பேச்சு:ஜி. ராமநாதன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சில சந்தேகங்கள், காரணங்கள்[தொகு]

  1. இதற்கு இணையான ஆங்கிலக் கட்டுரையில் ஆரம்பத்திலும், தகவற்பெட்டியிலும் ஜி. ராமநாதன் ஐயர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அ) இவ்வாறு எழுதலாமா என சந்தேகம் இருப்பதாலும், ஆ) நான் படித்த, கேள்விப்பட்ட, அறிந்தவரையில் எங்கும் ஜி. ராமநாதன் ஐயர் என்று கேட்டதில்லை ஆகையாலும் ஐயர் என்பதை பயன்படுத்தவில்லை(கட்டுரையை விரிவுபடுத்துகையில், இவர் பிராணமர் என தேவைப்படும் இடத்தில் கொடுக்கலாம் என்றிருக்கிறேன்). யாருக்கேனும் இவ்வாறு பயன்படுத்துவதே சரி எனப்பட்டால் கட்டுரையை திருத்துங்கள், எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
  2. Template:Infobox musical artist என்கிற வார்ப்புரு இல்லாததால் person வார்ப்புருவை அப்படியே பயன்படுத்தியுள்ளேன். வார்ப்புரு உருவாக்கியதும் மாற்றிவிடலாம் என்றிருக்கிறேன். இதை கட்டுரையிலும் html comment-ல் இட்டிருக்கிறேன். அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 13:07, 16 மார்ச் 2013 (UTC)
ஜி. ராமநாத ஐயர் எனவும் இவர் அறியப்பட்டிருந்தார். ஆனாலும், ஜி. ராமநாதனே நிலைத்திருந்தது.--Kanags \உரையாடுக 13:16, 16 மார்ச் 2013 (UTC)
[[வார்ப்புரு:இசைக்குழு]]வைப் பயன்படுத்தலாம்.--மணியன் (பேச்சு) 13:12, 16 மார்ச் 2013 (UTC)
Kanags, மணியன் இருவருக்கும் நன்றி, வார்ப்புரு இருக்கிறது :). முதல்முறை வார்ப்புரு Template:Infobox Musical artist(வார்ப்புரு:இசைக்குழு) பயன்படுத்தியபோது வராததன் காரணம் வார்ப்புருவின் பண்புகளில்(Attibutes like name, born etc) முதலெழுத்து lowercase-ல் பயன்படுத்தியதுதான். Uppercase-க்கு திருத்தியுள்ளேன் சரியாக இருக்கிறது. கி. கார்த்திகேயன் (பேச்சு) 15:30, 16 மார்ச் 2013 (UTC)
கார்த்தி, வார்ப்புருவில் மாற்றங்கள் செய்யாதீர்கள்..இந்த வார்ப்புரு பயன்படுத்தும் மற்ற கட்டுரைகளில் குழப்பம் உண்டாகும். உங்களது infoboxஇல் மாற்றங்கள் செய்யவும். இது ஆங்கிலத்தில் இரு வார்ப்புருக்கள் Template:Infobox Musical artist, Template:Infobox musical artist இரண்டுக்கும் வேறுபாடு இருப்பதால்தான். தமிழில் இரண்டு வார்ப்புருக்கள் தேவையில்லை. --மணியன் (பேச்சு) 17:23, 16 மார்ச் 2013 (UTC)
மன்னிக்கவும், தெளிவாக விவரிக்காதது என்னுடைய தவறுதான். நான் இந்தக் கட்டுரையின் Infobox-ல் திருத்தியதைத்தான் சொன்னேன். வார்ப்புருக்களின் முக்கியத்துவம் அறிவேன்; ஏற்கனவே, சில வார்ப்புருக்களில் நான் திருத்தங்களை செய்திருந்தாலும், நிச்சயமாக திருத்த வேண்டிய தேவை ஏற்பட்டாலொழிய அவ்வளவு சீக்கிரமாக எந்த வார்ப்புருக்களையும் நான் தொடுவதில்லை :). அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 20:25, 16 மார்ச் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஜி._ராமநாதன்&oldid=1381685" இலிருந்து மீள்விக்கப்பட்டது