பேச்சு:டால்க்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இருஅண்டு விதம் என்றால் என்ன ? Two Allotropic Varieties ??

wi
n
d

வினோத் 03:34, 3 ஜனவரி 2008 (UTC)

ம்..:) இரண்டு அண்டு விதம் என்னும் சொல் two allotropic என்பதற்குப் பொருந்தும் (அண்டிய = நெருக்கமான). ஆனால், இங்குள்ளது என் எழுத்துப் பிழை. இரண்டு என்பது தவறுதலாக இருஅண்டு என்று பதிவாகியது. இப்பொழுது திருத்தியுள்ளேன், மேலும் ஒரு சில கருத்துக்களையும் சேர்த்துள்ளேன்.--செல்வா 04:32, 3 ஜனவரி 2008 (UTC)

பெயர் மாற்றம்[தொகு]

டால்க் என்பது தமிழ் பெயராக இல்லையே. தமிழில் பெயர் மாற்றம் செய்தால் நலம் என எண்ணுகிறேன். அன்புடன், -Pitchaimuthu2050 13:31, 14 பெப்ரவரி 2012 (UTC)

கட்டாயம் மாற்றலாம். மக்னீசியமும் சிலிக்கானும் சேர்ந்த மாவுபொருள் கனிமம். எனவே மக்கினிசிலி மாவுக்கனிமம் என்று பெயரிடலாம். இதுதான் இட்டடல்க்கு அல்லது தால்க்கு ("டால்க்", Talc) என்னும் கனிமம் என்று ஈடு நிறுத்தலாம். இக்காலத்தில் மில்லியன்கணக்கான சொற்களாயினும் நொடிப்பொழுதில் ஒரு மொழியில் இருந்து நூற்றுக்கணக்கான மொழிகளில் ஈடுசொற்களை அறிய முடியும். எனவே மக்கினிசிலி மாவுக்கனிமம், மென்மாவுக்கனிமம், மக்கினி மாவுக்கனிமம் என்பது போன்ற ஒரு சொல்லை ஆளலாம். பிறைக்குறிகளுக்குள் தால்க்கு (Talc) என்றும் தரலாம், வழிமாற்றுகளும் தரலாம். --செல்வா 14:14, 14 பெப்ரவரி 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:டால்க்&oldid=1021916" இலிருந்து மீள்விக்கப்பட்டது