பேச்சு:சுழல் மின்னோட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுழல் மின்னோட்டம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

சீரற்ற காந்தப்புலத்தில் = uneven ??
மாறும் காந்த புலம் (திசையை மேலதிகமாக சுட்டல் வேண்டும்) --Natkeeran 14:50, 11 ஜூன் 2006 (UTC)

நற்கீரன், இப்போது மாற்றியுள்ளேன். சிறிது விளக்கமாகவும் எழுதியுள்ளேன். சரி பார்த்துச் சொல்லுங்கள். சில படங்களும் இணைத்தால் நல்லது. இப்போது இணைத்துள்ள படம் அவ்வளவு விளக்கமாக இல்லை. பயன்பாடுகளும் விரிவாக்கப்பட்டால் முழுமையான ஒரு கட்டுரையாக அமையும். முயற்சிக்கிறேன். நன்றி.--Kanags 00:00, 12 ஜூன் 2006 (UTC)
மாற்றத்துக்கு நன்றி. ஆமாம், படம் விபரமாக இல்லை. எடி மின்னோட்டம் குறிப்பாக மேல் பரப்பிலேதான் அதிகமாக இருக்கும், ஆழமாக செல்ல செல்ல அது குறைகின்றது. வேறு படங்களை பின்னர் சேர்க்கின்றேன்.
உங்கள் விளக்கத்தில் "தட்டு சம நிலைக்கு" வந்துவிடுவதாக விபரித்துள்ளீர்கள். இதை நோக்கி என்னிடம் சரியான புரிதல் இல்லை. ஆற்றல் இழப்பு இருக்கின்றது, ஆனால் அது சம நிலைக்கு இட்டு செல்லுமா?...எந்த தருணத்தில். அதற்குரிய கணித விபரிப்பு அல்லது மேலதிக விபரங்கள் இருந்தால் நன்று. --Natkeeran 03:51, 12 ஜூன் 2006 (UTC)
அதனை பயன்பாட்டுக்குள் மாற்றி விட்டேன். இப்போது விளங்குகிறதா? கட்டுரையை இன்னமும் முடிக்கவில்லை. தலைப்பை சுழல் மின்னோட்டத்துக்கு மாற்றலாமா (or redirect)? என்ன நினைக்கிறீர்கள்? --Kanags 10:26, 12 ஜூன் 2006 (UTC)
நல்ல ஆழமாக செல்கின்றீர்கள். இதைப்பற்றி தற்போது படித்து வருகின்றேன். மேலும் சில தகவலகளை (புரிந்த பின்பு) சேர்க்க முயல்வேன். அமாம், தலைப்பை மாற்றி விடுவோம். --Natkeeran 16:35, 12 ஜூன் 2006 (UTC)