பேச்சு:தமிழ்நெட்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது pro LTTE media என சில இலங்கை ஆங்கிலசிங்கள பத்திரிக்கையில் குறிப்பதுண்டு. இதுபற்றியும் கட்டுரை இருக்கவேண்டுமென நினக்கிறேன்.--கலாநிதி 16:47, 14 அக்டோபர் 2006 (UTC)

கலாநிதி, கருத்துக்களுக்கு நன்றி ஆயினும் நான் வேலைசெய்யும் அமைப்பின் கொள்கைப்படி இவ்வாறான கருத்துக்களை என்னால் வெளியிடமுடியாது. ஆங்கில விக்கிப்பீடியாவில் இவ்வாறான கருத்துக்களைத் தெரிவித்ததால் பெரும் சண்டையே பேச்சுப் பக்கத்தில் காணப்படுகின்றது. தவிர வள்ளுவர் குறிப்பிட்டபடி "தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு" இவ்வாறான கருத்துக்கள் விக்கிப்பீடியர்களின் கருத்துப்பிழவுகளுக்கும் வழிவகுக்கலாம். தமிழ்விக்கிபீடியாவில் பங்களிப்பவர்கள் மிகக்குறைவு அதிலும் கருத்துப்பிழவு ஏற்பட்டுவது நல்லதல்ல. வள்ளுவரும் "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு" என்றே கூறியிருக்கின்றார் எந்த ஊடகத்தையாவது நாம் முழுமையாக நம்பமுடியாது. இலங்கையில் உள்ள எந்தஒரு ஊடகமும் நானறிந்தவரையில் வியாபாரநோக்கில் இனப்பிரச்சினைகளைத் தூண்டிவிட்டு அதில் குளிர்காய்வதிலேயே குறியாகவுள்ளனர். சமாதானத்திற்கும் அபிவிருத்திக்கும் பாடுபடுபவர்கள் மிகக்குறைவே. --Umapathy 17:14, 14 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

Live bookmark[தொகு]

Live bookmark வசதி வருங்காலத்தில் அனேக தளங்களில் வரப்போவது தான். இதை ஒரு கலைக்களஞ்சியத் தகவலாக சேர்க்கத் தேவையில்லை. இது குறித்த படத்தையும் நீக்கலாம்--ரவி 10:00, 15 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

இது எனக்குப் புதிய செய்தி.--Kanags 10:43, 15 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]
ரவி மற்றும் சிறீதரன், உங்களுடைய கருத்துக்களுக்கு நன்றி. Live Book Mark வசதி இணையத்தில் பிரபலமாகி வருகின்றபோதிலும் பாவிக்கின்ற தளங்கள் குறிப்பாக இலங்கையில் குறைவே. காலப்போகில் பிரபலமானல் நீக்கிவிடலாம். இப்போதைக்கு விட்டுவைக்கலாம் என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து. --Umapathy 11:01, 15 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

தமிழ்நெட் இணையத்தளம் வேலைசெய்கின்றதா?[தொகு]

படிமம்:Tracert tamilnet.PNG

இன்று Tracert (லினக்ஸின் Traceroute இற்கு நிகரான) கட்டளையை வழங்கிப்பார்த்தேன் இணையத்தளம் வேலை செய்வதாகத் தெரியவில்லை. வேலைசெய்தால் குறிப்பிடவும். நன்றி. --Umapathy 18:16, 19 ஜூன் 2007 (UTC)

தடைசெய்யப்பட்ட தமிழ்நெட் இணையத்தளத்தைப் பார்வையிட[தொகு]

[வலைப்பதிவு http://mauran.blogspot.com/2007/06/blog-post_20.html]--மு.மயூரன் 19:03, 19 ஜூன் 2007 (UTC)

லினக்ஸ் குருவே தங்களின் தகவலுக்கு நன்றி. மிகவும் பயனுள்ள வலைப்பதிவு. --Umapathy 15:28, 20 ஜூன் 2007 (UTC)

நன்றி மயூரன்.எப்படியோ எநத தடையும் நமக்கு தடையல்ல--கலாநிதி 16:59, 20 ஜூன் 2007 (UTC)

ஒரு நாட்டில் தடை செய்யப்பட்ட இணைய தளத்துக்கு இப்படி பகிரங்கமாக Proxy வழி தந்து தளத்தை காண்பது அந்நாட்டின் சட்டங்களை மீறிய ஒன்றல்லவா ? அப்படி இருக்கையில் விக்கிபீடியா பகிரஙக Proxy இணைப்புகளை இப்படித் தருவது சரியல்ல. பயனர்கள் தானாகவே Proxy சேவர்களை நாடுவது வேறு, நம் ஊடாக Proxyகளை நாடுவது வேறு. முன்னது அவர்கள் அவர்கள் தனிப்பட்ட விஷயம், பின்னது விக்கிபீடியாவையே தொடர்பு படுத்துவதால், Proxy இணைப்புகளை நீக்க வேண்டுகிறேன் வினோத் 08:05, 3 டிசம்பர் 2007 (UTC)

தமிழ்நெட்டை தடைசெய்வது சம்பந்தமாக அதிகாரப் பூர்வமாக இலங்கை அரசு எதையும் எழுத்தில் தரவில்லை அரச வர்த்மானி உட்பட. அப்படித் தந்தவுடன் இதை எதுவித ஆட்சேபனையும் இன்றி நீக்கிவிடுவோம் இப்போதைக்கு இருக்கட்டும். சிலர் இலங்கையில் எதேச்சையாக எடுக்கும் முடிவுகளுக்கு நாம் இணங்க வேண்டும் என்பது கட்டாயமல்ல.--உமாபதி 08:54, 3 டிசம்பர் 2007 (UTC)

