பேச்சு:தத்தராய ராமச்சந்திர கப்ரேக்கர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தத்தராய ராமச்சந்திர கப்ரேக்கர் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

கப்ரேக்கர் பற்றிய கட்டுரையில் அவருடைய புகழ்பெற்ற 6174 என்னும் கப்ரேக்கர் மாறிலி என்னும் எண் குறிப்பிடப் படவில்லை எனில், அது நிறைவுபெற்றதாகக் கருத முடியாது. எனவே இதனை ஒரு தனி உள்தலைப்பில் எழுதியுள்ளேன். குறுந்தகடு/இறுவட்டு உருவாகும் வேளையில் இப்படி விரிவு செய்வது கூடாது எனில் அருள்கூர்ந்து நீக்கிவிடுங்கள். --செல்வா 17:00, 22 சனவரி 2012 (UTC)[பதிலளி]

விரிவாக்கம் கூடாதென்பதில்லை. ஆனால் உ.தி/விக்கியாக்க சுற்றுகள் முடிவடைந்த நிலையில் கூடுதல் உள்ளடக்கங்கள் சேர்த்தால், அவற்றை மிகக் கவனமாக சேர்ப்பவர்களே மீண்டும் சற்று கவனமாக உ.தி/விக்கியாக்கம் சோதித்து சேர்க்க வேண்டுகிறேன். புதிதாக சேர்க்கபடுபவைக்கும் இரு சுற்றுகள் உரை திருத்தம் பார்க்கப்படுவது வேண்டும். இக்கட்டுரையில் ஒரு சுற்று உ.தி வரை முடிந்துள்ளது. சிறிய உள்ளடக்கமே எனில் நீங்களே ஒரு முறை மீள்பார்வை/உ.தி செய்து விடுங்கள். பெரிய உள்ளடக்கமெனில் குறுந்தட்டுக்கான பதிப்பெண் உறுதி செய்யப்படும்வரை பொறுத்திருந்து பின் சேர்க்கலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 17:07, 22 சனவரி 2012 (UTC)[பதிலளி]
கப்ரேக்கர் மாறிலி என்ற தனித்த கட்டுரை உள்ளதால் நான் தொகுக்கும் போது அதனை இணைக்கவில்லை. கூடுதல் செய்திகளுக்கு நன்றி அய்யா --Parvathisri 17:14, 22 சனவரி 2012 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி சோடாபாட்டில் பார்வதிசிரீ. ஆம், கப்ரேக்கர் மாறிலி என்னும் தனிக் கட்டுரை இருந்தாலும், சுருக்கமாக ஒரு பத்தி இருப்பது நல்லது (விரிவான கட்டுரை பிற இடத்தில் இருந்தாலும், சுருக்க வரைவு தருவது மரபு). நானே மீண்டும் ஒரு முறை உ.தி செய்கிறேன். ஒரு பத்தி என்பதால், இருப்பதே நல்லது என்று நினைக்கிறேன். ஆனால் முடிவை உங்களிடம் விட்டுவிடுகின்றேன். பதிவெண் தந்த பின்னும் சேர்க்கலாம்.--செல்வா 17:35, 22 சனவரி 2012 (UTC)[பதிலளி]

படிமம்[தொகு]

படம் காப்புரிமம் உள்ளதாகவோ உள்ளதாகக் கொள்ள வேண்டும் என்றோ கூறுகின்றது ஆங்கில விக்கிப்பீடியா. ஐக்கிய அமெரிக்காவில் செல்லுமாம். இந்தியாவில் செல்லுமா தெரியாது. பார்க்கவும் http://en.wikipedia.org/wiki/File:D._R._Kaprekar.gif மேலும் இப்படத்தின் மூலம்: http://areeweb.polito.it/didattica/polymath/htmlS/Interventi/Articoli/6174/Img/clip_image002.gif

உரிமம் பற்றிய சிக்கல் இருக்கலாம். வேறு படம் கிடைத்தால் நல்லது.--செல்வா 22:04, 22 சனவரி 2012 (UTC)[பதிலளி]

