பேச்சு:திராவிடக் கட்டிடக்கலை ஒழுங்கு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உறுப்புகள், உறுப்புக்கள் - எது சரி? அதேபோல கருத்துக்கள், கருத்துகள் - எது சரி? இது தொடர்பான இலக்கண விதிகளை யாரேனும் விளக்கினால் நன்று. --ரவி 12:40, 3 மே 2006 (UTC)[பதிலளி]


"திராவிட கட்டிடக் கலை" என்ற சொல்லின் பூர்வீகம் என்ன? எந்த சாத்திரத்தில் அப்படி வரையறுக்கப் பட்டுள்ளது? முதலில் எந்த மொழியில், எந்த நூல், யார் அப்படி பட்டம் கொடுத்தார்கள்? இந்த தகவலிருந்தால் ஆதாரபூர்வமாக இருக்கும்.--விஜயராகவன் 19:27, 29 ஜனவரி 2007 (UTC)

தமிழ் நாட்டிலேயே சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட, மானசாரம், மயமதம் போன்ற பத்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட பழங்காலச் சிற்ப சாஸ்திர நூல்கள் இந்தியக் கோயில் கட்டிடக்கலைப் பாணிகளை நாகர, திராவிட, வேசர என மூன்றாக வகைப்படுத்தியுள்ளன. (மயமதம், அத்தியாயம் 19). அத்துடன் அவற்றின் அமைப்புப் பற்றிய விளக்கங்களும் ஓரளவுக்கு உள்ளன. இதன் அடிப்படையில், 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இந்தியக் கட்டிடக்கலை பற்றி ஆய்வு செய்த பெர்கூசன் என்பவரும் அதன் பின்வந்த ஆய்வாளர்கள் பலரும் இந்தியாவின் தென்பகுதியில் காணப்பட்டதும் வட இந்தியக் கோயில்களிலிருந்து வேறுபட்ட பாணியில் அமைந்திருந்ததுமான கட்டிடக்கலையை திராவிடப் பாணியுடன் இனம் கண்டு திராவிடக் கட்டிடக்கலை என்று குறிப்பிட்டு வந்தனர். பின் வந்த ஆய்வாளர்கள் சிலர் கர்நாடகத்தில் காணப்படும் கோவில்கள் சில தமிழ்நாட்டுக் கோயில் பாணியை விட வேறு பாணியில் இருப்பதாகவும் இதுவே வேசர பாணியாக இருக்கலாம் எனவும் கருதினர். இதனால் திராவிடப் பகுதிகளில் இரண்டு பாணிகள் இருப்பதாகக் கொண்டு, திராவிடக் கட்டிடக்கலை என்று அழைக்கப்பட்டுவந்த கட்டிடக்கலைப் பாணியைத் தமிழர் கட்டிடக்கலை என்று அழைக்கலாம் என்னும் கருத்தை முன் வைத்தனர் (கிரேவ்லி, எஃப். ஹெச், 1999). ஆனாலும், திராவிடக் கட்டிடக்கலை என்பதே இன்னும் புழக்கத்தில் உள்ளது. Mayooranathan 20:24, 29 ஜனவரி 2007 (UTC)

மயூரநாதன், தகவலுக்கு நன்றி. இதை கட்டுரைக்குள்ளேயே இடுக.--விஜயராகவன் 23:55, 29 ஜனவரி 2007 (UTC)