பேச்சு:டிரிஃக்லெ

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெயர்ச்சொல்லின் ஒலிப்புகளை மாற்றி எழுதியுள்ளேன். [ləˈʒœn diʀiˈkle] என்று பெயரின் ஒலிப்பு கொடுக்கப்பட்டுள்ளதால் லெழ்ஜோன் டிரிஃக்லெ என்பது சரியான ஒலிப்பாக இருக்கும். சரியென்று பேரா வி.கே கருதினால் கட்டுரையில் பிற இடங்களிலும் மாற்றலாம். இல்லை என்றால் முன்பிருந்தவாறே மாற்றி விடுகிறேன். ch என்னும் எழுத்துக்கூட்டலை ஷ் அல்ல்து ஃ அல்லது ஃக் என்று குறிப்பிடுவது பொருந்தும். சில செருமானியர்கள் Ich (= நான்) என்பதை இஷ் என்றும் சிலர் இஃக் என்றும் ஒலிக்கின்றார்கள். இதில் nord deutsch, sud deutsch (வடக்கு தெற்கு டாய்ட்ச் மொழி) வேறுபாடுகள் உண்டு. மேலும் Peter என்பதை பீடர் என்று எழுதினால் PeeDar என்றுதான் தமிழில் ஒலிக்க வேண்டும். பீட்டர் என்று எழுதுவது வழக்கு. கல்கி என்பதை Kalgi என்றுதான் ஒலிக்க வேண்டும் Kalki என்று ஒலிக்க வேண்டும் என்றால் கல்க்கி என்று எழுதவேண்டும். தவறாக எழுதுவதால் தமிழின் ஒலிப்புமுறையும் ஒலிப்பாங்கும் கெடுகின்றது. தமிழ் ஒலிப்பொழுக்கம் மிகுந்த மொழிகளில் ஒன்றாக இன்றளவும் உள்ளது. அதனைக் காப்பது முறையாகும். --செல்வா 15:13, 10 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

நீங்கள் சொல்வது சரிதான். ஜெர்மன் மொழி தெரியாத பள்ளி நாட்களிலிருந்து டிரிச்லெ என்று சொல்லியும் கேட்டும் இருந்த பழக்கத்தினால் அப்படி எழுதினேன். தயவு செய்து நீங்களே மற்ற இடங்களிலும் திருத்திவிடவும். தற்போது நான் வேறு வேலையில் மூழ்கியிருக்கிறேன். நன்றி.--Profvk 20:20, 10 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:டிரிஃக்லெ&oldid=232389" இலிருந்து மீள்விக்கப்பட்டது