பேச்சு:தமிழர் விளையாட்டுகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பட்டியல் 1[தொகு]

தளிர்கள் விளையாட்டுக்கள்* 
** 
நண்பர்களே ! 
நான் சிறுவயதில் விளையாடிய விளையாட்டுக்கள் ஞாபகம் இருந்த வரையில் இங்கு 
எழுதுகிறேன். இதே விளையாட்டுக்கள் ஊருக்கு ஊர் மாறுபட்டிருக்கலாம் இல்லை 
மருவியிருக்கலாம். தெரிந்தவர்கள் இங்கு இட்டால் மகிழ்ச்சி. 


விளையாட்டுக்கள் வீட்டினுள் விளையாடுவது ஒரு வகை. வீட்டிற்கு வெளியே சென்று 
ஆடுவது மற்றொன்று. (indoor / outdoor games). சிறுபிள்ளைகள் (ஆண், 
பெண்)அனைவருமாய் ஆடிய விளையாட்டுக்களில் எனக்கு ஞாபகத்தில் நின்ற, சிறு சிறு 
விளையாட்டையும் தருகிறேன் கீழே.. பின் ஒவ்வொன்றை பற்றியும் விலாவாரியாக 
பேசுவோம். 
வீட்டினுள் ஆடும் ஆட்டங்களில் 


1.தாயம், சோவி 
2.பல்லாங்குழி 
3. ஆடுபுலிஆட்டம் 
4.மூன்றுகல் ஆட்டம் 
5.செப்புசாமான் 
6.கூட்டாஞ்சோறாக்கல் 
7.தத்தைக்கா.. 
8.சங்கு சக்கரம் 
9.பருப்புகட 
10.கள்ளன் போலீஸ் 
11.கிச்சு கிச்சு தாம்பலம் 
12.உருண்டை... 
13.தட்டாங்கல் 
14.ஜோடி சேர்த்தல்( வளையல் துண்டுகளால்) 
15.புத்தக கிரிக்கெட் 
16.என்ன பிடிக்கும் (வார்த்தை விளையாட்டு) 
17.எழுத்து கண்டுபிடித்தல் 
18.கட்டம் நிரப்புதல் 
19.நாடு பிடித்தல் 
20.சீட்டு கட்டு 
21.பெயர் நிரப்பல் 
22.கொக்கு பறபற 
23.மூக்குபொடி 
24.குத்துவிளையாட்டு. 
25.அக்கக்கா சினுகோலி 


இப்படி சில 


வீட்டிற்கு வெளியே 


1.கண்ணாமூச்சி (இதிலே பல வகை உண்டு பல பாட்டும் உண்டு.) 
2.கபடி 
3.பாண்டி 
4.காதுல பூ சொல்லி 
5.பூ பறிக்க வருகிறோம் 
6.ஒரு கொடம் தண்ணியெடுத்து (விளையாட்டின் பிரத்யோக பெயர் மறந்தபடியால் அதன் 
முதல் வார்த்தையை இடுகிறேன்) 
7.பாட்டியும், ஊசியும் 
8.தோசை வார்த்தல் 
9.கொக்கோ 
10.நொண்டி 
11.பச்சைக்குதிரை 
12.எரிபந்து 
13.கோலி 
14.கிட்டிபுள் (அ) குச்சி-கம்பு 
15.கவட்டபுள் 
16.பட்டம் 
17.காத்தாடி 
18.தட்டான் பிடித்தல்(கிராமத்தில் தட்டான், ஓணான் பிடிப்பதெல்லாம் சகஜம்) 
19.டயர் (சைக்கிள் டயர்) ஓட்டுதல் 
20.நுங்கு வண்டி 
21.பேருந்து விளையாட்டு 
22.எட்டாங்கோடு 
23.சோடா போடுதல் 
24.மாட்டுவண்டி 
25.கயராட்டம் (ஸ்கிப்பிங் வகையறா) 
26.கள்ளன் போலீஸ் 
27.பந்தாட்டம் 
28.தொட்டுபுடிச்சி 
29.ஓட்டப்பந்தயம் 
30.நீச்சல் (தண்ணீர் ஆட்டம்) 
31.களிமண் பொம்மை செய்தல், மணல் விளையாட்டுகள் 
32.பெயர் எழுதுதல் (வேம்பங்கொட்டை பால் கொண்டு) 
33.ஊஞ்சல், ஆலமரவிழுது ஊஞ்சல் 
34.தென்னை வண்டி 
35.கல்லா மண்ணா 
36. உஸ்தி 


