதிர்வாதம் செய்வதும், பயனர் கருத்துக்கு விடுவதைத் தவிர்ப்பது சிறப்பாகப்படவில்லை. --AntanO 16:30, 15 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
கட்டுரைகளை வேறுபடுத்தி காட்ட வழிமுறை ஏற்கனவே இருக்க, குறிப்பான ஒரே துறைத் தலைப்புகளில் மாத்திரம் இவை சிற்றிதழ்களில் மட்டும் பயன்படுத்தப்படுகிறன போன்ற சாட்டுக்கள் காட்டி மாற்று வேண்டப்படுகின்றது. பல்கலைக்கழகம் வெளியிட்ட அகராதியில் (தமிழ் விக்சனரி அல்ல) மட்டும் உள்ள சொற்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று எதாவது விதி செய்து, குறிப்பாக எந்த அகராதி என்று குறிப்பிட்டால் வசதியாக இருக்கும். இப்படி செய்தால் விக்கியில் கணிசமான தனித்துவமான கட்டுரைகளின் தலைப்புக்களை மாற்றவேண்டி வரும்--Natkeeran (பேச்சு) 16:36, 15 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
ஒரு குறிப்பிட்ட விடயத்தில் தீர்வு எட்ட முடியாவிட்டால், வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். en:Wikipedia:Requested moves என்பதை தமிழ் விக்கி உள்வாங்க வேண்டும். --AntanO 16:47, 15 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
விக்கியின் தலைப்பிடுதல் கொள்கையையோ, அல்லது பல பொருட்களில் ஒரே தலைப்பு இருப்பதையோ இக் கட்டுரைகள் மீறவில்லை. ஆதாரம் அடிப்படையில் இச் சொற்கள் பயன்படுத்துவது மிகப் பொருத்தமானது. ஆனால் சிலரின் அல்லது பலரின் mystic மரபுவழி/சமய/பண்பாட்டு sensibilities பாதிக்கின்றன என்பது கண்கூடு. பொது விதிகள் மீறப்பட்டு இருந்தால் வாக்கெடுப்புக்கு விடலாம், அப்படி இல்லாவிடின் அது ஆரோக்கியமான முன்னேற்றம் இல்லை. பின்னர் பல சர்ச்சைக்குரிய தலைப்புகளை எனது sensibility பாதிக்கின்றது என்று கூறி வாக்கெடுப்புக்கு விட்டு மாற்றலாம், நீக்கலாம். --Natkeeran (பேச்சு) 16:57, 15 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
வாக்கெடுப்பும் வேண்டாம். கருத்தெடுப்பும் வேண்டாம் நான் சொல்வதைக் கேளுங்கள் என்பதை arbitration என்பதா? தயவுசெய்வு சிலரின் அல்லது பலரின் mystic மரபுவழி/சமய/பண்பாட்டு sensibilities பாதிக்கின்றன என்பது கண்கூடு மற்றவர் மேல் குற்றம் சுமத்த வேண்டாம். இப்படித்தான் செய்வேன் என்றால் பதிலுக்கு என்னாலும் பதில் கொடுக்க முடியும். விடயத்துடன் மட்டும் உரையாடுக. பேச்சு:நங்கை, நம்பி, ஈரர், திருனர், பேச்சு:நங்கை (பாலியல் அடையாளம்), பேச்சு:நம்பி (பாலின அமைவு) - இங்கெல்லாம் இத்தலைப்புக்கள் வேண்டாம் என்றே பலரும் தெரிவித்துள்ளனர். ஏன் ஏற்றுக் கொள்ள முடியவில்லை? இங்கு யாருடைய sensibility பாதிக்கின்றது? --AntanO 17:12, 15 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

நம்பியும் நங்கையும் என்றால் தலைமகனும் தலைமகளும் என்கிறார் ரா.பி. சேதுப்பிள்ளை. அன்பினில் சிறந்த நங்கையும் நம்பியும் திருமணம் கொண்ட அருமைக் காட்சிகள் கண்டேன் களி கொண்டேன் என்கிறார் மறைமலை அடிகள். எங்கணுந் தங்கும் இறைவ னருளால், மங்கலம் பொங்கும் மனையறம் பூணும், தமிழ நம்பியும் மலர்க்கொடி நங்கையும், தமிழை நம்பிய தாழ்விலா வாழ்வினில், அன்பும் அறனும் பணபும் பயனுமா, இன்பம் பெருக இகமிசை நெடிதே என்று பாடுகிறார் தேவநேயப் பாவாணர். அதனைக் கேட்ட நம்பியும் நங்கையும் அறியாதவர்கள் செய்த பிழையைப் பெரியோர் தாங்கள் பொறுத்தருளி என்று காவிய நாயகரான கோவலனையும் கண்ணகியையும் குறிப்பிடுகிறார் இளங்கோவடிகள். இங்கெல்லாம் lesbian, gay போன்ற எப்பொருளும் கிடையவே கிடையாது. புழக்கத்திலிருக்கும் சொல்லுக்குப் புதுப்பொருள் வழங்கி இத்தகைய இடங்களிலெல்லாம் அப்பொருளைக் கொள்ள வேண்டுமா?--பாஹிம் (பேச்சு) 09:03, 16 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 12:17, 16 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் நான் பாஹிம் மேலே சொன்ன கருத்தோடு உடன்படுகின்றேன். அருமையான எடுத்துக்காட்டும்கூட. --செல்வா (பேச்சு) 14:48, 16 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் -- ஒரு சில ஊடகங்களில் பயன்படுத்தப்படுகின்றது என்பதால் இச்சொற்கள் சரி எனக் கருதி விக்கிப்பீடியாவில் உள்வாங்குவது பொருத்தமானதாகத் தோன்றவில்லை. இயங்கு மொழியில் சொற்களின் பொருள் மாறுபடலாம் என்ற நக்கீரனின் வாதம் சரியெனினும், நங்கை, நம்பி என்ற சொற்கள் தொடர்பில் அவை ஏறத்தாழ எதிர்க்கருத்தில் அமைவதால் இதனை ஏற்றுக்கொள்ளலாகாது. --சிவகோசரன் (பேச்சு) 14:43, 18 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
  • தமிழில் இது வரை எழுதப்படாத சிந்தனைகள் பற்றி விக்கிப்பீடியாவில் எழுத வேண்டும் என்றால் சிற்றிதழ்களில், வலைப்பதிவுகள், செயற்பாட்டாளர் வெளியீடுகள், கூட்டங்களில் பயன்படுத்தப்படும் சொற்களையும் பயன்படுத்தி எழுதினாலன்றி நாம் குறைந்தது 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அப்போதும் அவை வெகுமக்கள் ஊடகப் புழக்கத்துக்கு வரும் என்று உறுதியில்லை. இன்று நவீன தமிழில் புழங்கும் பல்வேறு சொற்கள் இவ்வாறு சிற்றிதழ்கள் முதலியவற்றில் தோன்றியவை தான் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. நாமே தேவைக்கு ஏற்ப பல புதிய சொற்களை ஆக்கிப் பயன்படுத்தும் போது, சொல் தோன்றிய மூலம், புழக்கத்தின் அளவு, காலம் பார்த்து குறிப்பிடத்தக்கது இல்லை என்று புறக்கணிக்கத் தேவையில்லை. சொல் பொருத்தமாக இருக்கிறதா என்று மட்டும் பார்த்தால் போதும். இவ்வாறு குறுகிய வட்டம் என்று புறக்கணிக்கப்படும் பிரிவில் தான் தமிழ் விக்கிப்பீடியாவும் இருந்தது, இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால், நாம் ஆக்கிய பல நல்ல சொற்கள் புழக்கத்துக்கு வந்திருக்கின்றன.
  • ஆண், பெண் என்பது ஒரு பெயர் அல்லது அடையாளம். இதே போன்ற ஒரு அடையாளத்தைத் தான் தற்பால் ஈர்ப்பு கொண்டோரும் விரும்புகின்றனர். அவர்களின் பாலியல் நடத்தை அல்லது நாட்டத்தின் அடிப்படையில் ஆண் தற்பால் சேர்க்கையாளர், பெண் தற்பால் சேர்க்கையாளர் என்றவாறு அழைப்பது அவர்களைப் புண்படுத்துவதாக உணர்கின்றனர். நேரடியாகச் சிலரிடம் பேசியும் இணையத்திலும் (Homosexual: a medical definition for a person who is attracted to someone with the same gender (or, literally, biological sex) they have, this is considered an offensive/stigmatizing term by many members of the queer community; often used incorrectly in place of “lesbian” or “gay) இதைப் பற்றி உறுதி செய்து கொண்டேன். எப்படி ஆப்பிரிக்கர்கள், தலித்துகள் முதலிய ஒடுக்கப்பட்டோருக்கு அவர்களைப் புண்படுத்தாத அரசியல் ஏற்புடைய பெயர்களைப் பயன்படுத்துகிறோமோ அதே போல் இவர்களுக்கும் பயன்படுத்த வேண்டும். இவர்களின் உரிமைகளுக்கான போராட்டம் என்பதே தங்களுக்கான சரியான, மதிப்பு மிக்க பெயர் அல்லது அடையாளத்தைப் பெறுவதையும் உள்ளடக்கியது தான். நம்மிடம் சரியான சொல் இல்லை என்பது அவர்களைப் புண்படுத்துவதற்கான நியாயமாகவோ கலைக்களஞ்சியப் பெயரிடல் முறையோ ஆகாது.
  • ஆண்->பெண் பாலினம் மாறியவருக்கு திருநங்கை என்ற சொல்லும் பெண் -> ஆண் பாலினம் மாறியவருக்குத் திருநம்பி என்ற சொல் மிகப் பரவலான வெகுமக்கள் ஊடகப் புழக்கத்துக்கு வந்துவிட்டது. குறிப்பாக, தமிழக அரசே திருநங்கை என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. இவற்றில் உள்ள திரு முன்னொட்டை மதிப்புக்குரிய என்ற பொருளிலேயே புரிந்து கொள்கிறேன். இவற்றை ஏற்பதில் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு உடன்பாடு என்றே புரிந்து கொள்கிறேன். இச்சொற்கள் ஏறத்தாழ 10 ஆண்டுகளாகப் புழக்கத்தில் உள்ளன.
  • நம்பி, நங்கை என்ற சொல் ஏற்கனவே பல காலமாக ஆண், பெண் என்ற பொருளில் மட்டுமே பயன்பட்டு வருகிறது என்பதை விட, இங்கு இத்துறை குறித்து எழுதப்பட்ட சொல்லாடல்களில் போதிய பொருத்தமின்மையுடன் இருக்கிறது என்பதே எனக்குக் குறையாகப் படுகிறது. Transgender lesbian என்பதை திருநங்கை நங்கை என்றோ Transgender gay என்பதை திருநம்பி நம்பி என்றோ எழுதுவது குழப்பத்தைத் தரும். எனவே, நம்பி, நங்கை என்ற சொற்களை இதற்கு ஆக்கியவர்கள் இவ்வாறான பயன்பாடுகளை எண்ணிப் பார்க்கத் தவறி விட்டார்கள் என்றே கருத வேண்டியிருக்கிறது. குறிப்பாக, திருநங்கை, திருநம்பி என்பவற்றில் உள்ள நங்கை, நம்பி என்பன வழமையான ஆண், பெண் பாலின அடையாளங்களைச் சுட்டும் போது அதே பெயர்களைப் பாலியல் நாட்டத்துக்கும் பயன்படுத்துவது சொல்லாக்க நோக்கில் சரியான அணுகுமுறை இல்லை. இவ்வாறான காரணங்களை முன்னிட்டு, இவர்களுக்கான புதிய, அரசியல் ஏற்புடைய பெயர்களை உருவாக்க முனைய உடன்படுகிறேன். ஆனால், இது உரையாடலாகவே இருந்தால் போதுமானது. வாக்கெடுப்பு நடத்தி மாற்றத் தேவையில்லை. தேவைப்பட்டால், இத்துறையில் இயங்குவோர் அனைவரையும் இவ்வுரையாடலில் பங்கு பெறச் செய்து துறை சார்ந்தோர் ஏற்புடன் புதிய பெயரை உருவாக்க முனையலாம். அது வரை சொல்லாக்கம் பற்றிய தகுந்த குறிப்புகளைக் கட்டுரைகளில் தந்து, தற்போது இருக்கும் தலைப்புகளே நீடிக்கலாம். --இரவி (பேச்சு) 15:57, 18 நவம்பர் 2015 (UTC)--இரவி (பேச்சு) 15:57, 18 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--Kanags \உரையாடுக 01:43, 19 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
நல்லது. காப்பகத்திற்குள் முடங்கி, அப்படியே மறக்கப்படுமுன் இதற்கு தீர்வு காண வேண்டும். அல்லது வாக்கெடுப்பு தீர்வாகலாம். --AntanO 18:25, 18 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
சரி, Antan. மாற்றுப் பெயர்கள் தொடர்பான உரையாடலை இங்கு மேற்கொள்வோம். புதிய பெயரை இறுதி செய்ய ஒரு மாத கால அளவு தேவைப்படலாம். Natkeeran, நான் தேடிப் பார்த்த வரை திருநங்கை, திருநம்பி ஆகிய சொற்கள் பரவலான அளவு நங்கை, நம்பி ஆகிய சொற்கள் இத்துறை சார்ந்து உரையாடுவோரிடம் கூட பரவலாகவில்லை. புதிய மாற்றுப் பெயரை உருவாக்குவதற்கும் அவர்கள் மறுக்கவில்லை. மாற்றுப் பெயர்கள் குறித்த பரிந்துரைகளைத் தருமாறு துறை சார்ந்தோரையும் அழைக்கவுள்ளேன் (சிருஷ்டி, ஓரினம், லிவிங் ஸ்மைல் வித்யா ஆகியோர்). இன்னும் நாம் அறிந்த செயற்பாட்டாளர்களையும் அழைக்கலாம். இந்த அணுகுமுறை ஏற்புடையதா என்று அறிய விரும்புகிறேன். அவர்களையும் உள்ளடக்கி இவ்வுரையாடல் நடப்பதால் தணிக்கை, பெரும்பான்மை எதிர் சிறுபான்மை முதலிய அணுகுமுறைச் சிக்கல்களைத் தவிர்க்கலாம் என்று கருதுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 11:54, 19 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
உள்வாங்கும் (Inclusive) தன்மை கொண்ட கலைச்சொல் ஆக்க முயற்சியை வரவேற்கிறேன். நங்கை, நம்பி ஆகிய சொற்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட விக்கி மாற்றீடுகள் எந்தவித உள்ளீடுகள் பெறப்படாமல் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வாறு உள்ளீடுகள் பெறும் போது, நங்கை, நம்பி ஆகிய சொற்களையும் பரிந்துரையில் உள்ளடக்க வேண்டும். கலைச்சொல் உருவாக்கம் தொடர்பாக விக்கி நெகிழ்வுடையதாகவும் (flexibile) இயங்குதன்மை (dynamic) ஆகவும் இருந்தாலே பல புதிய கருத்துருக்களைப் பற்றி தமிழில் கட்டுரைகள் உருவாக்க முடியும். குறிப்பாக தமிழின் அறிவு முனைகளாக சிற்றிதழ்கள், செயற்பாட்டு இயக்கங்கள் ஆகியவற்றின் கலைச்சொற் ஆக்கத்தை நாம் பயன்படுத்தத் தயங்கக் கூடாது. --Natkeeran (பேச்சு) 14:51, 19 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
நன்றி, Natkeeran. உங்கள் கருத்துகள் ஏற்பே. --இரவி (பேச்சு) 20:50, 19 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

