பேச்சு:டெல் இயக்கி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Vector என்பதற்கு என்ன சொல் ஆளுகிறார்கள் என்று தெரியவில்லை. நெறி என்னும் சொல் ஒருகாலத்தில் ஆண்டார்கள். திசையன் என்பதும் சரியாகப் படுகின்றது. Del or Nabla என்பதற்கு சாய்வம் (scalar), திசையச் சாய்வம் என்றும் பெயரளிக்கலாம் என நினைக்கிறேன். இதை விட சிறந்த கலைச்சொற்கள் இருக்க வேண்டும். டெல் என்றே சொல்லுவதால் தவறில்லை. --C.R.Selvakumar 22:05, 26 ஜூன் 2006 (UTC)செல்வா

Vectorஐ காவி என்று எங்கோ படித்ததாக நினைவு--ரவி 08:32, 27 ஜூன் 2006 (UTC)

அது "carrier" என்று பொருள்படும் நோய்தாங்கிகளைக் குறிக்கும் சொல் என்று நினைக்கிறேன். மயூரநாதன் ஏதோ ஒரு கட்டுரையில் பயன்படுத்தியிருந்ததைப் பார்த்து நானும் நிறக்குருடு கட்டுரையி சேர்த்தேன் என்று நினைவு. Cauli flower என்பதற்கு ஒரு செட்டிநாடு உணவகத்தில் காவிப்பூ என்று குறிப்பிடக்கேட்டு வியந்தேன்! -- Sundar \பேச்சு 09:18, 27 ஜூன் 2006 (UTC)
இங்கு தரப்பட்டிருக்கிறதா எனப் பார்க்கவும். -- Sundar \பேச்சு 09:31, 27 ஜூன் 2006 (UTC)
ஓ! காவிப்பூ என்ற பெயர் பற்றிய செய்தி வியப்பூட்டுவது தான். இது மாதிரி அன்றாடப் பயன்பாட்டில் ஒளிந்திருக்கும் நல்ல தமிழ்ச் சொற்களை பிரபலப்படுத்த வேண்டும்--ரவி 10:03, 27 ஜூன் 2006 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:டெல்_இயக்கி&oldid=43942" இலிருந்து மீள்விக்கப்பட்டது