பேச்சு:தாய்லாந்து தமிழர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறிப்புகள்[தொகு]

--Natkeeran 00:10, 28 டிசம்பர் 2007 (UTC)

குறிப்புகள்[தொகு]

"தாய்லாந்திலுள்ள தமிழர்களை இரு பிரிவாகப் பிரிக்கலாம். தமிழ்-தாய் இனக்கலப்பு மூலம் தோன்றியத் தமிழர்கள், இனக்கலப்பு இல்லாத தமிழர்கள். இனக்கலப்பு இல்லாத தமிழர்கள் மிகக் குறைவு. இன்று பாங்காங்கில் மட்டும் தமிழ்ப் படிக்கத் தெரிந்தவர் 500 பேர். புக்கட் எனுமிடத்தில் தமிழ் பேசத் தெரிந்த சிறு தமிழ் வியாபாரிகள் 100 பேர் இருக்கின்றனர். வடக்கில் பர்மா எல்லையருகே பலகாலமாக மேசாட் எனுமிடத்தில் 30 அல்லது 35 தமிழர் குடும்பங்களும், சியாங்ரெய் எனுமிடத்தில் 5 அல்லது 6 தமிழ்க் குடும்பங்களும், காஞ்சன புரியில் 10 அல்லது 15 குடும்பங்களும் இருக்கின்றன. தொடக்கத்தில் தமிழர் கால்நடை வாணிபம் செய்தனர்."

"தாய்லாந்தில் சுமார் 1000 தமிழ் முஸ்லீம்கள் குடியேறியிருக்கின்றனர். இவர்களில் பலர் தாய் குடிமக்களாக மாறி விட்டனர். பாங்காங்கில் வாட்கோ பகுதியில் இவர்கள் மிகுதியாக இருக்கின்றனர். அங்கே ஒரு மசூதியும் உண்டு. மாரியம்மன் கோவில் எதிரில் பள்ளிவாசல், தாய் முஸ்லிம் மசூதி இருக்கின்றது. பல மரைக்காயர் குடும்பத்தினர்கள் தாய்லாந்தில் குடியேறி இருக்கின்றனர். சுமார் 500 பேர் வைர வணிகம், துணி வணிகம் செய்கின்றனர். துணியகம், உணவு விடுதி, ஏற்றுமதி, இறக்குமதி வணிகம், மிளகாய், அரிசி வணிகம் செய்கின்றனர். சிலர் அரசு நிறுவனங்களிலும் பொறியாளர் களாகவும் பணிபுரிகின்றனர். மேலும் வண்ண கற்கள், அரிய வைரமான பாம்பே வைரம், சபையர், ரூபி, விலை மதிப்புள்ள கற்கள் முதலியவைகள் தொடர்பான வணிகம் செய்கின்றனர்."

[1]