மாற்றுப் பெயர்[தொகு]

அன்புடையோருக்கு, மகிழ்வர் என்கிற சொல்லே தற்பால் விழைவோரைக் குறிக்கப் பயன்படும், புழக்கத்தில் உள்ள சொல்லாகவும் உள்ளது. ஒரு பெயரென்பது அது குறிக்கும் சமூகத்தாரின் மனமொக்க இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். மேலும் ஆங்கிலத்தில் பயன்படும் கே என்கிற சொல்லின் மொழிப்பெயர்ப்பாக வந்தது தான் இந்த மகிழ்வன் என்கிற சொல். மகிழ்ச்சிக்கு உவகை, களிப்பு உள்ளிட்ட வேறு பல சொற்கள் உள்ளன என்பதை நாம் அறிகின்ற போதிலும், அத்தகை சமூகத்தார் விரும்பும் பெயரே அதிகார்ப்பூர்வமாய் அமையும் (அமையப் பெற்றிருக்கின்றது) என்பதைக் கருத்தில் கொண்டு இந்த பக்கத்தின் தலைப்பை மாற்றி அமைக்கிறேன். மகிழ்வர் என்கிற சொல் சமூகத்தார் அல்லாத பிறரைப் புண்படுத்தினாலோ குழப்பத்துக்கு உள்ளாக்கும் சொல் என்று வாதிடும் பட்சத்திலோ, அச்சொல்லை மாற்ற நமக்கு எந்த உரிமையும் இல்லை என்பதைத் தெளிவுப் படுத்த விரும்புகிறேன். பாலின அடையாளம் என்பது கொண்டாடப்பட வேண்டியது என்பதை மனம்பால் வைத்து அச்சொல்லை அந்தச் சமூகத்தைக் குறிக்கும் சொல்லாய் பெருமையுடன் அறிவிப்பதில் என்னுடன் சேர்ந்து மகிழ்ச்சி கொள்வீரென நம்புகிறேன்.--−முன்நிற்கும் கருத்து Vetrrich Chelvan (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

மேற்கண்ட உரையாடலுக்கு இணங்க Lesbian, Gay ஆகிய சொற்களுக்கான தமிழ்ப் பெயர் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. ஆண் / பெண் தற்பால் சேர்க்கையாளர், ஆண் / பெண் ஓரினச் சேர்க்கையாளர் என்பது போல் பாலியல் நாட்டத்தை விவரித்து வரும் பெயர்கள் இச்சமூகத்தவரைப் புண்படுத்துவன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். பரிந்துரைக்கப்படும் பெயர்கள் வேர்ச்சொற்களை அடிப்படையாகக் கொண்டோ இலக்கியங்களில் காணப்படும் பெயர்களைக் கொண்டோ அமையலாம். புழக்கத்தில் இருக்கும் பெயர்களையும் இங்கு குறிப்பிடலாம். நன்றி.--இரவி (பேச்சு) 11:47, 19 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

மேற்குறிப்பிட்ட சொற்கள் மட்டும் அல்லாமல் பல்வேறு சொற்களுக்கு பரிந்துரைகள் தேவைப்படுகின்றன. எ.கா Trans man, Bisexual, Transgender, LGBT. மேலும் : http://itspronouncedmetrosexual.com/2013/01/a-comprehensive-list-of-lgbtq-term-definitions/. --Natkeeran (பேச்சு) 15:27, 19 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
நிச்சயமாக, Natkeeran. இவ்வுரையாடல் தொடர்பாக பல்வேறு தரவுகளையும் படித்த போது, நிச்சயம் இத்துறை குறித்து விரிவான, முழுமையான கட்டுரைகளை எழுத வேண்டும் என்ற உந்துதல் எழுந்தது. தற்போது நம்பி, நங்கை சொற்களைப் பற்றி மாற்றுக் கருத்து எழுந்துள்ளதால் அவற்றில் இருந்து தொடங்குவோம். இன்னும் பல சொற்கள் ஏற்கனவே பொது ஏற்புடன் புழக்கத்தில் உள்ளன. மேலும் தேவைப்படும் சொற்களையும் உருவாக்குவோம்.--இரவி (பேச்சு) 20:53, 19 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

