பேச்சு:தருக்கப் படலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கையில் படலை எனப்படுகிறது, இந்தியாவில் வாயில் எனப்படுகிறது. எதுக் கூடப் பொருத்தமான சொல்?--Natkeeran 01:00, 20 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

படலை என்னும் சொல் தொடுப்பி (switch) என்னும் பொருளில் பயன்ப்டுத்துகிறார்களா, அல்லது படலை என்றால் கதவு என்னும் பொருளுடையதா என்று விளங்கவில்லை. படலை என்பதற்கு வேறு பொருள்கள் தமிழில் உண்டு. இங்கே பாருங்கள். Gate என்பதற்குக் கதவம் என்பது பொருந்தும் என்பது என் கருத்து. இங்கே logic என்பதற்குத் தருக்கம் பொருந்தாது என்பது என் கருத்து. சரியான சொல் ஏரணம். ஏலும் என்றால் பொருந்தும் "ஒப்புக்கொள்ளக்கூடியது" என்று பொருள் . ஏல் > (ஏல் + கொள்) > ஏற்றுக்கொள் (பொருத்தம் என்று கொள்ளுதல்) போன்ற சொற்கள் வழக்கில் உள்ளது. ஏல் > ஏர் ஏர் என்றாலும் பொருத்தம். தமிழ்ப் பேரகராதி "To be like, similar; ஒத்தல்" என்று கூறுகின்றது. ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் என்னும் திருப்பாவை வரிக்கு அழகான கண்ணுடைய யசோதை என்பார்கள். இங்கே அழகு என்பது பொருத்தம் என்னும் பொருளில் அமைந்தது. ஏர் என்றால் பொருத்தம் என்று பொருள். இதிலிருந்தே ஏரணம் = பொருந்துவதாக அமையும் கருத்தடுக்குகள் வைக்கும் முறை என்னும் பொருளில் logic என்பதற்கு வழங்குகின்றது. ஏரணக் கதவம் = logic gate என்பது பொருத்தமான தேர்வு என் கருத்து. தருக்கம் என்றால் arguement. ஆனால் தருவித்தல் என்று தமிழ்வழி பொருள் கொண்டு சொன்னால் பொருந்தும். ஆனால் இங்கே தருவித்தல் அல்ல "தர்க்க" சாத்திரம் என்னும் வடமொழிப் பொருளில் ஆளப்படுகின்றது. இதன் பொருள் ஆங்கிலத்தில் argument என்பார்களே அதுதான் தமிழில். தர்க்கம் பண்ணாதே என்றால் 'dont argue'. --செல்வா (பேச்சு) 13:42, 8 மார்ச் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தருக்கப்_படலை&oldid=1059033" இலிருந்து மீள்விக்கப்பட்டது