பேச்சு:சுவாமி விவேகானந்தர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவாமி என்ற அடைமொழி தேவையா? அது ஏற்கப்பட்டதா? சர்ச்சைக்காக அல்ல சந்தேகத்திற்காகத்தான். சுவாமி என்ற அடைமொழி த.வியில் பயன்படுத்துவதில்லை பிறரும் பயன்படுத்துவார்களே. மக்கள் ஏற்படுத்திய அடைமொழிதானே? --செல்வம் தமிழ் 17:09, 5 ஜூன் 2009 (UTC)
- செல்வம், நீங்கள் கூறுவது சரி. இங்கு தலைப்பில் சுவாமி தேவையற்றது. "விவேகானந்தர்" என்றே தரலாம்.--Kanags \பேச்சு 21:48, 5 ஜூன் 2009 (UTC)
இங்கு கொடுக்கப்பட்டுள்ள பொன்மொழிகள் ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் கொடுக்கப்பட்டுள்ளது இதுவும் தவிர்க்கப்படவேண்டிய ஒன்று. ஆங்கிலத்தை மேற்கோளில் கொடுக்கலாமே--செல்வம் தமிழ் 18:59, 5 ஜூன் 2009 (UTC)
-
-
- அடைமொழியுடன் தான் நிறைய நூல்களில், மொழிகளில் அழைக்கின்றனர். உள்ளதை உள்ளபடியே பேணுவதில், தமிழ்விக்கிப்பீடியா ஒரு முன்னோடியாக விளங்க வேண்டும். அதற்கு பல விதிவிலக்குகள் அவசியம். ஒருமையில் தான் தலைப்பு இருக்க வேண்டும் என்பது பொது விதி. விதிவிலக்காக நாயன்மார்கள், ஆழ்வார்கள் என்று அமைத்துள்ளோம். பிரபலம் அடைந்த ஒரு பெயரை தலைப்பாக அமைக்கும் போது, இந்த விதிவிலக்கு அவசியம் என்பதே என் எண்ணம்.≈07:12, 8 சூலை 2011 (UTC)த♥உழவன்+உரை..மகாத்மா காந்தி
-
[தொகு] பிறப்பு
நரேந்திர தத்தர் அவரது பெற்றோருக்கு முதல் மகனாகப் பிறந்தார் என்பது உண்மையே. ஆனால் புதிதாகப் படிப்பவர்களுக்கு அவர் தான் பெற்றோருக்கு முதல் பிள்ளை என தவறாக நினைக்க வாய்ப்புள்ளது. தத்தருடைய மூத்த சகோதரி(கள்){எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை} பற்றிய குறிப்பையும் இணைத்தல் நலம்.--ஏர்னஸ்டோ பாலாஜி 16:14, 19 திசம்பர் 2011 (UTC)