Lesbian, Gay ஆகியவற்றுக்கான புதிய சொற்களை உருவாக்க அகம் என்ற வேர்ச்சொல்லை நாடலாம் என்று பரிந்துரைக்கிறேன். அகமணம் என்பது, ஒரு குறிப்பிட்ட சமூகக் குழு, வகுப்பு அல்லது இனப்பிரிவுகளுக்கு உள்ளேயே திருமணம் செய்து கொள்ளும் முறையைக் குறிக்கிறது. அதே போல் ஆண் / பெண் என்னும் ஒரே / தன் பால் ஈர்ப்பு கொண்டோரைக் குறிக்க அகம் என்ற வேர்ச்சொல் பயன்படலாம். Lesbian = அகள் (மகள் என்ற சொல்லின் ஒலிப்போடு ஒத்திசையும்). Gay = அகன் (மகன் என்ற சொல்லின் ஒலிப்போடு ஒத்திசையும்). சிலர் தங்கள் குழந்தைகளுக்கு அகன் என்று பெயர் சூட்டியிருப்பதை இணையத்தில் காண முடிந்தது. எனவே, இச்சொல்லுக்குப் பதிலாக அகனன் என்ற சொல்லையும் கருதலாம். இருபாலர்களையும் பொதுவாக குறிப்பிடும் போது அகனர்கள் (homesexuals) என்று குறிப்பிடலாம். இப்பரிந்துரை குறித்த அனைவர் கருத்தையும் வரவேற்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 13:34, 25 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஏற்கனவே இது தொடர்பாக உரையாடியுள்ளீர்கள் என்ற வகையில், மேற்கண்ட புதிய சொல் பரிந்துரை தொடர்பாக உங்கள் கருத்து தேவை. கவனிக்க: @Natkeeran, Kanags, AntanO, Fahimrazick, Rsmn, செல்வா, and தமிழ்க்குரிசில்:, @மதனாஹரன், Sivakosaran, Sodabottle, Jagadeeswarann99, and Balurbala:--இரவி (பேச்சு) 14:26, 29 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
நங்கை, நம்பி என்பதைவிட இவை பரவாயில்லை. இங்குள்ள உரையாடலையும் கருத்திற் கொள்ளலாம். --AntanO 14:43, 29 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
எனக்கும் பொருத்தமாகத் தோன்றுகிறது..அகம் (நான்) என்பது வடமொழிச் சொல்லோ என்ற குழப்பம் வரலாம். ஆனால் அகநானூறு என்பதில் அகம் என்பது உள்ளம்/உட்புறம் என்பதற்கான தமிழ்ச் சொல்லாகவே உள்ளது. @செல்வா and Fahimrazick: கருத்தை எதிர்நோக்குகிறேன்.--மணியன் (பேச்சு) 15:07, 29 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் - பொருத்தமாகத் தோன்றுகின்றது. மேலே குறிப்பிட்டது போல் ஏற்கனவே பெயர் இருந்தால் அதற்கேற்ப தீர்மானிக்கலாம். --சிவகோசரன் (பேச்சு) 16:28, 29 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஒரு சிக்கல் தோன்றுகிறது. அகம் என்றால் உள்ளம் என்றும் உட்புறம் என்றும் பொருள். அச்சொல்லைக் கொண்டு கலைச்சொற்களை உருவாக்கும் போது முற்றிலும் புதிய சொற்களாகவும் பொருள் விளங்கப்படுத்த வேண்டியனவாகவும் அவை இருக்கும். Homosex என்பதை அகம் என்று கூறலாகாது. மாறாக தற்பாலியலன் (gay), தற்பாலியலள் (lesbian), தற்பாலியலர் (பன்மை) தற்பாலியல் (homosexuality), மாற்றுப் பாலினம் (transgender), பால் மாறிய ஆண் (trans-man), பால் மாறிய பெண் (trans-woman), இரு பாலியலன் (bisexual man), இரு பாலியலள் (bisexual woman), இரு பாலியலர் (பன்மை) என்றவாறு பொருள் விளங்கும் விதத்தில் கலைச்சொல்லாக்கம் செய்தால் அது யாவருக்கும் புரியும் எளிய சொல்லாக அமையும். ஆங்கிலத்தில் gay என்றோ lesbian என்றோ கூறும் போது எத்தகையவாறு பொருள் விளங்குமோ, அதே விதத்தில் இதுவும் விளங்கும். ஆங்கிலச் சொல்லால் ஏற்படும் புரிதலைத் தமிழில் மறைக்க வேண்டுமென்று எந்த நியாயமும் கூற முடியாது.--பாஹிம் (பேச்சு) 18:39, 29 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--AntanO 18:44, 29 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

நம்பி, நங்கை போன்று ஏற்கனவே எந்த ஒரு சொல்லையும் பயன்படுத்துவதில் பண்பாட்டுத் தயக்கம் இருக்கும் வேளையில், இப்புலத்துக்கு நெருங்கி வரும் பொருளில் உள்ள ஏதாவது ஒரு வேர்ச்சொல்லில் இருந்து தான் புதுச் சொல் உருவாக்க முடியும். இது நெருங்கி வருகிறதா என்று தான் பார்க்க முடியுமே தவிர, இது முற்றிலும் பொருந்துகிறதா, அனைவரும் படித்தவுடன் தானாகப் புரிந்து கொள்வார்களாக என்று எதிர்பார்க்க முடியாது. புதிய கலைச்சொற்கள் புழக்கத்துக்கு வந்து சில காலம் கழித்தே தானாகப் புரிந்து கொள்ளும் நிலையை எட்டும். இது எல்லா துறை சொற்களுக்கும் எல்லா மொழிகளுக்குமே கூட பொருந்தும். எனவே, இத்தேவைக்கான சொல்லைச் சொன்னவுடன் சொல்லை வைத்தே மக்கள் பொருள் விளங்க வேண்டும் என்று எதிர்பார்க்கத் தேவையில்லை.

//ஆங்கிலத்தில் gay என்றோ lesbian என்றோ கூறும் போது எத்தகையவாறு பொருள் விளங்குமோ, அதே விதத்தில் இதுவும் விளங்கும். ஆங்கிலச் சொல்லால் ஏற்படும் புரிதலைத் தமிழில் மறைக்க வேண்டுமென்று எந்த நியாயமும் கூற முடியாது.//

இந்த அணுகுமுறை நொண்டுபவரை நொண்டி என்றும் ஆப்பிரிக்கர்களைக் கறுப்பர்கள் என்று அழைப்பதற்கும் ஈடானது. இங்கு யாரும் தங்கள் அடையாளத்தை மறைக்கவில்லை. மாறாக, தங்கள் அடையாளத்தை முன்னிறுத்தி அரசியல் ஏற்பும் உரிமைகளும் பெறவே போராடிக் கொண்டிருக்கிறார்கள். தங்களை மறைத்துக் கொள்ள இது அவர்களின் ஊனமோ குறைபாடோ தெரிவோ குற்றமோ அன்று. இது அவர்கள் இயல்பு. ஒரு காலத்தில் இது மனநோய் என்று பார்க்கப்பட்டது. கொடூர் மருத்துவ முறைகள் பயன்படுத்தி இவர்கள் "குணப்படுத்தப்பட்டார்கள்". ஒரு காலத்தில் கொலைத்தண்டனைக்குரிய குற்றமாகப் பார்க்கப்பட்டது. ஆனால், இன்று பல நாடுகளில் இதற்கான சட்ட ஏற்பு பல்வேறு நிலைகளில் உள்ளது. எனவே, ஏற்கனவே நான் தெரிவித்த கருத்தை மீண்டும் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

ஆண், பெண் என்பது ஒரு பெயர் அல்லது அடையாளம். இதே போன்ற ஒரு அடையாளத்தைத் தான் தற்பால் ஈர்ப்பு கொண்டோரும் விரும்புகின்றனர். அவர்களின் பாலியல் நடத்தை அல்லது நாட்டத்தின் அடிப்படையில் ஆண் தற்பால் சேர்க்கையாளர், பெண் தற்பால் சேர்க்கையாளர் என்றவாறு அழைப்பது அவர்களைப் புண்படுத்துவதாக உணர்கின்றனர். நேரடியாகச் சிலரிடம் பேசியும் இணையத்திலும் (Homosexual: a medical definition for a person who is attracted to someone with the same gender (or, literally, biological sex) they have, this is considered an offensive/stigmatizing term by many members of the queer community; often used incorrectly in place of “lesbian” or “gay) இதைப் பற்றி உறுதி செய்து கொண்டேன். எப்படி ஆப்பிரிக்கர்கள், தலித்துகள் முதலிய ஒடுக்கப்பட்டோருக்கு அவர்களைப் புண்படுத்தாத அரசியல் ஏற்புடைய பெயர்களைப் பயன்படுத்துகிறோமோ அதே போல் இவர்களுக்கும் பயன்படுத்த வேண்டும். இவர்களின் உரிமைகளுக்கான போராட்டம் என்பதே தங்களுக்கான சரியான, மதிப்பு மிக்க பெயர் அல்லது அடையாளத்தைப் பெறுவதையும் உள்ளடக்கியது தான். நம்மிடம் சரியான சொல் இல்லை என்பது அவர்களைப் புண்படுத்துவதற்கான நியாயமாகவோ கலைக்களஞ்சியப் பெயரிடல் முறையோ ஆகாது.

எப்படி ஆண்களைப் பெண் விரும்பி என்றோ பெண்களை ஆண் விரும்பி என்றோ பெயரிட்டு அழைக்க முடியாதோ அதே போல் இவர்களையும் அவர்களின் பாலியல் நாட்டம் அல்லது நடத்தையின் அடிப்படையில் பெயரிட்டு அழைக்க முடியாது என்பதை அருள்கூர்ந்து எண்ணிப் பாருங்கள்.

