பேச்சு:செல்வம் அடைக்கலநாதன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆங்கில விக்கிப்பீடியாவில் இவர் 7ஆவது நாடாளுமன்ற உறுப்பினர் என்று குறிப்பிடப்படவேயில்லை. தமிழ் விக்கியில் உள்ள தகவல் எந்த அளவு சரியானதென்று தெரியவில்லை. இவர் 11, 12, 13, 14 ஆகிய நாடாளுமன்றங்களில் மட்டுமே உறுப்பினராக இருந்ததாக ஆங்கில விக்கியில் குறிப்பிடப்படப்பட்டுள்ளது. சிக்கலைத் தீர்க்க வேண்டும். இக்கட்டுரையைத் தொடங்கியவரோ, வன்னி பகுதியைச் சார்ந்தவரோ உடனடியாக இதனைச் சரிபார்க்கவும். --சூர்ய பிரகாசு.ச.அ.உரையாடுக... 17:30, 18 ஏப்ரல் 2011 (UTC)

  • சூர்ய பிரகாசு, இலங்கையில் எத்தனையாவது நாடாளுமன்றம் என்ற விடயத்தில் சிக்கல் ஏற்படுவது இயல்பு. விரைவில் இது பற்றி விரிவான கட்டுரையொன்றை விக்கியில் இன்ஸாஅல்லாஹ் எழுதுகின்றேன். இலங்கை பெப்ரவரி 04, 1948இல் சுதந்திரமடைந்தது. 1947ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டியவர்களே சுதந்திரத்தின் பின்பு நாடாளுமன்றத்தில் இருந்தனர். இது இலங்கையின் முதலாவது நாடாளுமன்றமாக கணிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெற்ற காலத்தினை அடிப்படையாகக் கொண்டே நாடாளுமன்றம் தீர்மானிக்கப்படுகின்றது.
  • முதலாவது நாடாளுமன்றம் தேர்தல் நடந்த காலம் 23.08.1947 - 20.09.1947
  • இரண்டாவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடந்த காலம் 24.05.1952 - 30.05.1952
  • மூன்றாவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடந்த காலம் - 05.04.1956 - 10.04.1956
  • நான்காவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடந்த காலம் - 19.03.1960
  • ஐந்தாவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடந்த காலம் - 20.07.1960
  • ஆறாவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடந்த காலம் - 22.03.1965
  • ஏழாவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடந்த காலம் - 27.05.1970

ஏழாவது நாடாளுமன்ற ஆட்சிக் காலத்தில் மே 22, 1972இல் இலங்கை குடியரசாகியது. குடியரசானதன் பின்பு டொமினியன் அந்தஸ்து நிலையிலிருந்த இலங்கை இறைமைமிக்க நாடாகியது. இந்த அடிப்படையில் குடியரசு ஆனதன் பின்பு முழுமையாக சுதந்திரமடைந்த குடியரசு இலங்கையின் நாடாளுமன்ற ஆட்சிக் காலம் கணிக்கப்படுவின்றது. இந்த அடிப்படையில் நோக்குமிடத்து

  • இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் முதலாவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் 21.07.1977 நடைபெற்றது. (இது இலங்கை என்றடிப்படையில் 8வது நாடாளுமன்றம்.)
  • இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் இரண்டாவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் 15.02.1989 நடைபெற்றது. (இது இலங்கை என்றடிப்படையில் 9வது நாடாளுமன்றம்.)
  • இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் மூன்றாவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் 16.08.1994 நடைபெற்றது. (இது இலங்கை என்றடிப்படையில் 10வது நாடாளுமன்றம்.)
  • இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நான்காவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் 10.10.2000 நடைபெற்றது. (இது இலங்கை என்றடிப்படையில் 11வது நாடாளுமன்றம்.)
  • இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஐந்தாவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் 05.12.2001 நடைபெற்றது. (இது இலங்கை என்றடிப்படையில் 12வது நாடாளுமன்றம்.)
  • இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஆறாவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் 02.04.2004 நடைபெற்றது. (இது இலங்கை என்றடிப்படையில் 13வது நாடாளுமன்றம்.)
  • இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் 08.04.2010, 20.04.2010 நடைபெற்றது. (இது இலங்கை என்றடிப்படையில் 14வது நாடாளுமன்றம்.)
    • மேற்குறிப்பிட்ட அடிப்படையில் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது நாடாளுமன்றம் என்பதே சரியானது. ஆங்கில விக்கியில் இக்காலம் குறித்து சில கருத்துமுரண்பாடுகள் உள்ளன. இலங்கை சுதந்திரமடைந்தது என்பதை விட இலங்கை குடியரசானதினூடாகவே முழுமையான இறைமையைப் பெற்றுக் கொண்டது குடியரசின் ஏழாவது பாராளுமன்றம் என்ற வார்த்தையை சேர்த்தால் மேலும் திருத்தமாக இருக்குமெனக் கருதுகின்றேன். என் கட்டுரை தொடரில் இவ்வார்த்தையை இணைத்துவிடுவேன். --P.M.Puniyameen 03:35, 19 ஏப்ரல் 2011 (UTC)