பேச்சு:ச. இராமதாசு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரையில் மருத்துவர் இராமதாஸ் என எழுதுவதே சரி. கலாநிதி என்பதற்கு இணையான தமிழக வழக்கு, முனைவர் என்பதாகும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:35, 15 ஏப்ரல் 2014 (UTC)

ஆங்கிலத்தில் Dr. S. Ramadoss என்று இருந்தது அதனையே கலாநிதி. இராமதாஸ் என்று எழுதினேன். கலாநிதி அல்லது முனைவர் பட்டம் பெற்றவர்களுக்குத்தானே பெயரின் முன்பு Dr. என இடுவார்கள். இவர் ஒரு மருத்துவர் என்றும் முதல் வரியில் உள்ளது. எனக்குச் சிறிது சந்தேகமாக உள்ளது.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 17:14, 15 ஏப்ரல் 2014 (UTC)

மருத்துவருக்காக வழங்கப்பட்ட Dr. பட்டமா அல்லது ஆய்வறிக்கை தாக்கல் செய்து பெறப்பட்ட முனைவர் பட்டமா என்பதனை தெளிவாக அடையாளப்படுத்தும் பொருட்டு, தமிழகத்தில் மருத்துவர் சுப்ரமணியம், முனைவர் சுப்ரமணியம் எனக் குறிப்பிடுவர். அந்த வகையில் பாமக நிறுவனர் இராமதாசை, மருத்துவர் இராமதாஸ் என்றே அக்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:37, 15 ஏப்ரல் 2014 (UTC)

விளக்கமளித்தமைக்கு நன்றி. கட்டுரையிலும் அவ்வாறே மாற்றிவிடுகின்றேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 17:57, 15 ஏப்ரல் 2014 (UTC)

பெயர்[தொகு]

இவரது பெயர் ச. ராமதாஸ் என்றும் ச. இராமதாசு என்றும் பா.ம.க இணையத்தளத்தில் காணப்படுகிறது. ஆயினும் முதன்மைப் பக்கப்படத்தில் ச. இராமதாசு என்றே உள்ளது. கோபி (பேச்சு) 18:14, 15 ஏப்ரல் 2014 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ச._இராமதாசு&oldid=3853741" இலிருந்து மீள்விக்கப்பட்டது