பேச்சு:திண்மப்பொருள் இயற்பியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திண்மப்பொருள் இயல்பியல் திண்மப்பொருள் இயற்பியலுக்கு மாற்றப்பட்டுள்ளது. இயல்பியல் நல்ல சொல் என்றாலும், பொது வழக்கம் இயற்பியல் ஆகும். திண்மப்பொருள் இயல்பியலுக்கு பக்க வழிமாற்றம் தரப்பட்டுள்ளது. --Natkeeran 01:51, 25 மே 2006 (UTC)[பதிலளி]

இயல்பியல்[தொகு]

இயற்பியல் என்பதே மிகு பரவலாக வழங்கும் சொல். எந்தத் தமிழ் ஆசிரியரைக் கேட்டாலும் சொல்வாகள் இயற்பியல் என்பது பிழையான சொல்லாட்சி என்பதை. இப்படிப்பட்ட திருத்தங்களினால் (இயல்பியல் என்று மாற்றினால்) என்ன என்ன தொல்லைகள் நேரும் என்று நன்கு அறிவேன். இயற்பு+இயல் = இயற்பியல் என ஆகும். இயற்பு என்றால் என்ன? பொருத்தமான சொல்லா?

இயல்பு + இயல் = இயல்பியல் என்பது பொருத்தமானதாக இருக்கின்றது என்ற உங்களுடைய கருத்து சரிதான். இதைப்பற்றி இராம்.கி அவர்களும் விளக்கமாக எழுதியுள்ளார். இயற்கையை ஆயும் இயல் இயற்பியல் என்று அவர் சமாதானம் கொள்கின்றார்.
பரவலான பொது வழக்கத்தில் இருக்கும் தமிழ் சொற்களை பெரிதும் மாற்றி எழுதுவதில்லை என்பது த.வி.வில் வழங்கும் ஒரு புரிந்துணர்வு. மேலும் திண்மப்பொருள் இயல்பியல் என்ற சொல்லை பக்க வழிமாற்றம் (page redirect) செய்யலாம். --Natkeeran 16:21, 25 மே 2006 (UTC)[பதிலளி]

கோபி, இக்கட்டுரையை நீக்க வேண்டாம் நான், தகவலை சேர்க்கிறேன். நன்றி. --Natkeeran 01:40, 3 டிசம்பர் 2006 (UTC)

அன்பர்களே,இயற்பு என்பது நல்ல, இலக்கண வரம்புக்குட்பட்ட தமிழ்ச் சொல். தமிழ் இலக்கியங்களில் (எ-டு: திருமூலரின் திருமந்திரம்) ஆளப்படும் சொல். எனவே, physical chemistry = இயற்பு வேதியியல், physical proceeses = இயற்பு செயல்முறைகள், physics = இயற்பியல், metaphysical explanation = மீயியற்பு விளக்கம். ~ நா. கணேசன்