எந்த வேர்ச்சொல் பொருத்தமாக இருக்கும் என்று இன்னும் பல சொற்களை அலசிப் பார்க்கலாம். ஆனால், இவர்கள் ஏதோ குற்றமோ பாவமோ செய்தது போன்று, மற்ற வழமையான சொற்கள் இவர்களைக் குறித்தாலே தீட்டு என்பது போன்ற மனப்பான்மையுடன் பெயரிட முனைய வேண்டாம். --இரவி (பேச்சு) 05:48, 30 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஒரு சொல் உந்துதல் பற்றியதாக இருந்தால் பேருந்து, சீருந்து, தானுந்து, தொடருந்து என்று கலைச்சொல் உருவாக்குகிறோம். உயிரியலுடன் தொடர்பு பட்டதாயின் உயிர் வேதியியல், உயிரியல் மருத்துவவியல், உயிரியல் தொழினுட்பம் என்று கூறுகிறோம். நொண்டியைப் பார்த்து நொண்டி என்றோ குருடனைப் பார்த்துக் குருடன் என்றோ கூறுவது குற்றமில்லை. கேலி செய்யும் மனோபாவத்துடன் கூறுவதுதான் தவறு. குருடர் பாடசாலை, ஊனமுற்றோர் நல நிதியம், அங்கவீனருக்கான ஒதுக்கீடு என்றவாறு பல்வேறு சொற்கள் புழக்கத்திலுள்ள போதிலும் பொதுவாக அவற்றைப் பார்ப்பவர்கள் அவற்றின் கருத்தைப் பெறுகின்றார்களேயொழிய அவற்றைக் கேலி செய்வது கிடையாது. Sexuality என்பதைப் பாலியல் என்கிறோம். Homosexuality என்பதைத் தற்பாலியல் என்று கூறாமல் அதனை மறைத்து மறைபொருள் வழங்க வேண்டுமா? பாலியலுடன் தொடர்புள்ளதாயின் தற்பாலியல், தற்பாலியலன், தற்பாலியலள் என்றவாறு கூறுவதில் என்ன தவறு?--பாஹிம் (பேச்சு) 06:04, 30 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
//கேலி செய்யும் மனோபாவத்துடன் கூறுவதுதான் தவறு.// கேலிக்கும் மேல் சென்று பெரும் மன உளைச்சல், உடல் மீதான வன்முறை என்ற நடக்கும் அளவுக்குத் தான் சமூகம் உள்ளது. திருநங்கை என்ற பெயரை அவர்கள் தங்களை மதிப்புடன் விளிக்கப் பயன்படுத்துவது போல் சமூகத்தில் அவர்களைக் குறித்துக் கூறப்படும் மற்ற பெயர்களைக் கொண்டு குறிப்பிட முடியுமா? ஊனமுற்றவர்கள் என்ற சொல்லையே விடுத்து மாற்றுத் திறனாளிகள் என்ற சொல்லைப் பயன்படுத்தும் நிலைக்குத் தமிழ்ச்சமூகம் நகர்ந்து விட்டது. பெயரில் பாலியல் தொடர்பான சொல்லை வைப்பது அவர்களைப் புண்படுத்துகிறது என்று தெளிவாகத் தெரியும் நிலையில் அதனைக் கருத்தில் கொண்டு மாற்றுச் சொல் புனைவது தான் மனிதம் மட்டுமன்று நடுநிலை நோக்கும் கூட. மாறாக, நீங்கள் ஏன் புண்படுகிறீர்கள் என்று அவர்களுக்கு அறிவுரை கூறுவதோ வாதிப்பதோ வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது தான்.--இரவி (பேச்சு) 06:11, 30 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
ஒரு முறை பிரித்தானியப் புலப்பெயர்வுக்கு விண்ணப்பித்திருந்த ஒருவரது வழக்குக்காக உரைபெயர்ப்புச் செய்யுமாறு அந்நாட்டுச் சட்ட அலுவலகமொன்று கேட்டுக் கொண்டது. அப்போது அவர் தன்னை சமலிங்கிகர் (සමලිංගික) என்று சிங்களத்தில் அடையாளப்படுத்தினார். சிங்கள மொழியில் முற்றிலும் பாலியலுடன் தொடர்புள்ள சொற்களாலேயே இதனையொத்த சொற்கள் ஆக்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்திலும் sex, sexuality, homosexual என்றவாறே இச்சொற்கள் பாலியலுடன் தொடர்புள்ளனவாகவே காணப்படுகின்றன. தமிழில் மட்டும்...!--பாஹிம் (பேச்சு) 06:15, 30 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
நம்பி, நங்கை என்று சொன்னால் அத்தகைய பெயர் வைத்திருப்பவர்களும் தமிழும் புண்படுகிறது என்பதை ஏற்றுக் கொள்ளும் நாம் ஏன் குறிப்பிட்டவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக் கூடாது? Homesexuality என்ற துறைக்கு பாலியல் என்னும் சொல் வருமாறு பெயர் வைப்பது தவறன்று. ஆனால், அதே சொல்லின் அடிப்படையில் மனிதர்களை விளிப்பது சிக்கல். கண் மருத்துவத்துக்கு கண் மருத்துவம் என்பது தான் பெயர். ஆனால், பார்வையவற்றர்களைக் குருடர்கள் என்று அழைப்பதில்லை. மாற்றுத் திறனாளிகள் என்கிறோம். அருள்கூர்ந்து இந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு மொழியிலும் ஒரு சொல் எப்படி வழங்குகிறது என்பதற்குக் சமூக, வரலாற்றுக் காரணிகள் உள்ளன. மாற்றுத் திறனாளிகள் என்ற சொல் தமிழில் இருக்கிறது. மற்ற மொழிகளில் இல்லாமல் இருக்கலாம். அதற்காக நாம் பின்னோக்கி நகர்ந்து அவர்கள் ஊனர்கள் என்றே அழைக்க வேண்டும் என்றில்லை. LGBT விசயங்களைப் பொருத்தவரை, தமிழில் கடந்த 15 ஆண்டுகளக்கும் மேலான சமூகச் செயற்பாட்டியம் இருக்கிறது. திருநங்கைகளுக்கான தேசிய அளவிலான சட்ட முன்வரைவே தமிழ்நாட்டில் இருந்து தான் முன்வைக்கப்பட்டுள்ளது. இது தவிர, உலகளாவியப் போக்குகளும் உள்ளன. இவற்றைக் கருத்தில் கொண்டே சொல்லாக்க முடியும். --இரவி (பேச்சு) 06:21, 30 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஊனமுற்ற சிறுவர் இல்லம், குருடர் செவிடர் பாடசாலை போன்ற பதப் பிரயோகங்கள் தவறானவையா?--பாஹிம் (பேச்சு) 07:10, 30 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

தமிழ்நாட்டு அரசின் மாற்றுத் திறனாளிகள் துறை காண்க.

"மாற்றுத் திறனாளிகளுக்குள்ள தனிப்பட்ட திறமைகளைக் கருத்தில் கொண்டு, அவர்களை உடல் ஊனமுற்றோர், குருடர், செவிடர் என்று அழைப்பதைத் தவிர்த்து அவர்கள் மீது சமுதாயம் கொண்டுள்ள கண்ணோட்டத்தை மாற்றுவதற்கென இனி அவர்களை மாற்றுத் திறனாளிகள் என அழைக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது."

தமிழ்ச்சமூகம் ஒரு சொல்லாடலில் முன்னகர வேண்டும் என்கிறீர்களா பின்னகர வேண்டும் என்கிறீர்களா?--இரவி (பேச்சு) 07:46, 30 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

தாம் பயன்படுத்தும் சொற்கள் மக்களை முன்னோக்கி நகர்த்துகின்றனவா அல்லது பின்னோக்கி இழுக்கின்றனவா என்பது அவரவர் பார்வையைப் பொறுத்தது. ஒரு பொருளுக்கு அல்லது விடயத்துக்கு ஒரு சொல்லைப் பயன்படுத்தும் போது குறித்த சொல்லினால் குறிக்கப்டும் கருத்து மனிதர்களுக்கிடையில் அழுத்தமாகப் பதிந்து விடுகிறது. ஊனமுற்றோரை ஆங்கிலத்தில் disabled என்றுதான் கூறுகிறோம். மாற்றுத் திறனாளி என்று கூறினால் அனை எவ்வாறு மொழிபெயர்ப்பது? அதுவும் அங்ஙனமே. மொழிப் பயன்பாட்டை அரசாங்க ஆணையால் மாற்ற முடியாது. கருத்து மனிதர்களின் உள்ளத்தில் பதிக்கும் கருதுகோளையும் மாற்ற முடியாது. சொல்லை மட்டும் அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்க வேண்டுமா?--பாஹிம் (பேச்சு) 08:22, 30 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

எது முற்போக்கு, பிற்போக்கு என்பது காலத்தால் வெளிப்படும். ஒரு காலத்தில் கறுப்பர்கள் என்பதும் நீக்ரோக்கள் என்பதும் அவர்களாலேயே ஏற்றுக் கொள்ளப்பட்ட சொல். இன்று ஆப்பிரிக்கர்கள் என்று குறிப்பிடுவது அரசியல் ஏற்புடையதாக இருக்கிறது. இதே போல் இந்தியச் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட சாதிகளைக் குறிப்பதற்கான சொல்லாடல்கள் குறித்தும் பேச முடியும். சமூகத்தின் சிந்தனைப் போக்குக்கு ஏற்ப சொற்கள் மாறவே செய்யும். இதில் ஒவ்வொருவரின் தனிப்பட்ட சாய்வின் அடிப்படையிலான கருத்துகளைத் தாண்டி அரசியல் ஏற்பு (கவனிக்க அரசு ஏற்பு அன்று) பெற்ற சொற்கள் சமூகத்தின் போக்கினைக் குறிக்கின்றன. எனவே, சொற்கள் மாறிக் கொண்டிருப்பதில் தவறேதும் இல்லை. ஆங்கிலத்திலேயே Specially abled, physically challenged என்று Disabledஐக் குறிப்பதற்கான மாற்றுத் சொற்கள் உள்ளன. ஒரு தமிழ்ச் சொல் தமிழ் மக்களின் புழக்கத்துக்கு வந்த பிறகு புரிந்தால் போதும். அதனை ஆங்கிலத்தில் எப்படி மொழிபெயர்ப்பது என்பதெல்லாம் தேவையற்ற கவலை. எல்லா வேளைகளிலும் அரசு ஆணையிட்டு மொழிப்பயன்பாட்டை மாற்ற முடியாது. ஆனால், அரசே ஒரு சொல்லை எடுத்தாள்கிறது என்றால் அதற்குப் பின்னே உள்ள சமூகச் செயற்பாட்டியத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். திருநங்கை என்பது தமிழ் வலைப்பதிவர் ஒருவர் தன்னுடைய வலைப்பதிவில் உருவாக்கிய சொல். அதனை இன்று அரசும் ஊடகங்களும் எடுத்தாள்கின்றன. இது போன்ற கீழிருந்த மேலான போக்குகளையும் கவனிக்க வேண்டும். Lesbian, Gay ஆகியோரைக் குறிக்க வேர்ச்சொல் அடிப்படையில் சொல்லாக்க பல்வேறு வாய்ப்புகள் இருந்தும் அவர்களைப் புண்படுத்தும் அரசியல் ஏற்பு அற்ற முறையிலேயே சொல்லாக்க வேண்டும் என்று எண்ணுவது விக்கிப்பீடியாவின் நடுநிலை நோக்குக்கு உகந்ததாக இல்லை. நடுநிலை நோக்கு விக்கிப்பீடியாவின் அடிப்படைக் கொள்கை என்பதால் இதற்கு மேலும் இது குறித்து விளக்க ஒன்றில்லை. பாலியல் நாட்டம் அல்லது நடத்தையைக் குறிக்காத வேறு சொற்கள் இருந்தால் பரிந்துரையுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 11:09, 30 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
தமிழ்ப் பேச்சு/எழுத்து வழக்கில் அறிந்தோ அறியாமலோ பல வசைச் சொற்கள் பரவலான வழக்கத்தில் உள்ளன. வட இந்திய மக்களை, சீனர்களை, கறுப்பின மக்களை, இசுலாமியர்களை என்று பல்வேறு மக்களை வசைச் சொற்களால் எழுத்திலும் பேச்சிலும் வழங்குகின்றனர். இவற்றை விக்கியில் எடுத்தாள்வது தவறு. அடையாளம், மதிப்பு, உள்வாங்கும் மனப்பாங்கு தொடர்பான ரவியின் கருத்துக்களுடன் முழுதும் உடன்படுகிறேன். --Natkeeran (பேச்சு) 18:20, 30 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
நானும் இரவியின் கருத்துக்களுடன் உடன்படுகின்றேன். ஆங்கிலமொழியில் இல்லை என்பதும் பொதுவழக்கில் புழங்குகின்றது என்பதுவும் தமிழ் விக்கி முற்போக்கானக் கருத்துக்களை உள்வாங்கி புதிய கலைச்சொற்களை வடிவமைப்பதற்கு மனத்தடையாக இருத்தலாகாது. நாம் பொருத்தமான கலைச்சொல்லை உருவாக்கினால் அதுவே அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும். --மணியன் (பேச்சு) 05:23, 1 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம். இரவியின் கருத்துக்களுடன் உடன்படுகின்றேன். எந்தப் பெயரும் காரணப் பெயராகவே (பொருள் புரியும் வகையில்) இருக்க வேண்டும் என்ற வற்புறுத்தல் அவசியமற்றது. அது வழக்கும் அல்ல. அவை பெரும்பான்மை புகழ்/வசைப் பெயர்களே. விளிம்புநிலை சமூகத்தினருக்கு நல்லதொரு கலைச்சொல்லை அனைவரும் இயைந்து தேர்ந்தெடுக்கும் விருப்பத்துடன்--Booradleyp1 (பேச்சு) 06:50, 1 திசம்பர் 2015 (UTC).[பதிலளி]
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 09:14, 1 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் இந்தச் சொல்வரிசையை அனிருத்தன் வாசுதேவன் உள்ளிட்டவர்கள் பயன்படுத்துவதாகத் தெரிகிறது. என்னைப் பொறுத்தவரை இதுபோன்ற விடயங்களில் தமிழ்ச் சூழலில் அவரொரு கருத்தியல் முன்னோடியும், திசைகாட்டியும் ஆவார். இதேபோன்ற இன்னொன்று: அரசு ஆவணங்களில் காலனி, சேரி போன்ற சொற்களைப் பயன்படுத்துவதை இழிவாகக் கருதுவதையும் கவனத்தில்கொண்டு வருங்காலத்தில் ஏற்படும் கருத்தொற்றுமைக்கேற்ப நமது மொழியை தேவைப்பட்டால் மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த செய்தியைக் காண்க. இப்படித்தான் எங்கள் பகுதியில் ஒரு குறிப்பிட்ட சாதியை மரியாதைக் குறைவான விதத்தில் சுட்டி "___பட்டி" என்ற ஊர்ப்பெயர் இருந்தது. இப்போது அது வாவிடமருதூர் என்ற அழகான பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த தலைமுறையினருக்குப் பழைய பெயர் தெரியாது. - பயனர்:Paramatamil இட்ட கருத்து.
பயனர்:Paramatamil, அனிருத்தன் வாசுதேவன் பற்றிய அறிமுகத்துக்கு நன்றி. அவரை இவ்வுரையாடலில் கலந்து கொள்ளச் சொல்லி மின்மடல் அனுப்பியுள்ளேன். ஏற்கனவே, லிவிங் ஸ்மைல் வித்யா, ஓரினம் குழுவினர், சிருஷ்டி குழுவினர் ஆகியோருக்கும் மடல் அனுப்பியுள்ளேன். இன்னும் ஒரு வாரம் அனைவரின் கருத்துகளுக்கும் பொறுத்திருந்து அடுத்த கட்டம் நோக்கி நகர்வோம். --இரவி (பேச்சு) 08:51, 20 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