இன்னும் நான் மறந்தவை நிறைய இருக்கலாம். அனைத்துமே விளையாடியது கனவாகி போனது 
இப்போது. இத்தனை ஆட்டங்கள் இருக்க, இப்போதைய குழந்தைகள் ஏனோ தொலைக்காட்சி, 
வீடியோ விளையாட்டு, என்று இருக்கையில் இதை பற்றி அவர்கள் அறிந்து கூட இருக்க 
மாட்டார்களே என்ற கவலையில் தோன்றியது தான் இந்த கட்டுரை. அப்போழுதும் செஸ், 
கேரம்போர்ட் என இருந்தாலும் குழந்தைகளால் பெரிதும் விரும்பப்பட்ட விளையாட்டுகள் 
இவை என்று தான் தோன்றுகிறது. இந்த விளையாட்டெல்லாம் தெருவில் ஆட பள்ளியில் 
கொக்கோ, அனைத்து பந்து விளையாட்டுக்கள், செஸ், ஷட்டில் கார்க், முயுசிக்கல் 
சேர், கேரம், ரிங்க் என அனைத்து விளையாட்டுகளும் இருந்தது. நான் கண்ட இந்த 
விளையாட்டுக்கள் மறக்காமல் இருக்கவும் அழிந்துவிட கூடதென்ற ஆதங்கத்திலும் எழுத 
விழைகிறேன். இனி ஒவ்வொன்றாய் பார்க்கலாம். 


ரீங்காரிப்பேன் 
சில்வண்டு... 

இணைப்பு http://groups.google.co.ve/group/muththamiz/tree/browse_frm/month/2006-12/56e265e3b917a186?rnum=1401&start=1250&scoring=d

சிறுமியர் விளையாட்டுக்கள்[தொகு]

"தென்காசி வட்டாரத்தில் தட்டாங்கல், பல்லாங்குழி, பூப்பறிக்க வருகிறோம், பாட்டி பேத்தி, அல்லி மல்லி தாமரை, செங்கல் எடுத்துச் சிறு வீடு கட்டு, டில்லி அக்கா தண்ணிக்குள்ள, அக்கக்கா கிளி செத்துப் போச்சு, உருண்டை உருண்டை கல்லெடுத்தல், குளத்துக்குள்ள கரை மேல, கீ கீ ரோஜா, ஈஞ்சக்காத்தண்ணி இறைப்பேன், ஒரு குடம் தண்ணி எடுத்து ஒரு பூப் பூத்தது, கிச்சு கிச்சுத் தாம்பாளம், வெத்தலப் பெட்டியைக் காணல, வளையல் விளையாட்டு, பானை சட்டி, நொண்டி, ஆபத்துக்கு கை கொடுத்தல், பூச்சொல்லி விளையாட்டு, சூடு சூப்பி, துணி துவைத்தல், அக்கக்கா சிணுக்கோரி, மெல்ல வந்து கிள்ளிபோ ஆகிய சிறுமியர் விளையாட்டுக்கள் கண்டறியப்பட்டுள்ளன."

[1]

தமிழர் நாட்டுப்புற விளையாட்டுக்கள்[தொகு]

= சிறுவர் விளையாட்டுக்கள்[தொகு]