அவ்வாறெனில், கட்டுரையில் இந்தக் குறிப்பை சேர்த்து விடவும்(கட்டுரையை படிப்பவர்கள், தடை என்பதை Official Banஆக கருதுவர். அதை unofficial Blocking என மாற்றிவிடவும்). மேலும் கீழ் இணைப்புகளில் 'தடை செய்யப்பட்ட' என்பதற்கு பதிலாக இலங்கையில் அணுக்கம் மறுக்கப்படும் என மாற்றிவிடுக வினோத் 09:10, 3 டிசம்பர் 2007 (UTC)


இந்த விடயத்தில் Proxy இணைப்புகளைத் தருவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. உத்யோக பூர்வமாக இருந்தாலும் ஒரு செய்தி ஊடகத்தை தடை செய்வது அடிப்படை உரிமைகளை மீறுவதாகும். இது எப்படி த.வி தொடர்புடைய சட்டப் பிரச்சினையாகும் என்று தெரியவில்லை. --Natkeeran 01:23, 4 டிசம்பர் 2007 (UTC)


செய்முறை[தொகு]

மீண்டும் அணுக்கம் மறுக்கப்பட்டால் பார்க்கும் முறை[தொகு]

படிமம்:Firefox proxy.PNG
பயர்பாக்ஸ் அநாமதேயப் புறொக்ஸி சேவர் தேர்வுகள்

அநாமதேயப் புரொக்சிகளூடாக இத்தளத்தைப் தாராளமாகப் பார்வையிடலாம். இதற்கு ஒன்றில் அநாமதேயப் புரொக்ஸியான அநாமதேயத் தமிழ்நெட் அல்லது உலாவிகளின் புறொக்ஸி சேவரை (எடுத்துக்காட்டாக பயர்பாக்ஸ் உலாவியில் Tools -> Options ->Network -> Manual Proxy setting 222.143.24.194:8080)[1]அநாமதேயப் புரொக்ஸி ஆக மாற்றலாம். எனினும் அநாமதேயப் புரொக்ஸிகள் பயனர் பெயர் கடவுச் சொல் போன்றவற்றை சில கைப்பற்றிக்கொள்ளும் என்பதால் பயர்பாக்ஸ் உலாவியில் உள்ள profile manager [2]ஐப் பாவித்துக்கொள்ளலாம். இதற்கு முதலில் பயர்பாக்ஸ் உலாவியில் இருந்து முற்றாக வெளியில் வந்துவிட்டு Start ->Run ->firefox -profilemanager என்றவாறு தட்டச்சுச் செய்து வேண்டிய புரொபைல்களை ஆக்கிக்கொள்ளவும் (எடுத்துக்காட்டாக ஓர் அநாமதேயப் புரொபைல் ஒரு சாதார புரொபைல்) பின்னர் தமிழ்நெட்டை அணுகுவதற்கு அநாமதேயப் புரொபைலைப் பாவிக்கவும். தவிர இத்தளத்தில் RSS ஊட்டுவசதிகள் உள்ளதால் இதை RSS ஊட்டுக்களை ஆதரிக்கும் எத்தளமூடாகவும் பிரச்சினையின்றி பார்க்கமுடியுமெனினும் முழுச்செய்தியையும் பார்க்கவியலாது. இத்தளத்தை அணுகுவதை இலங்கையில் தடைசெய்ததை சுதந்திர ஊடகவியலாளர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர். [3]

கூகிள் ஊடாக தமிழ்நெட் RSS ஊட்டுகளைப் பார்வையிடுதல்[தொகு]

படிமம்:TamilNetRSSFeeaddtoGoogle.PNG
  1. இது இது இலங்கை உட்பட எல்லாநாடுகளிற்கும் பொதுவான ஓர் வழிமுறையாகும்.
  2. கூகிள் தேடுபொறியில் http://www.google.com/ig?hl=en ஐத் தேர்ந்தெடுத்து ஜிமெயில் பயனர்பெயர் கடவுசொல்லைக் கொடுத்து உள்நுளையவும். பின்னர் iGoogle ஐத்தேர்ந்தெடுக்கவும்.
  3. அதில் வலதுகைமேல் மூலையில் உள்ள Add Stuff என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்
  4. iGoogle தேடுபொறியில் tamilnet.com என்பதனைத் தட்டச்சுச் செய்யவும்.
  5. additnow என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. இப்போதிருந்து கூகிள் தேடுபொறியில் உள்நுளைந்ததும் தமிழ்நெட் ஊட்டுக்களும் காட்சியளிக்கும்.
  1. பொதுப் புறொக்ஸி சேவர்கள் அணுகப்பட்டது 6 டிசம்பர், 2007
  2. பயர்பாக்ஸ் புரொபைல் மனேஜர் அணுகப்பட்டது [[6 டிசம்பர்] 2007
  3. இலங்கையில் தமிழ்நெட் இணையத்தளத்தின் தடையானது பாரிய சங்கடங்களை உருவாக்கின்றது அணுகப்பட்டது ஜூன் 20, 2007
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தமிழ்நெட்&oldid=1542288" இலிருந்து மீள்விக்கப்பட்டது