வேறு பொருத்தமான சொற் பரிந்துரைகள் வரா நிலையில், பின்வரும் சொற்களை மாற்றுப் பயன்பாட்டுக்குப் பரிந்துரைக்கிறேன்.

  • Lesbian = அகள் (மகள் என்ற சொல்லின் ஒலிப்போடு ஒத்திசையும்).
  • Gay = அகனன் (அகன் என்ற சொல் மகன் என்ற சொல்லின் ஒலிப்போடு ஒத்திசையும் என்றாலும் சிலர் தங்கள் குழந்தைகளுக்கு அகன் என்று பெயரிட்டுள்ளதைக் காண முடிகிறது. ).
  • Homesexual = அகனர்கள்.

அகம் என்ற வேர்ச்சொல்லைக் கொண்டு உருவாக்கிய இச்சொற்கள் வழமையான தமிழ் இலக்கணத்துக்கு ஏற்ப சொல்லாக்கும் முறைகளுக்கு உட்பட்டுள்ளதா என்று உறுதிப்படுத்த வேண்டுகிறேன். நன்றி. கவனிக்க: @செல்வா, Semmal50, உலோ.செந்தமிழ்க்கோதை, and மதனாஹரன்:--இரவி (பேச்சு) 15:32, 27 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

அகம் என்பதன் போலி அகன் எனக் கொள்ளலாம். எனவே அகன்+அள்=அகனள் என வரும்.ஆனால் இதைப் பலுக்குவது சற்றே முயற்சி வேண்டியதாகிறது. அகனி என்பது எளிதாகப் பலுக்கிட உதவும்.இது அகப்பாலினி என்பதன் சுருக்கமாகவும் கருதலாம்.

இதே போல அகன்+அன்=அகனன் என வரும்.இது ஓரளவு சரியே.இதையும் அகப்பாலினன் என்பதன் சுருக்கமாகவும் கருதலாம்.

எச்சொல்லிலும் கடிசொல்லின்று;காலத்துப்படினே.

அதேபோல டிரான்சு எனும் முன்னொட்டுக்குத் தொல்காப்பியர் ஏற்கெனவே பயன்படுத்திய திரி என்னும் அடையைப் பயன்படுத்தலாமா எனக் கருதிப் பார்க்கலாம். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 17:02, 27 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

கருத்துகளுக்கு நன்றி, உலோ.செந்தமிழ்க்கோதை. அகனள், அகனி ஆகிய சொற்களை நானும் எண்ணிப் பார்த்தேன். அகனன் - அகனள் என்று சொற்கள் சீராக இருப்பது நன்று. அகன் என்பது ஆண் விகுதியைச் சுட்டுமோ என்று குழம்பியதால் அகனள் வேண்டாம் என்று எண்ணினேன். அகன் என்பதைப் போலியாக கருதி அகனள் என்று சொல்லாக்கலாம் என்று அறிந்து தெளிவுற்றேன். அகனன், அகனள், அகனர்கள் ஆகிய சொற்கள் ஏற்புடையன. Transgender உள்ளிட்ட மற்ற கலைச்சொற்கள் அனைத்தையும் இன்னொரு பக்கத்தில் ஆய்ந்து சீர்மைப்படுத்துவோம். நன்றி. --இரவி (பேச்சு) 17:25, 27 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 00:50, 29 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

அகம் என்னும் சொல்லுக்கு உள் என்றும் மனம் என்றும் இடம் என்றும் மார்பு என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. எனவே அகனன் அகனள், அகனர்கள் என்பவை லெஸ்பியன், கே, என்னும் ஆங்கிலச் சொற்களுக்குப் பொருத்தமாக இல்லை. சொல்லாய்வு அறிஞர் அருளியார் போன்றவர்களின் கருத்துகளைக் கேட்டு அறியலாம்.--Semmal50 (பேச்சு) 09:23, 29 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

தமிழ் விக்சனரியை நோக்கிய போது பின்வருமாறு குறிக்கப்பட்டுள்ளது. திருநங்கைகளையும் சேர்த்து எல்.ஜி.பி.டி (LGBT) (பெண்விழைபெண், ஆண்விழைஆண், இருபால்விழைஞர், திருநங்கைகள்) என்று ஒன்றாக வகைப்படுத்துதல் எந்த வகையில் பொருந்தும் என்று தெரியவில்லை. முதல் மூன்றும் மனப்பிறழ்வுகள், திருநங்கைகள் உடற்பிறழ்வுகள். (தூற்றுதல் ஒழி!, தினமணி தலையங்கம், 08 பிப் 2012) --Semmal50 (பேச்சு) 12:08, 29 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

செம்மல், கருத்துக்கு நன்றி. இம்மாற்றுப் பெயருக்கான பொருத்தம், காரணம், அணுகுமுறையை மேலே விரிவாக உரையாடியுள்ளோம். தொடர்புடைய சமூகச் செயற்பாட்டாளர்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளோம். எனினும், காலம் தாழ்த்தாமல் உரிய மாற்றம் செய்ய வேண்டிய தேவையுள்ளது. தொடர்ந்து நல்ல மாற்றுப் பெயர்கள் குறித்த பரிந்துரை வரும் போது செயற்படுத்துவோம். நன்றி.--இரவி (பேச்சு) 14:15, 1 சனவரி 2016 (UTC)[பதிலளி]

வேண்டுகோள்-தேடுபொறி அடிப்படையில் தலைப்பு மாற்றம்[தொகு]

சீரொளி என்று இருந்தாலும், லேசர் என்ற சொல்லே அதிக புழக்கத்தில் இருக்கிறது. அதுபோலவே, ரேடார், எயிட்சு, நேட்டோ, ரேம் போன்றவை திகழ்கின்றன. இதுபோல அஃகுப்பெயர் வைக்க இயலாச்சூழ்நிலையில், நீண்ட பெயரை நாம் வைக்க முனைகிறோம். எப்பெயர் அமைந்தாலும், ஒரு பயனர் தேடுபொறியில் தேடும் பொழுது, அறிந்தவற்றிலிருந்தே, அறியாததைத் தேடி அடைகிறார். உருவாக்கப்பட்ட கட்டுரையை பலர் படிக்க, பொதுவான ஒரு தலைப்பு மிகவும் அடிப்படையாகும். ஏற்கனவே, உள்ள கட்டுரைகளுக்கு(பாலியியல் ... பாலின...) ஒப்ப, பொருத்தமான தலைப்பு கிடைக்கும் வரை, பாலியல் சிறுபான்மையர் என்று பெயருக்கு மாற்ற விரும்புகிறேன். மாற்றுக்கருத்து இருப்பின் 15நாட்களுக்குள் தெரிவிக்கக் கோருகிறேன்.--உழவன் (உரை) 05:18, 8 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

இது ஏற்ற தலைப்பாக இல்லை. இத்தலைப்ப மாற்று முன் இது தொடர்புபட்ட பிற தலைப்புக்கள் மாற்றப்பட வேண்டும். முதலில் அவற்றை மாற்ற வேண்டும். --AntanO 05:52, 8 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
@Info-farmer:, பாலினச் சிறுபான்மையினர் (en:Sexual minority) என்ற தலைப்பில் தனிக்கட்டுரை எழுதலாம். ஆனால், LGBT என்பதற்கான தனிப்பெயரும் கட்டுரையும் தேவை. இப்பெயர் தங்களுக்குப் பொருத்தமற்றது என்று பலர் கருதுவதையும் https://en.wikipedia.org/wiki/Sexual_minority#Controversy என்ற பகுதியில் காணலாம். இதே பேச்சுப் பக்கத்தில் மேலே உள்ள நீண்ட உரையாடலைக் காண வேண்டுகிறேன். ஒரு வேளை, தலைப்பு மாற்ற வார்ப்புரு பார்த்து இக்கருத்து கூறியிருந்தீர்கள் என்றால் மேலதிக உரையாடல் தேவையில்லை. காலாவதியான அவ்வார்ப்புரு தற்போது கட்டுரையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. --இரவி (பேச்சு) 08:51, 17 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

முரணும், முடிவும்[தொகு]

தலைப்பு வார்ப்புரு இருக்கும் போதே,தலைப்பு, இரவியால் மாற்றப்பட்டுள்ளது. பிறகு, தலைப்பு வார்ப்புருவை இட்டு, ஏன் உரையாட வேண்டும் என்றே எண்ணுகிறேன். மற்றொன்று, நீக்கப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சோதனை முயற்சி என்று நீக்கல் பரிந்துரையில் கூறப்படுகிறது. என்ன சோதனை? அதற்கான விவரமும் இப்பக்கத்தில் இல்லை. இது முரணாக உள்ளது. இப்புரியாத நடைமுறைகள், நமது விக்கிக்கு அரணாகாது என்றே எண்ணுகிறேன்.