  • இப்பகுதியில் உள்ள பெருக்கல்களில் சில பிழைகள் உள்ளன. இப்பகுதி தெளிவாகவும் இல்லை என்று நினைக்கின்றேன்.
  • முதல் வரியில் பெருக்கலைத் திருத்தி விட்டேன் (இரண்டாவது எண் 819. அது 91 அல்ல).
  • இரண்டாவது வரியிலும் உள்ள பெருக்குத்தொகை 883159299 என்பதாகும். இதிலும் ஏதோ பிழை உள்ளது.

இதனை மாற்றி அமைக்க முயல்கின்றேன்.--செல்வா 02:03, 25 சனவரி 2012 (UTC)[பதிலளி]

முதல் இரண்டு வரிகளில் உள்ள பெருக்கல்கள் இப்படி வரவேண்டும்:

91*819 =74529
9901*980199 =9704950299

மூன்றாவது வரியில் உள்ள கணக்கு தவறு என்றே நினைக்கின்றேன்.

99099001*990890019909 = 98196211073852010909

என வருகின்றது. இதில் கப்ரேக்கர் சொல்லுவதாக இக்கட்டுரையில் சொல்லுவது உண்மை என்றால் 99079004990590029909 என்னும் எண் வர வேண்டும் (அதாவது 9704950299 என்னும் எண்ணில் 9 உம் 0 யும் அடுத்தடுத்து இட்டால் அது பெருக்குத் தொகையாக இருக்க வேண்டும்). அப்படி வரவில்லை. மற்ற பயனர்கள் உறுதி செய்ய வேண்டும். எவ்வாறான எண்களுக்கு இவ்விதி பொருந்தும் என்றும் சொல்லுவது நல்லது. முதல் இரண்டு பெருக்குத்தொகைகளும் முதலில் கொடுத்து இருந்த எண்கள் தவறாக இருந்தன. அவற்றை இப்பொழுது திருத்திவிட்டேன். மூன்றாவது பெருக்குத்தொகையில் விதி முறிகிறது என்று கருதுகிறேன் (அல்லது நான் ஏதும் பிழை செய்திருக்க வேண்டும்). இரண்டாவது முறை இந்த 9 ஐயும் 0 யையும் புகுத்தும்பொழுது இரண்டு இரண்டு இலக்கம் விட்டுப் புகுத்த வேண்டும். அதாவது 9901 என்னும் எண்ணை 99 01 என்று பிரித்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது முன்னே ஒரு 9 ஐ இட வேண்டும், அடுத்து 0 யை இட வேண்டும். எனவே 999001 என்னும் எண் கிட்டும் இது முதல் பெருக்கற்கான எண். அதே போல் இரண்டாவது எண்ணையும் 980199 என்பதை 98 01 99 எனப் பிரித்துக்கொள்ள வேண்டும். அப்பொழுது 9,0 ஆகியவற்றை நுழைத்தால் 998 001 999 என்னும் எண் வரும். இதுவே இரண்டாவது பெருக்கல் எண். இதனைப் பெருக்கினால் சரியான எண்ணாகிய 997004995002999 கிட்டுகிறது. இப்படிக் கிட்டிய எண்ணை, மேலே உள்ள "9704950299" என்னும் எண்ணை 97 04 95 02 99 என்று பிரித்து, பின்னர் 9,0 ஐ அடுத்தடுத்துப் புகுத்தினால் 997 004 995 002 999 என்று வரும். இதுவே 997004995002999 என்று பெருக்கல் தொகையாக உள்ளது. எனவே இரண்டாம் முறை இவ்விதியைப் பின் பற்றும்பொழுது இரண்டு இரண்டு இலக்கங்களுக்குப் பிறகு 9,0 ஐ மாறிமாறி இட வேண்டும். இவ்விதியைச் சரியாக விளக்க வேண்டும். இல்லையெனில் பிழையாகும். இங்கே நான் சொல்லுவது போல் கப்ரேக்கர் சொல்லியுள்ளாரா என்பதை உறுதி செய்யாமல் இந்த மூன்றாவது பெருக்கலைத் தருவது முறை ஆகாது (அப்படித்தான் அவர் சொல்லியிருக்க வேண்டும் என்று நம்புகிறேன்). இதனைச் சரி செய்தால் இரண்டாவது உரை திருத்தமும் முடிந்துவிடும் (நான் பிற பகுதிகளின் உரையை சரி பார்த்தேன். பிழை ஏதும் கண்ணில் பட வில்லை) --செல்வா 03:10, 25 சனவரி 2012 (UTC)--செல்வா 03:48, 25 சனவரி 2012 (UTC)[பதிலளி]

