பேச்சு:தாய் (மொழி)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இத்தாலி-இத்தாலியம், தாய்லாந்து-தாய்லாந்தியம் என்று பெயரிட்டால் பொருட்பிழை நேராது. தாய் (மொழி) என்பது உகந்த சொல்லல்ல.எனவே, கட்டுரைத் தலைப்பினை, பெயர் மாற்றக்கோருகிறேன்.17:01, 21 அக்டோபர் 2011 (UTC)உழவன்+உரை..


தாய்லாந்து மொழியில் இது பாசா தாய் என்றே அழைக்கப்படுகிறது. எனவே தாய் (மொழி) என்பது பொருந்துகிறது. தாய்லாந்தியம் என்பது ஏதோ தாய்லாந்துத் தத்துவம் போல் தோற்றம் தருகிறது. இத்தாலிய மொழி இத்தாலியானோ என அழைக்கப்படுகிறது. இத்தாலியம் என்பதை விட இத்தாலிய மொழி அல்லது இத்தாலியானோ கூடப் பொருத்தம்.--Kanags \உரையாடுக 21:13, 21 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
//தாய்லாந்தியம் என்பது ஏதோ தாய்லாந்துத் தத்துவம் போல் தோற்றம் தருகிறது// ஆம். எனவே, Kanags பாசா தாய் என்றே பின்பற்ற விருப்பம். ஏனெனில், அடைப்புக்குறியினுள் எழுதுவதைத் தவிர்ப்பது, நிரல் மேலாண்மைக்கு நல்லது. பல நேரங்களில் பிறரின் நிரல்களையே பயன்படுத்த வேண்டியுள்ளது. அப்பொழுது இதனால் இடர் வருவதை கவனித்ததால், இதனைத் தெரிவிக்கிறேன். மற்றொரு காரணம் மூல மொழியின் ஒலிப்பைத் தமிழில் எழுத இயலும் என்பதாலும் பின்பற்றுகிறேன்--உழவன் (உரை) 06:32, 7 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]
@Info-farmer:, பாசா தாய் என எழுதுவது தமிழ் விக்கிப்பீடியாவில் பொருந்தாது. தலைப்புகளில் அடைப்புக்குறிகள் இடுவது விக்கிப்பீடியாவில் வழமையானது தானே. நிரலை பொருத்தமானதாக மாற்றியமையுங்கள்:). --Kanags (பேச்சு) 06:47, 7 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]
//தமிழ் விக்கிப்பீடியாவில் பொருந்தாது.// தமிழ் விக்கிப்பீடியாவில் மாற்றவில்லை.--உழவன் (உரை) 06:49, 7 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தாய்_(மொழி)&oldid=2585522" இலிருந்து மீள்விக்கப்பட்டது