பேச்சு:டோனி பெர்னாண்டஸ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டோனி பெர்னாண்டஸ் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

ஒரு சிறுகதையைப் படிப்பது போல் இக்கட்டுரையைப் படிக்கச் சுவையாக இருக்கிறது. நல்ல நடை. பாராட்டுகள். அதே வேளை, விக்கிப்பீடியா ஒரு கலைக்களஞ்சியம் என்பதால் //மலேசிய இந்தியர்களுக்கு பெருமை சேர்த்து வரும் ஒரு வரலாற்று மைந்தர். இப்போது மலேசியப் பணக்காரர்களில் ஒருவராகப் பீடு நடை போட்டு வருகிறார்.// என்பது போன்ற உயர்வு நவிற்சிகளைத் தவிர்த்து தகவலை முன்வைத்து எழுத வேண்டும் என்பது ஒரு பொதுவான வழிகாட்டு. அருள்கூர்ந்து, இதனைக் கருத்தில் கொள்ள வேண்டுகிறேன். நன்றி--இரவி 08:15, 30 சனவரி 2012 (UTC)[பதிலளி]

கட்டுரை நல்ல தகவல்கள் நிறைந்துள்ளதாக இருக்கிறது. கட்டுரைக்குக் கீழே {{உலக நாடுகளில் தமிழர்}} என்ற வார்ப்புரு உள்ளது. இவர் தமிழரா? மேலும் ஆய்வாளர் என்ற உட்தலைப்பின்கீழ் மலாக்கா முத்துகிருஷ்ணன் வலைப்பதிவுக்கு இணைப்பு உள்ளது. அவருடைய வலைப்பதிவில் இருந்து தகவல் கிடைக்குமானால் பொருத்தமான பதிவை வெளி இணைப்புகளில் தரலாம், இவ்வாறு பயனர் சொந்த தளத்துக்குத் தனியாக இணைப்புத் தரலாகாதே? -- சுந்தர் \பேச்சு 15:07, 23 சூலை 2013 (UTC)[பதிலளி]

ஆய்வாளர் என்ற பத்தியை நீக்கியமைக்கு நன்றி சிறீதரன். -- சுந்தர் \பேச்சு 02:55, 24 சூலை 2013 (UTC)[பதிலளி]

இவர் தமிழர் அல்ல, Father from Goa, ஆவி தாய் போர்த்துகீட்சியர்/Portuguese-Eurasian mother, Ena Dorothy Fernandes of Malacca, Malaysia.// என்கிறது. எனவே உலகத்தமிழர் வார்ப்புருவை நீக்கிவிடுகிறேன்.--குறும்பன் (பேச்சு) 03:50, 24 சூலை 2013 (UTC)[பதிலளி]

நன்றி குறும்பன். -- சுந்தர் \பேச்சு 04:11, 24 சூலை 2013 (UTC)[பதிலளி]
கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள படங்கள் காப்புரிமையுள்ளவை. மேலும் பல படங்கள் கட்டுரைக்குத் தேவையற்றவை. உ+ம் பணிப்பெண்கள், மகத்தீர். இவற்றை அகற்றுவது நல்லது.--Kanags \உரையாடுக 09:14, 24 சூலை 2013 (UTC)[பதிலளி]

வணக்கம். வலப்பக்கம் உள்ள ஏர் ஏசியா படம் உள்ள தகவல் பெட்டியில் டோனி பெர்னாண்டஸ் பற்றிய குறிப்புகள் அனைத்தும் நன்று. ஆனால் பெட்டியின் இறுதியில் அவர் சார்ந்த சமயம் 'கிறித்துவம்' என்று குறிப்பிடப்படிருக்கிறது. இது தேவையானதா என்று விளக்கவும் --RajTyagi (பேச்சு) 13:01, 28 சூலை 2013 (UTC)[பதிலளி]

ஆம், கிறிஸ்தவம் நீங்கள் கூறுவது விளங்கவில்லை, குறிப்பிடத்தேவையில்லை எனவா அல்லது குறிப்பிடக்கூடாது என்றா கூறுகிறீர்கள் விளக்கவும். -- நி ♣ ஆதவன் ♦ (உரையாட படத்தை சொடுக்கவும்)) 13:22, 28 சூலை 2013 (UTC)[பதிலளி]
பொதுவாக மதத்தைக் குறிப்பிடுவது விக்கி நடைமுறை. அவர் கிறித்தவர் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்றால் அதனை நீக்கலாம்.--Kanags \உரையாடுக 21:12, 28 சூலை 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:டோனி_பெர்னாண்டஸ்&oldid=1469058" இலிருந்து மீள்விக்கப்பட்டது