பேச்சு:தாய் விக்கிப்பீடியா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆங்கிலத்தில் தாய் என்பது எந்தக் குழப்பத்தையும் ஏற்படுத்தாது. ஆனால் தமிழில் இது பரவலாக அன்னை என்பதற்கு பயன்படுத்தப்படும் சொல்லாகும். எனவே தாய் என்றவிடத்தில் தாய்லாந்து என்று (தாய்லாந்து விக்கிப்பீடியா, தாய்லாந்து மொழி) ஒட்டு சேர்ப்பது நலம் என்பது எனது கருத்தாகும். --மணியன் (பேச்சு) 13:42, 12 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியாக்கள் மொழி வாரியாகவே உருவாக்கப்படுகின்றன. எனவே தாய்லாந்து விக்கிப்பீடியா என அழைப்பது பொருத்தமற்றது.--Kanags \உரையாடுக 21:10, 12 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
கனகு, நான் கூற வந்தது வேறு. இந்தக் கட்டுரைக்கு தாய்லாந்து மொழி விக்கிப்பீடியா எனலாமே. வெறும் தாய் என்ற ஒட்டை பாவிக்காது தாய்லாந்து என்ற ஒட்டைப் பாவிக்கலாமே என்பதே எனது கருத்து. காட்டாக இந்த விக்கிப்பீடியாவின் மொழி தாய் மொழி என்றிருக்கிறது. அது குழப்பமாக இல்லையா ? அல்லது அம்மொழி ஒலிப்புக்களை உள்வாங்கி இடாய்ச்சு, எசுப்பானியம் போல வேறு சொல்லாவது ஆக்கினால் நன்றாக இருக்கும்.--மணியன் (பேச்சு) 04:27, 13 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
குழப்பத்தைத் தவிர்க்க தாய் என்பதை சாய்வெழுத்தில் எழுதலாம். அடைப்புக்குறியில் தாய்லாந்து நாட்டின் அலுவல் மொழி என குறிப்பிடலாம். தாய்லாந்தில் தாய் மொழியுடன் வேறு சில மொழிகளும் இருப்பதால், இதனைத் தாய்லாந்து மொழி என்று குறிப்பது தவறாகும். அப்படி எழுதுவது இந்தி மொழி என்பதற்குப் பதில் இந்திய மொழி என்பதற்கு ஈடாகும்--இரவி (பேச்சு) 06:01, 13 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
எனது எடுத்துக்காட்டுக்களை விட்டு விடுங்கள் ;) நான் கூற விழைந்தது இந்தக் கட்டுரைக்கு மட்டுமல்ல. பொதுவான தாய் என்ற பண்புச்சொல்லிற்கு. நீங்கள் கூறியதுபோல சாய்வெழுத்தில் எழுதலாம். இருப்பினும் அது நடைமுறையில் எவ்வளவு எளிதென்று எனக்குத் தெரியவில்லை. தோய் என்று எழுதினால் அது அந்தவூர் உச்சரிப்புடன் வெகுவாக வேறுபடுமா ? அல்லது அது போன்ற பரிந்துரைகள்... --மணியன் (பேச்சு) 06:35, 13 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
நீங்கள் குறிப்பிடும் சிக்கல் புரிகிறது மணியன். அவ்வாறு வரும் இடங்களில் சிறிது முன்னுரையில் விளக்கிவிட்டு எழுதலாம். "தாய்லாந்து நாட்டில் பேசப்படும் மொழிகளில் தாய் எனும் மொழி பரவலானது." என்பது போல ஏதாவது வரி இருந்து அதன் பின்னால் தாய் மொழி என்றால் குழப்பம் வராது என நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 06:52, 13 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

──────────────────────────────────────────────────────────────────────────────────────────────────── //குழப்பத்தைத் தவிர்க்க தாய் என்பதை சாய்வெழுத்தில் எழுதலாம்.// சாய்வெழுத்தில் எழுவது பொருத்தம் என நினைக்கிறேன். --Anton (பேச்சு) 07:17, 13 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

சரி. சாய்வெழுத்து தற்போதைய தீர்வாக இருக்கட்டும். அனைவருக்கும் நன்றி--மணியன் (பேச்சு) 08:35, 13 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]