  • நீக்கப்பட வேண்டிய கட்டுரைக்கு, ஏன் தலைப்பு மாற்ற வேண்டும்?
  • இந்த வார்ப்புருவை எப்படிதான் பயன்படுத்த வேண்டும்?
  • இக்கட்டுரையை நீக்க வேண்டாமென்று பரிந்துரைக்கிறேன். வார்ப்புருக்களை நீக்கப் பரிந்துரைக்கிறேன். நீக்கல் வார்ப்புரு, இக்கட்டுரையில் இருந்து அகற்றப்பட்டால், இக்கட்டுரையில் பங்களிப்பேன். அதுவரை, இந்த உரையாடலில் இருந்து விடைபெறுகிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 02:20, 9 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
@Info-farmer:, கட்டுரையின் வரலாற்றைப் பார்க்க வேண்டுகிறேன். சூன் 28, 2015 அன்று தலைப்பு மாற்ற வேண்டுகோள் இடப்பெறுகிறது. அதன் பிறகு இப்பேச்சுப் பக்கத்தில் நடந்த உரையாடலுக்கு ஏற்ப சனவரி 1, 2016 அன்று தலைப்பை மாற்றியுள்ளேன். ஆனால், தலைப்பு மாற்ற வார்ப்புருவை நீக்க மறந்து விட்டேன். அதனாலேயே, இக்குழப்பம். தற்போது தலைப்பு மாற்ற வார்ப்புருவை நீக்கியுள்ளேன். நீக்கல் வார்ப்புரு எங்கு இடப்பட்டிருக்கிறது என்று சுட்ட முடியுமா? நன்றி.--இரவி (பேச்சு) 08:44, 17 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
@Ravidreams:நீக்கல் வார்ப்புரு, பக்கப்பதிவேட்டில்(வரலாறு) இல்லை. ! ஆனால், முன்பு இருந்தது. கட்டுரையின் வார்ப்புருவினுள் அவ்வார்ப்புருவை இட்டு காட்டியிருக்க வாய்ப்புண்டு. மற்றொன்று பக்கம் பார்க்கப்பட்ட புள்ளி விவரம் வேலை செய்யாததால், இக்கட்டுரையை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பதை அறிய முடியவில்லை. அதனால் இந்த தலைப்பை எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள் என்பதை எட்ட முடியவில்லை. பலரும் ஒரு கட்டுரையை படிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். வார்ப்புரு நீக்கியது மகிழ்ச்சி. வணக்கம்.--உழவன் (உரை) 23:34, 18 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]


Lesbian, Gay, Bisexual, Transgender[தொகு]

அறிவிப்பு: இப்பக்கத்தின் தலைப்பு தன்னிச்சையாய் உள்ளது. குறிப்பிட்ட சமூகத்தார் பரவலாக ஏற்றுக் கொள்ளாத ஒரு பெயர் ஒருசில வலைத்தள அட்மின்களின் தன்னிச்சையான பெயர்சூட்டலின் அடிப்படையில் எந்த ஒரு அங்கீகாரமும் இன்றி சூட்டப்பட்டுள்ளது. நம்பி அல்லது நங்கை என்னும் சொற்கள் திருநம்பி அல்லது திருநங்கைகளை அதுவும் திரு என்னும் அடைமொழியோடு பயன்படலாமே ஒழிய, மகிழ்வர்களுக்கு பயன்படுத்தக் கூடாது. மேலும் குறிப்பிட்ட சமூகத்தார் மகிழ்வன்/ மகிழினி என்பதைத் தங்கள் அதிகாரப்பூர்வ பெயராக அமைவித்த போதிலும், அந்த பெயரின் பெயரில் திரைப்படங்கள் வந்து விட்ட போதிலும், இயக்கங்கள் செயல்படும் போதிலும், அதை ஏற்க மறுத்து தன்னிச்சையாக தமிழில் பெயர்களை உருவாக்கம் செய்வதைக் காணும் போது தொகுப்பாளர்களுக்கு காட் காம்ப்ளக்ஸ் உள்ளதாகத் தெரிகிறது. குறிப்பிட்ட பக்கத்தின் தலைப்பு அஃபென்சிவ் ஆனது என்று உரையாடல் பக்கத்தில் தெரிவித்த பின்பு, பெயரை மாற்றி கட்டுரையை தக்க மேற்கோள்களோடு தமிழ்ச் சொல்லாடலுக்கான அர்த்தம் வழங்கிய விடத்தும், பக்கத்தை மீளமைவு செய்திருப்பது, ஏற்றுக் கொள்ள மாட்டாதது. அர்த்தமில்லாத தலைப்பு அவரசரமாக மாற்றப்பட வேண்டும் என்பதற்காகவே நான் தலைப்பை மாற்ற வேண்டி இருந்தது. எனினும் நான் அனுமதி கேட்கவில்லை என்று கூறும் இடத்தது அல்லது விக்கிப்பீடிய கொள்கைகளை மீறி விட்டேன் என்று நினைக்கும் இடத்து அட்மினிடம் இந்த பக்கத்தை குறித்து ஒரு முடிவுக்கு வரும் மாறு கேட்டுக் கொள்கிறேன்.

"அன்புடையோருக்கு, மகிழ்வர் என்கிற சொல்லே தற்பால் விழைவோரைக் குறிக்கப் பயன்படும், புழக்கத்தில் உள்ள சொல்லாகவும் உள்ளது. ஒரு பெயரென்பது அது குறிக்கும் சமூகத்தாரின் மனமொக்க இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். மேலும் ஆங்கிலத்தில் பயன்படும் கே என்கிற சொல்லின் மொழிப்பெயர்ப்பாக வந்தது தான் இந்த மகிழ்வன் என்கிற சொல். மகிழ்ச்சிக்கு உவகை, களிப்பு உள்ளிட்ட வேறு பல சொற்கள் உள்ளன என்பதை நாம் அறிகின்ற போதிலும், அத்தகை சமூகத்தார் விரும்பும் பெயரே அதிகார்ப்பூர்வமாய் அமையும் (அமையப் பெற்றிருக்கின்றது) என்பதைக் கருத்தில் கொண்டு இந்த பக்கத்தின் தலைப்பை மாற்றி அமைக்கிறேன். மகிழ்வர் என்கிற சொல் சமூகத்தார் அல்லாத பிறரைப் புண்படுத்தினாலோ குழப்பத்துக்கு உள்ளாக்கும் சொல் என்று வாதிடும் பட்சத்திலோ, அச்சொல்லை மாற்ற நமக்கு எந்த உரிமையும் இல்லை என்பதைத் தெளிவுப் படுத்த விரும்புகிறேன். பாலின அடையாளம் என்பது கொண்டாடப்பட வேண்டியது என்பதை மனம்பால் வைத்து அச்சொல்லை அந்தச் சமூகத்தைக் குறிக்கும் சொல்லாய் பெருமையுடன் அறிவிப்பதில் என்னுடன் சேர்ந்து மகிழ்ச்சி கொள்வீரென நம்புகிறேன்."

இவருக்கு : Antan--−முன்நிற்கும் கருத்து Vetrrich Chelvan (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

என்னுடைய பேச்சுப்பக்கதில் சில கருத்திட்டுள்ளேன். மேலதிகமாக சில...
  • தமிங்கிலம் தவிர்த்து உரையாடவும். தமிங்கில உரையாடல்களில் எனக்கு ஆர்வமில்லை. சரியான தமிழில் உரையாட முடியாதவர் எப்படி கட்டுரை எழுதுவார் என்ற ஏரணத்தைக் கவனிக்கவும்.
  • ... தொகுப்பாளர்களுக்கு காட் காம்ப்ளக்ஸ் - இது என்னவென்று விளங்கவில்லை. ஆனால் ஒருவரை சாடுவதாகத் தெரிகிறது. தனிநபர் விமர்சனம் செய்தால் தடை செய்யலாம். இதை இறுதி அறிவிப்பாகக் கொள்ளவும்.
  • ...மகிழ்ச்சி கொள்வீரென நம்புகிறேன்.' - ஒருமையில் என்னாலும் பதில் அளிக்க முடியும்.
  • பாலின அடையாளம் என்பது கொண்டாடப்பட வேண்டியது என்பதை மனம்பால் வைத்து அச்சொல்லை அந்தச் சமூகத்தைக் குறிக்கும் சொல்லாய் பெருமையுடன் அறிவிப்பதில் என்னுடன் சேர்ந்து மகிழ்ச்சி கொள்வீரென நம்புகிறேன். - Lesbian, Gay, Bisexual, Transgender வகையில் நான் இல்லை. இதனுள் தேவையற்று மற்றவரைத் திணிக்க வேண்டாம்.
  • அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் கட்டுரையின் தலைப்பை மாற்ற பரிந்துரைச் செய்யலாம் அல்லது தலைப்பை மாற்றுக என வார்ப்புருவை கட்டுரைகளில் இணைக்கலாம். மாறாக ஏனைய பயனருடன் உரையாடல் இன்றி பக்கத்தின் தலைப்பை நகர்த்துவது என்பது விக்கிப்பீடியாவின் கொள்கைக்கு எதிரானதும் அனுமதிக்கப்படாததும் ஆகும். என்பது பெயர் மாற்றத்திற்கான வழிகாட்டல். அது இங்கு மீறப்பட்டது. ஆகாவே, அதனை முன்னைய நிலைக்கு கொண்டு வருதல் தவறல்ல. தயவுசெய்து கொள்கைகளை விளங்கிக் கொண்டு பேசுதல் நன்று.

