பேச்சு:சேவல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேவல் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

//சேவல் என்பது இறைச்சிக்காக வளர்க்கப்படும் பறவையாகும். இதில் பெண்ணினம் பேடு எனவும், ஆணினம் சேவல் எனவும் அழைக்கப்படுகின்றது. // பார்க்க en:Rooster இப்பகுதிகள் குழப்பமான கருத்தைக் கொடுக்கின்றன. இந்தியாவில் சேவல் என்பது இறைச்சிக்காக வளர்க்கப்படும் பறவை என்று அர்த்தமா? அவ்வாறெனின் சரி. --Anton (பேச்சு) 12:44, 23 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

Anton, சேவல் என்பது cock. இதை ஆண் எனக்குறிப்பதால் அப்பெயர். en:Rooster என்பது சண்டைக் கோழி என கூறுவோம். // இந்தியாவில் சேவல் என்பது இறைச்சிக்காக வளர்க்கப்படும் பறவை என்று அர்த்தமா? // சேவல் என்பது ஒரு பறவை, அது இறைச்சிக்காக வளர்க்கப்படுகிறது. இதனை சண்டைக்கும் முன்பு பயன்படுத்தி வந்தனர். தற்போது அரசு தடை விதித்துள்ளது. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:26, 23 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
en:Cock இங்கு இவ்வாறு உள்ளது. A Rooster or cockerel, the male of the domestic fowl or chicken, Gallus domesticus. அதன்படி, Cock, Rooster என்பன சேவல் என்ற ஒன்றையே அர்த்தப்படுத்துகின்றன. தயவுசெய்து தெரிந்த ஒருவர் மூலம் தெளிவுபடுத்திக் கொள்ளலாமா?

--Anton (பேச்சு) 13:39, 23 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

வணக்கம். சேவல் என்பது கோழி மற்றும் ஒரு சில பறவைகளின் ஆண் இனத்தை குறிக்கும் சொல்லாகும். இவை இறைச்சிக்காக வளர்க்கப்படும் பறவையின் பெயர் இல்லை நன்றி. ஆனால் சேவல் என்னும் ஆணினத்தை இறைச்சிக்காக அதிகம் வளர்கிறார்கள் என்பது உண்மை. பெண் இனம் பேடு முட்டைக்காக வளர்கிறார்கள். நன்றி--சிவம் 19:00, 25 செப்டெம்பர் 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சேவல்&oldid=1553390" இலிருந்து மீள்விக்கப்பட்டது