  • கால் தூக்கிக் கணக்குப் பிள்ளை
  • ஆவியம்
  • பம்பரம் விளையாட்டு
  • தவிட்டுக் குஞ்சி
  • கிளித் தட்டு
  • தெல்லு
  • கிந்தான்
  • சைக்கிள் கிந்தான்
  • ஆயிரம் கிந்தான்
  • உப்பு விளையாட்டு
  • கள்ளன் போலீசு
  • கோலி
  • வண்ணாம் பொதி
  • கிட்டிப்புள்
  • மந்தி ஓடுதல்
  • பந்து விளையாட்டு
  • மாக்கொளக் கட்டை
  • ஒச்சிய்யான்
  • தலைவனைக் கண்டுபிடித்தல்
  • உருண்டை திரண்டை
  • மாட்டுக்கல் திரி
  • தேர் விளையாட்டு
  • மாட்டு விளையாட்டு
  • குருட்டுக் கொக்கு
  • ஐஸ்பால் ரெடி
  • கல்லெடுக்கும் விளையாட்டு
  • காற்றாடி
  • பட்டம்
  • சூடிசுப்பி
  • ஓத்தையா? ரெட்டையா?
  • தைத்தக்கா கதை
  • வட்டத்திரி
  • எலியும் பூனையும்
  • காக்காக் குஞ்சு
  • குண்டு விளையாட்டு
  • ஆடு - ஓநாய் விளையாட்டு
  • சில்லு விளையாட்டு
  • ஆனைத்திரி பூனைத்திரி
  • காட்டு கண்ணாமூச்சி

சிறுமியர் விளையாட்டுக்கள்[தொகு]

  • பூப்பறிக்க வருகிறோம்
  • பூசணிக்காய் விளையாட்டு
  • உன் புருசன் பெயரென்ன?
  • பூச்சொல்லி விளையாட்டு
  • ஒருபத்தி இருபத்தி
  • குச்சு குச்சு ராக்கம்மா
  • சோற்றுப்பானை விளையாட்டு
  • சுழற்சிக்காய் விளையாட்டு
  • திருத்திரி மொம்மக்கா
  • ரானா மூனா தண்டட்டி
  • என் தலைக்கு எண்ணெய் ஊத்து
  • கரகர வண்டி

சிறுவர் சிறுமிய விளையாட்டுக்கள்[தொகு]

  • நொண்டி
  • நிலாப் பூச்சி
  • கிறுகிறு மாம்பழம்
  • சாட்டு பூட்டு
  • கண்ணாமூச்சி
  • ஒரு தலையிலே ஆடு மேயுதாம்
  • யாருக்கு வேட்டை?

மகளிர் விளையாட்டுக்கள்[தொகு]

  • பல்லாங்குழி
  • தட்டாங்கல்
  • தாயம்

ஆடவர் விளையாட்டுக்கள்[தொகு]

  • சடுகுடு
  • பதினைஞ்சாம் புலி
  • உறியடி
  • சேவல் கட்டு
  • எருது கட்டு

மேலும் குறிப்புகள்[தொகு]

கோலிகுண்டு, பம்பரம், சில்லாக்கு, பாண்டி, ஒத்தையா ரெட்டையா, சொட்டாங்கல்லு, பூப்பறிக்க வருகிறோம், காலாட்டுமணி கையாட்டுமணி, எறிபந்து, கொலகொலயா முந்திரிக்கா, பச்சக்குதிர தாண்றது, ஓடிப்புடிச்சு ஒளிஞ்சுபுடிச்சு, தாயம், பரமபதம், ஆடுபுலியாட்டம், பல்லாங்குழி, கல்லா மண்ணா, டியாண்டோ டியாண்டோ, திருடன் போலீஸ், தீப்பெட்டிப்படம் சேக்கிறது, சடுகுடு, கிட்டி (கில்லி), எருவாட்டி, கண்ணாமூச்சி, கிறுகிறுவானம், ரயில்வண்டி, நொங்குவண்டி டயர்வண்டி ஓட்றது, குச்சி விளையாட்டு (சிலேட்டு குச்சிதான்), குலுக்குச்சீட்டு என இளமை பூராம் விளையாடித் திரிந்ததால் இன்றுவரை விளையாட்டாய் இருக்கிறது வாழ்க்கை.

[2]

எதற்கு?[தொகு]

என்ன விளையாட்டுக்கு இது பயன்பட்டது?
@ அன்ரன்... இரண்டாவதும், மூன்றாவதும் பல்லாங்குழி விளையாட்டுக்குரியவை போன்று தெரிகிறது. முதலாவதும், நான்காவதும் மூடிகள் என நினைக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:18, 4 சனவரி 2016 (UTC)[பதிலளி]
நன்றி செல்வசிவகுருநாதன். நான்காவது (வலம்) தேங்காய்துருவியின் அடித்தளம். --AntanO 15:57, 4 சனவரி 2016 (UTC)[பதிலளி]