இவற்றை விளங்கிக் கொண்ட ஏதாவது ஒரு இடத்தில் கருத்திடவும். --AntanO (பேச்சு) 17:27, 9 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

தலைப்பை மாற்றவும்[தொகு]

திருநர் என்ற சொல்லுக்குப் பதிலாக எழுத்துப்பிழையுடன் திருனர் என்று எழுதப்பட்டு உள்ளது. எனவே திருத்தும் முகமாக தலைப்பின் பெயரை மாற்றவும். (பார்க்க: https://ta.m.wiktionary.org/wiki/transgender) -CXPathi (பேச்சு)

கவனிக்கவும் - @Kanags: @AntanO: @செல்வா: -CXPathi (பேச்சு)
தற்போதுள்ள தலைப்புக்கூட முடிவுக்கு வராமல் உள்ளதுதான். Lesbian, Gay, Bisexuality, Transgender என்பவை முறையே நங்கை, நம்பி, ஈரர், திருநர் எனலாகாது. மேலுள்ள உரையாடல்களைக் கவனிக்கவும். LGBT என்பதை ந.ந.ஈ.தி என்று எழுதுவதோ இதன் அடிப்படையில் கட்டுரைகள், பகுப்புகள் உருவாக்குதல் சிக்கலானது. நங்கை என்றால் பெண் என்றிருக்க, அதனை Lesbian என்றால் நங்கை என கருத்து மாற்றம் செய்வது வேடிக்கையானது! நம்பி (ஆண்) அவ்வாறே. ஈரர் என்பது இருவர் என்ற பொருள் தருகிறது. திருனர்/திருநர் என்னவென்றே விளங்கவில்லை. --AntanO (பேச்சு) 15:29, 8 செப்டம்பர் 2021 (UTC)
  1. நம்பி, நங்கை போன்ற சொற்களை அவர்கள்தான் பயன்படுத்துகிறார்கள். (ஓரினம்.நெட், சிருஷ்டி, பால்புதுமை முதலிய தளங்களில்). ஒரு சில சொற்களின் பொருள் கால ஓட்டத்தில் பொருள் மாறுபாடு கொள்வது இயல்பு என்றே நினைக்கிறேன். (எ.கா : குடி என்னும் சொல் இன்று மக்கள், சிவிலியன் முதலிய பொருளில் பயன்பாட்டில் உள்ளது. திருநாவுக்கரசருக்கு அச்சொல்லின் பொருள் அடிமைத்தனம்)
  2. நங்கை, நம்பி முதலிய சொற்களை விட எனக்கும் உகவர், மகிழ்நன் முதலிய சொற்களே உவப்பாக தோன்றுகிறது. ஆனால் ஏற்கனவே விக்கியில் இருந்ததாலும் அச்சமூகத்தின் தளங்களில் பயன்பாட்டில் உள்ளதாலுமே நான் நம்பி, நங்கை முதலிய சொற்களைக் கையாண்டேன்.
  3. trans manஐக் குறிக்க திருநம்பி என்ற சொல்லும் trans woman ஐக் குறிக்க திருநங்கை என்னும் சொல்லும் பயன்பாட்டில் உள்ளன. பால் வேறுபாடின்றி trans person / trans gender ஆகிய சொற்களுக்கு நிகராக திருநர் என்னும் சொல் பாவிக்கப் படுகிறது. (ஓட்டுநர், இயக்குநர் போல திருநர். திருனர் அல்ல)
  4. தலைப்புகள், பகுப்புகள் ஆகியவற்றில் திருத்தங்கள் செய்வது சிக்கலானது என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அனைவரும் ஏற்றுக்கொண்ட கலைச்சொல் இல்லையென்பதால் விக்கிப்பீடியாவில் இது தொடர்பான விரிவான கட்டுரைகள் இடம்பெறாதது இன்னும் சிக்கலானது என்றே நினைக்கிறேன். பாலீர்ப்பு, பாலினம் முதலியன சார்ந்து குழப்பம் உள்ளவர்களுக்கு தகவல் தொகுப்பாக விக்கிப்பீடியா இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். விக்கியின் கொள்கைகளும் அதற்கு ஆதரவாகவே உள்ளன. அன்புடன், CXPathi (பேச்சு) 17:35, 8 செப்டம்பர் 2021 (UTC)
    நம்பி, நங்கை போன்ற சொற்கள் மாற்றுப் பாலினத்தவரை மட்டுமே பொதுவாகக் குறிக்கும் என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். இதுதவிர ஈரர், திருனர் என்பது முற்றிலும் பொருத்தமற்ற தமிழுக்குப் பரிச்சியமற்ற தனிநபரால் உருவாக்கப்பட்ட சொற்களாகும். இப்பக்கத்தின் தலைப்பு எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் மன உளைச்சலையும் அளிக்கிறது. ஏற்கனவே எங்களைப் போன்ற gayகளை முழு ஆணாக ஏற்றுக்கொள்ளாமல் ஒருசிலர் கேலியும் கிண்டலும் செய்கின்றனர். இன்றளவும் gay என்றால் முழு ஆண் இல்லை என்ற தவறான கருத்து நிலவுகிறது. இங்கு நம்பி என்ற தலைப்பு எங்களுக்கெதிரான homophobic மனநிலையைத் தூண்டுகிறது. எனவே இத்தலைப்பு கூடிய விரைவில் நிச்சயமாக மாற்றப்பட வேண்டும். JamalJL (பேச்சு) 04:08, 29 மார்ச் 2022 (UTC)

தலைப்பு[தொகு]

ஒரு எதிர்பாலீர்ப்பற்ற ஆணாக (gay) எனக்கு இப்பக்கத்தின் பொருத்தமற்ற தலைப்பு அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. ஏற்கனவே ஒருசில எதிர்பாலீர்ப்பாளர்கள் (heterosexuals) எங்களை முழுமையான ஆண் இல்லையென்று தவறாகக் கருதுகின்றனர். இங்கு எங்களுக்கு நம்பி (trans-men) என்ற பொருளில் பெயரிட்டிருப்பது மிகத்தவறானதும் மோசமானதாகும். பிறக்கும் போது பெண்ணாக அடையாளப்படுத்தப்பட்டு, பின்னர் தம்மை ஆணாக உணர்ந்து ஆணாக வாழ்வோர் 'திருநம்பி' என்றழைக்கப்படுகின்றனர். gay மற்றும் transmen இரண்டும் வெவ்வேறான சொற்களாகும். எனவே இப்பக்கத்தின் தலைப்பு எங்களைப் போன்ற எதிர்பாலீப்பற்றவர்களுக்கு எதிரான மனநிலையை மறைமுகமாகத் தூண்டுகிறது. நிச்சயம் விரைந்து மாற்றப்பட்டிருக்க வேண்டிய இத்தலைப்பிற்கு நிர்வாகிகள் "நகர்த்தல் பூட்டு" போட்டிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. பல்லாயிரக்கணக்கானவர் தினமும் காண்கின்ற விக்கிப்பீடியாவில் இதுபோன்ற செயல்கள் நடப்பது வேதனைக்குரியதாகும். JamalJL (பேச்சு) 14:24, 28 மார்ச் 2022 (UTC)

@AntanO:, நம்பி, நங்கை, ஈரர், திருனர் ஆகிய சொற்கள் பொருத்தமற்றவை என்று தாங்களே இந்த உரையாடலில் கூறிவிட்டு தற்போது ஏன் அதே சொற்களுக்கு தொகுப்பை மீளமைக்கிறீர்கள்? நங்கை, நம்பி இரண்டும் மாற்றுப் பாலினத்தவரை மட்டுமே குறிக்கும். இப்படியொரு தவறான தலைப்பு எங்களைப் போன்ற gay இயல்பு ஆண்களுக்கு எதிரான homophobia மனநிலையைத் தூண்டுகிறது. தலைப்பு உடனே மாற்றப்பட வேண்டும். JamalJL (பேச்சு) 03:11, 29 மார்ச் 2022 (UTC)
விக்கிச்சமூக முடிவு எட்டப்படாதவிடத்து தலைப்பை/உள்ளடக்கத்தை மாற்றுதல் பொருத்தமற்றது. கவனிக்க, Wikipedia is not a democracy --AntanO (பேச்சு) 03:54, 29 மார்ச் 2022 (UTC)
நங்கை, நம்பி என்பது முற்றிலும் பொருத்தமற்ற திசைதிருப்புகின்ற குழப்பம் தருகின்ற தலைப்பு. நிச்சயம் விரைந்து மாற்றப்பட வேண்டும். JamalJL (பேச்சு) 03:59, 29 மார்ச் 2022 (UTC)

சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டும் நெறி[தொகு]

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் பால்புதுமை தொடர்பான சொற்களுக்கான வழிகாட்டும் கையேடு தொடர்பான ஆணை ஒன்றை வெளியிட்டுள்ளது. விக்கியில் உள்ள பால்புதுமை பக்கங்கள் அனைத்தையும் அக்கையேட்டில் குறிப்பிட்டுள்ள பதங்களுக்கு மாற்றுவதே முறை. அதன்படி நம்பி, நங்கை ஆகிய சொற்கள் மாற்றப்பட வேண்டும் திருநர் என்னும் சொல்லில் உள்ள எழுத்துப்பிழை களையப்பட வேண்டும். -CXPathi (பேச்சு) 16:30, 7 ஏப்ரல் 2022 (UTC)

