பேச்சு:ஜித்தா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாஃகிம் போன்று அரபி மொழி அறிந்தவர்கள் இதனை எப்படி எழுதுகின்றார்கள் என்று அறிய ஆவல். ஜெட்டா, ஜெடா, ஜெத்தா, ஜித்தா என்று பலவகையாக எழுதக் கண்டிருக்கின்றேன். அரபி அல்லாத பிறமொழிகளிலும் வெவ்வேறாக எழுதக் கண்டிருக்கின்றேன்:

ஆகவே தமிழில் சியெட்டா, இயெத்தா, இட்செடா, இயெட்டா, இட்செட்டா என்பது போலவும் எழுதலாம் என்பது ஒரு கருத்து. இங்குக் கட்டுரையின் தலைப்பை மாற்றவேண்டும் என்று கூறுவதற்காக இதனைக் கூறவில்லை!! பின் ஏன் கூறுகின்றேன் என்றால், பலரும் பலவிதமாக எழுதுகின்றார்களே, தமிழில் எழுதும் பொழுதும், கிரந்தம் கலந்து எழுதும்பொழுதும், மேலே குறிப்பிட்டவாறு ஜெட்டா, ஜெடா, ஜெத்தா, ஜித்தா என்று பலவிதமாக எழுதுகின்றார்களே, - ஆகவே இப்படியான சூழல்களில் கிரந்தம் கலந்து எழுதினால் எப்படி எழுதுவது சிறந்ததாக இருக்கும், கிரந்தம் கலக்காமல் எழுதினால் எது சிறந்ததாக இருக்கும் என்று அறியவே இதனை எழுதுகின்றேன். அரபியின் தாக்கம் ஒருவாறு பெற்ற எசுப்பானியத்தில் Yida என்கிறார்கள். பிற ஐரோப்பிய மொழிகளும் பலவாறு குறிப்பிடுகின்றார்கள். நன்கு அறிந்தவர்கள் கருத்துரைக்க வேண்டுகிறேன். கிரந்தம் இல்லாமல் எழுதும் முறைக்கு ஒரு வழிமாற்று தரலாம் என்று கருதியும் கேட்கின்றேன். இன்னொரு கேள்வி சியெட்டா அலல்து சியெத்தா என்பது நெருக்கமான ஒலியாக இருக்குமா? ஜ என்பது பல நேரங்களிலும் "ச்ய" என்பதற்கு நெருக்கமாகவே ஒலிக்கும். --செல்வா 18:19, 16 பெப்ரவரி 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஜித்தா&oldid=1024075" இலிருந்து மீள்விக்கப்பட்டது