விளக்கம்[தொகு]

வணக்கம் : இப்பகுதியில் செல்வா அவர்கள் செய்த திருத்தங்கள் கண்டு மகிழ்ச்சி. தங்களால் நானும் தெளிந்தேன். நானும் இதனைப் பற்றியே இரண்டு நாட்களாகக் குழம்பிக்கொண்டு இருந்தேன். விடை கண்டு பிடித்துவிட்டேன்.

நாம் 9,0 மாற்றி மாற்றி பிரதியிடாமல் (ஈரிலக்க எண்ணாக மட்டும் பிரிக்காமல்) ஓர் ஒழுங்கு முறையில் பிரிக்க வேண்டும்.அதாவது கீழ்கண்டவாறு:
# 91 * 819 = 74529
# 9/9/0/1 * 9/8/0/1/9/9 = 9704950299 (ஒன்று விட்டு ஒன்று)
# 9/99/0/01 * 9/ 98/ 0 / 01 / 9 /99 = 9/97/0/04/9/95/0/02/9/99 (இரண்டிரண்ட்டாக)
# 9/999/0/001 * 9/998/0/001/9/999 = 9/997/0/004/9/995/0/002/9/999 (மூன்று மூன்றாக)
# 9/9999/0/0001 * 9/9998/0/0001/9/9999 = 9/9997/0/0004/9/9995/0/0002/9/9999 (நான்கு நான்காக )

இவ்வாறே சேர்த்துக் கொள்ள வேண்டும். பெருக்குத் தொகையிலும் இதே மாதிரியான ஒழுங்கு முறையில் எண்கள் அமைவதைக் காணலாம். இதனைச் சரியென ஒப்புக்கொண்டால் கட்டுரையிலும் இதனை இணைத்து விடலாம் என உள்ளேன். Booradleyp போன்றோரும் இதனைச் சரி பார்த்தல் நலம் .--Parvathisri 08:28, 26 சனவரி 2012 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி பார்வதிசிரீ! நீங்கள் கொடுத்த முறையும் பெருக்கல் தொகைகளும் முற்றிலும் சரியே. நானும் சரிபார்த்தேன். என் கேள்வி என்னவென்றால் இவற்றை கப்ரேக்கர் சொல்லியிருப்பதைச் சான்றாகக் காட்டவேண்டும், அல்லது மற்றவர்கள் அவர் செய்ததாகச் சொன்னதைச் சான்றாகக் காட்ட வேண்டும். 91 என்னும் எண்ணும் 819 என்னும் எண்ணும் 9x91=981. இதன் பண்புகளைக் கூட விளக்கலாம், ஆனால் அவை நம் விளக்கமாக இருத்தல் கூடாதே என்பதற்காகச் சொன்னேன்.--செல்வா 13:39, 26 சனவரி 2012 (UTC)[பதிலளி]
நான் மேற்கோளாகக் காட்டியுள்ள நூலில் இவ்வாறே விளக்கப்பட்டுள்ளது.--Parvathisri 13:47, 26 சனவரி 2012 (UTC)[பதிலளி]
ஓ! மிக நன்று!! அப்பொழுது, அருள்கூர்ந்து இவ்விளக்கங்களைச் சேர்த்துவிடுங்கள். இக்கட்டுரையின் இரண்டு உரை திருத்தங்களும் முடிந்து, படிமம் சரிபார்ப்பும் முடிந்து நிறைவுற்றது என்று அறிவிக்கலாம். --செல்வா 15:19, 26 சனவரி 2012 (UTC)[பதிலளி]
கப்ரேக்கர் மாறிலி -இல் சிறிது விரிவான விளக்கமாக மாற்றியுள்ளேன். ஏற்புடையதா என்பதைப் பார்த்துக் கொள்ளவும்.* -குப் பதில் பெருக்கல் குறியீடு வேண்டுமா? நன்றி.--Booradleyp 13:58, 29 சனவரி 2012 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி பார்க்கின்றேன் (நன்றாகவே இருக்கும் என்பது என் நம்பிக்கை :) எனினும் பார்க்கின்றேன்). சிறிது முன்னதாகத்தான் பதிவெண் இட்டேன். மாற்றிக்கொள்ள இயலும் என்று நினைக்கின்றேன்.--செல்வா 14:01, 29 சனவரி 2012 (UTC)[பதிலளி]
தற்காலிகமாக முன்பு குறிக்கப்பட்ட பதிப்பெண்ணை நீக்கியிருக்கிறேன். சரி பார்த்து உறுதி செய்த பின் உள்ள பதிப்பெண்ணை மீண்டும் குறித்து விடுங்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 16:39, 29 சனவரி 2012 (UTC)[பதிலளி]