கவனிக்கவும் - @Kanags: @AntanO: @செல்வா: @JamalJL: உரிய மறுப்பு யாருக்கும் இல்லை எனில் ஒரு வாரத்தில் நானே மாற்றுகிறேன் -CXPathi (பேச்சு)
இக்கட்டுரையின் தலைப்பை மாற்ற வேண்டுமானால், அதற்கான பரிந்துரையை முன்வையுங்கள். சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டும் கையேடு காட்டியபடி பக்கங்கள் அனைத்தையும் மாற்ற வேண்டிய தேவை என்ன? குறிப்பிட்ட பக்கங்களில் முறையாக உரையாட வேண்டும். மேலும், விக்கி சமூக ஒப்புதல் பெறாமல் ஒரு வாரத்தில் மாற்ற முடியாது. ஒரு வாரத்தில் ஒப்புதல் பெற முடியாவிட்டால், தலைப்பு நீக்க வார்ப்புரு நீக்கப்படும். நிற்க, சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டும் கையேடு எந்தளவில் சரியானது என்பதையும் கவனிக்க வேண்டும். நீதிமன்ற ஒழுங்கு விக்கிக்குச் செல்லாது. எ.கா: சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டும் கையேடு intersex என்பதை "இன்டர்செக்ஸ்" என தமிங்கிலமாக ஒலிபெயர்த்துள்ளது. ஆகவே, சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டும் கையேட்டின் நம்பகத்தன்மை கேள்விக்குட்படுத்தக்கூடியது. --AntanO (பேச்சு) 19:03, 7 ஏப்ரல் 2022 (UTC)
விக்கியில் ந.ந.ஈ.தி என்று ஒரு பகுப்பும் உள்ளது. இக்கட்டுரையின் தலைப்பில் உள்ள நம்பி, நங்கை ஆகிய சொற்களை நீக்கும்போது, அப்பகுப்பின் பெயரையும் மாற்ற வேண்டும் அல்லவா? விக்கி முழுவதும் ஒரே சொற்கள் பாவிக்கப்பட வேண்டியது தானே முறை. நான் மாற்றுக் கருத்துகள் எதுவும் இல்லை என்றால் தான் ஒரு வாரத்தில் மாற்றுகிறேன் என்று கூறினேன். பலரும் இத்தலைப்பில் உரையாட விரும்புவதில்லை என்பதால், யாரும் மறுப்பு கூறாவிடில் அனைவருக்கும் ஒப்புதல் உண்டு என எடுத்துக் கொள்ளலாம் என்பதே என் கருத்து. உயர்நீதி மன்ற கையேட்டை ஊடகனங்களும் தமிழக அரசும் பயன்படுத்துகையில் அதுவே பரவலான அறிமுகம் பெற்ற சொற்களாக இருக்கும். எனவே ஓரிரு சொற்கள் வெறும் தமிழ் ஒலிபெயர்ப்பு ஆக இருப்பினும் அப்படியே கையாள்வது நன்று என்பது என் கருத்து. அல்லது அசொற்களுக்கு மட்டும் வேறு சொற்களை பரிசீலிக்கலாம் -CXPathi (பேச்சு) 02:11, 8 ஏப்ரல் 2022 (UTC)
சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டும் கையேட்டின் நம்பகத்தன்மை கேள்விக்குட்படுத்தக்கூடியது. ஆகவே, இக்கையேட்டினை இங்கு பயன்படுத்த ஒப்புதல் பெற வேண்டும். நிற்க, தற்போதுள்ள தலைப்புக்கான புதிய சொல்லைப் பரிந்துரைக்காமல் புதிதாக எதை மாற்றுவது? தயவுசெய்து வழிகாட்டலைப்பின்பற்றவும் --AntanO (பேச்சு) 09:56, 8 ஏப்ரல் 2022 (UTC)

தலைப்பில் எழுத்துப்பிழை[தொகு]

திருநர் என்ற சொல்லுக்குப் பதிலாக எழுத்துப்பிழையுடன் திருனர் என்று எழுதப்பட்டு உள்ளது. எனவே திருத்தும் முகமாக தலைப்பின் பெயரை மாற்றவும். (பார்க்க: https://ta.m.wiktionary.org/wiki/transgender) -CXPathi (பேச்சு) 08:28, 5 மே 2022 (UTC)[பதிலளி]

இவ்விடத்தில் விக்சனரி ஏற்றுக்கொள்ளப்பட்ட மூலமல்ல. --AntanO (பேச்சு) 01:35, 6 மே 2022 (UTC)[பதிலளி]
சரி. சென்னை உயர்நீிமன்றத்தின் வழிகாட்டும் கையேடு பால்புது பக்கங்களிலிருந்து பிபிசி செய்திக்குறிப்பு. மேலும் தமிழ் இலக்கணப்படி, பெயரிடைநிலைகள் ந், ஞ், ப், த், ச், வ் ஆகியன மட்டுமே. 1 2 -CXPathi (பேச்சு) 02:39, 6 மே 2022 (UTC)[பதிலளி]
இங்கு குறிப்பிட்ட சுட்டிகளில் உள்ள கட்டுரைகளிலும் இலக்கணப்பிழைகள் உள்ளன. எ.கா: மெய்யெழுத்து, ஆயுத எழுத்துக்கொண்டு சொல் அமைத்தல். இலக்கணப்பிழை இருந்தால், அது தொடர்பில் கருத்திடலாம். மற்றப்பயனர்களின் கருத்தினையும் கேட்கலாம். --AntanO (பேச்சு) 03:05, 6 மே 2022 (UTC)[பதிலளி]

நேபெ. நேஆ. இ. மா[தொகு]

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் பாலியல் ஈர்ப்பு எதிர்பாலீர்ப்பு என்றழைக்கப்படுகிறது. எனவே ஆணுக்கும் ஆணுக்குமிடையே அல்லது பெண்ணுக்கும் பெண்ணுக்குமிடையே ஏற்படும் பாலீர்ப்பை நேர்பாலீர்ப்பு என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும். ஈரர், திருனர் ஆகிய இரு சொற்களும் கேள்விப்படாத தெளிவற்ற சொற்கள் என்பதால் அவற்றிற்கு மாற்றாக இருபாலீர்ப்பாளர், மாற்றுப் பாலினத்தவர் ஆகிய தெளிவான சொற்களைப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும். எனவே நேர்பாலீர்ப்புப் பெண், நேர்பாலீர்ப்பு ஆண், இருபாலீர்ப்பாளர், மாற்றுப் பாலினத்தவர் (நேபெ. நேஆ. இ. மா) என்ற தலைப்பை பரிந்துரைக்கிறேன். நன்றி. Kathir Ray (பேச்சு) 02:15, 2 சூன் 2022 (UTC)[பதிலளி]

LGBTQIA - சொல்லகராதி[தொகு]

LGBTQIA - சொல்லகராதி ஒன்றைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளதாக அறிகிறேன்.--Kanags \உரையாடுக 00:42, 24 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]

ஆமாம். இங்கு 431ம் வெளியீடு. அதன்படி இக்கட்டுரையின் தலைப்பை தன்பால் ஈர்ப்பாளர், இருபால் ஈர்ப்பாளர், மருவிய பாலினத்தவர் என மாற்றக் கோருகிறேன். -CXPathi (பேச்சு) 14:32, 25 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]
முழுமையான சொல்லகராதி இங்குள்ளது. @தகவலுழவன்: இவற்றை விக்சனரியில் சேர்க்க முடியுமா?--Kanags \உரையாடுக 00:35, 26 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]
விக்சனரியில் சேர்க்கப்பட்டுள்ளது. திருத்தங்கள் இருந்தால் குறிப்பிடவும். ஸ்ரீதர். ஞா (✉) 16:10, 26 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]
இக்கட்டுரையின் தலைப்பை கூடிய விரைவில் மாற்ற கோரிக்கை. SharadSHRD7 (பேச்சு) 05:33, 8 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
தன்பால் ஈர்ப்பாளர், இருபால் ஈர்ப்பாளர், மருவிய பாலினத்தவர் எனத் தலைப்பை மாற்றலாமா?--Kanags \உரையாடுக 00:42, 19 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--AntanO (பேச்சு) 05:08, 20 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
"தன்பால் ஈர்ப்பாளர்" என்றால் தன்மீது ஈர்ப்பு (self attraction) கொள்பவர் என்று தவறாகப் பொருள்படுகிறது. "மருவிய" என்றால் ஒன்றாதல்/இரண்டறக் கலத்தல் என்று பொருள். transgender "மாற்றுப் பாலினத்தவர்" என்றே பரவலாக அறியப்படுகின்றனர்.[1][2][3] Vish Yuva (பேச்சு) 06:34, 7 மே 2023 (UTC)[பதிலளி]
மருவிய பாலினத்திற்கு பதிலாக, திருநர் என்ற சொல்லை பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன் அண்ணா. -CXPathi (பேச்சு)

விளக்கம் தேவை[தொகு]

நங்கை - திருநங்கை இரண்டிற்கும் "திரு" மட்டும் தான் வேறுபாடு. Lesbian என்பது ஒரு பெண் மற்றொரு பெண் மீது கொள்ளும் பாலியல் ஈர்ப்பைக் குறிக்கிறது. இதற்கும் "நங்கை" சொல்லுக்கும் சம்மந்தமேயில்லை. பொதுவாக "நங்கை" என்றால் "கன்னிப்பெண்" என்று பொருள் [1]. Vish Yuva (பேச்சு) 06:28, 7 மே 2023 (UTC)[பதிலளி]

தலைப்பு (2023)[தொகு]

  • நங்கை, நம்பி, ஈரர், திருனர்
  • அகனன், அகனள், இருபால்சேர்க்கை, திருநங்கை
  • நேர்பாலீர்ப்பு பெண், நேர்பாலீர்ப்பு ஆண், இருபாலீர்ப்பாளர், மாற்றுப் பாலினத்தவர்

AntanO (பேச்சு) 06:36, 7 மே 2023 (UTC)[பதிலளி]

நேர் (same) எதிர் (opposite). நேர்பாலீர்ப்பு - தனக்கு நேரான பாலினத்தவர் மீது ஈர்ப்பு கொள்வது. இருபாலீர்ப்பாளர் - ஆண், பெண் என இருபாலினத்தவர் மீது ஈர்ப்பு கொள்வது. மாற்றுப் பாலினத்தவர் - ஆண், பெண் அல்லாத மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்தவர்கள். Vish Yuva (பேச்சு) 06:44, 7 மே 2023 (UTC)[பதிலளி]
  1. பிரசாத், சு அருண். "`க்ரியா' தமிழ் அகராதியில் திருநர் சொற்கள்... மாற்றுப்பாலினத்தவர் பெருமிதம்!". https://www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2023-05-07. {{cite web}}: External link in |website= (help)
  2. webteam. ""பாலினத்தை சொல்ல மாட்டோம்" - பிறந்தது குழந்தை! மகிழ்ச்சியில் டிரான்ஸ் இணையர்! ஆனால்?". Puthiyathalaimurai. பார்க்கப்பட்ட நாள் 2023-05-07.
  3. "'தமிழகத்தில் மாற்றுப் பாலினத்தவர் 12,116 பேர்' - அரசால் திருநங்கைகள் பெறும் பயன்களின் விவரம்". Hindu Tamil Thisai. 2021-12-27. பார்க்கப்பட்ட நாள் 2023-05-07.