பேச்சு:திரிபுக் கொள்கை விசாரணை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரைத் தலைப்பு மாற்ற வேண்டுகோள்[தொகு]

இக்கட்டுரையில் "சமயத்துறப்பு விசாரணை" என்னும் சொல் முறை "inquisition" என்பதன் தமிழாக்கமாகத் தரப்பட்டுள்ளது. "Inquisition of heresies (heretics)" என்ற மத்தியகால அமைப்பு சமயத்துறப்பு பற்றியது அல்ல, தவறான (சமயக்) கொள்கை பற்றியது. (கிறித்தவ) சமயம் சார்பான தவறான கொள்கையை "திரிபுக் கொள்கை" என்று கூறுவது வழக்கம். அதாவது, வழக்கமாக ஏற்கப்பட்ட கொள்கையிலிருந்து "திரிந்த" கொள்கை என்பது பொருள். எனவே இக்கட்டுரைத் தலைப்பை "திரிபுக் கொள்கை விசாரணை" என்று மாற்றுவது பொருத்தமாய் இருக்கும்.--பவுல்-Paul (பேச்சு) 22:41, 30 ஏப்ரல் 2014 (UTC)