உ.தி[தொகு]

பார்வதி, உரை திருத்தம் முடிந்தது என்று பதிவு செய்யட்டுமா? இப்பொழுது சரியாக உள்ளது. படிமமும் சரிபார்க்கப்பட்டுவிட்டது.--செல்வா 16:27, 26 சனவரி 2012 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி செய்து விடுங்கள்.
அதே போல் சோழர் கட்டுரையில் அடிமைகள் பகுதியில் வேழம் என்ற சொல்லின் பயன்பாடு குறித்து அதன் பேச்சுப் பக்கத்தில் எனது கருத்தை குறித்திருந்தேன்.கலிங்கத்துப் பரணியில் இருந்து ஆதாரமும் தந்திருந்தேன். வேழம் என்று வரக் கூடாது வேளம் என்பதே சோழர் பிற நாடுகளில் இருந்து கொணர்ந்த மங்கையர்களை குடியமர்த்திய இடம் எனக் கூறியிருந்தேன். ஆனால் அது தற்போது நீக்கப்பட்டுள்ளது. ??? அதே போல மன்னர்களின் ஆண்டுகளிலும் சில பிழைகள் இருப்பதை அறிந்தேன். அதனைத் திருத்தலாமா? சோழர்கள் பற்றிய நிறைய செய்திகள் இதில் விடுபட்டுள்ளன. அவற்றை இணைக்கலாமா? ஏனெனில் விரிவாக்கம் தேவையில்லை என விதியில் உள்ளது. நான் என்ன செய்வது ? கூறுங்கள்.
பார்த்த பின் எனக்கு ஏதும் தெரிந்தால் கூறுகின்றேன். முக்கியமான விடுபாடுகள்/திருத்தங்கள், விரிவாக்கம் என்றால் செய்யலாம் என்றே நினைக்கின்றேன் (மீண்டும் இன்னொரு முறை உ.தி செய்ய வேண்டும் அவ்வளவுதான். இதைச் செய்யலாம்). வேழம், ஆழ்வார் போன்ற சொற்கள் கல்வெட்டில் சில நேரம் வேளம், ஆள்வார் என்று இருப்பதாக அறிகின்றேன். பிறைக்குறிகளுக்குள் மாற்றுக் க்ருத்து இருப்பதையும் குறிப்பிடலாம். --செல்வா 17:30, 26 சனவரி 2012 (UTC)[பதிலளி]