பேச்சு:சுரோடிங்கர் சமன்பாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Schrödinger என்பதன் சரியான உச்சரிப்பு என்ன? சுரோடிங்கர் என்பது சரியா? அப்படியாயின் தெரியப்படுத்தவும் எல்லா இடங்களிலும் மாற்றி விடலாம். மயூரநாதன் 14:43, 20 ஜூன் 2008 (UTC)

கிட்டத்தட்ட அப்படித்தான் நாங்கள் உச்சரிப்போம் வினோத்ラージャン 15:12, 20 ஜூன் 2008 (UTC)

சுரோடிங்கரின் ஈடுகோள் ஒரு அடிப்படை முதற்கோட்பாடு[தொகு]

ஆங்கில விக்கியில், சுரோடிங்கர் சமன்பாடு ஏதோ மேலும் அடிப்படையான கருத்துக்களில் இருந்து வருவிப்பது போல காட்டியிருப்பது தவறு. இச் சமன்பாடு அடிப்படை முதற்கொள்கை ஆகும். ஒருவாறு புரிந்து கொள்ள பிற கருத்துக்களில் இருந்து "வருவிப்பது" போல காட்டலாமே ஒழிய, இது வேறு எதனில் இருந்தும் வருவிக்க முடியாத முதற்கோட்பாடு. ஒரு பொருளானது இச்சமன்பாட்டில் கூறப்பட்டவாறு ஒழுகினால் (நடத்துகொண்டால்) அது இச்சமன்பாட்டைப் பின்பற்றும் பொருள் அது எனலாம். அவ்வளவே. இச்சமன்பாட்டின் தீர்வுகளில் இருந்து எதிர்மின்னி போன்ற அணுத்துகள்களின் அலைப்பண்புகளும், அவை ஏற்கவல்ல ஆற்றல் நிலைகளும், வியப்பூட்டும் விதமாகத் துல்லியமாக வருவதால், இச்சமன்பாட்டுக்கு உயிர் (பயன்) உள்ளது. நியூட்டனின் விதியாகிய F = ma என்பதும் இப்படிப்பட்ட முதற்கொள்கைதான். அதனை வேறு இன்னும் அடிப்படையான கொள்கைகளில் இருந்து வருவிக்க முடியாது. விசை என்பது காலத்தால் மாறுபடும் உந்தத்தின் அளவு என்று சொன்னாலும், அது ஒரு முதற்கொள்கைதான். நடைமுறையில் காண்பதோடு ஒத்து வருவதால் அது ஏற்கப்பட்ட ஒரு விதி. இதனை அடிப்படையாகக் கொண்டு வருவிக்கும் பல்லாயிரக்கணக்கான பிற துணை விதிகளும் இயல்புகளும் உண்மை என்று நாம் உணர்வதால், நியூட்டனின் விதியை விதி, அடிப்படை விதி என்று ஏற்றுக்கொள்கிறோம். --செல்வா 22:46, 20 ஜூன் 2008 (UTC)

செல்வா, உங்கள் விளக்கங்களுக்கும், கட்டுரையை மேம்படுத்தியதற்கும் நன்றிகள். மேற்படி தலைப்புக்களில் எனக்கு இருக்கும் மிக அடிப்படையானதும், மேலோட்டமானதுமான அறிவுநிலையில் இருந்துதான் குவாண்டம் பொறிமுறை தொடர்பான ஆங்கில விக்கிக் கட்டுரைகளின் தொடக்கப் பகுதிகளை மொழிபெயர்த்துள்ளேன். இதன் முக்கிய நோக்கம் குவாண்டம் பொறிமுறை தொடர்பாக ஏற்கெனவே இருக்கும் கட்டுரைகளில் உள்ள ஏராளமான சிவப்பு இணைப்புக்களுக்கு உயிர் கொடுப்பதுதான். இம்முயற்சியில் ஏற்படக்கூடிய குறைபாடுகளை நான் அறிவேன் ஆயினும், இவற்றை மேம்படுத்துவதில், உங்களைப் போன்ற ஆழமான துறை அறிவு கொண்டவர்களின் பங்களிப்பு இருக்கும் என்ற எண்ணத்தில் தான் இதில் நான் ஈடுபட்டுள்ளேன். நன்றி செல்வா. மயூரநாதன் 05:19, 21 ஜூன் 2008 (UTC)
செல்வா, இதுபோன்ற அடிப்படையான கருப்பொருள்களில் தவறைத் திருத்தியமைக்கு நன்றி. மயூரநாதன், இத்தகு தலைப்புகளில் கட்டுரைகளைத் துவக்கியதற்கு மிக்க நன்றி. -- சுந்தர் \பேச்சு 05:51, 21 ஜூன் 2008 (UTC)
மயூரநாதன் நீங்கள் இக்கட்டுரையையும், இது தொடர்பான பல கட்டுரைகளையும் தொடங்கியமைக்கு மிக்க நன்றி. இத் தொடக்கங்களே பெரும் உந்துகோலாகவும் உள்ளன. சுந்தர் உங்கள் பாராட்டுக்கு நன்றி. குவாண்டம் பொறிமுறை என்பதில் உள்ள பொறிமுறை என்பதை இயங்கியல் என்று கூறுவது பொருந்தும் என்று நினைக்கிறேன். Mechanics என்பதற்குப் பிற இடங்களில் விசையியல் என்பது பொருந்தும் (ஜே கே என்னும் பயனர் இது பற்றி முன்னர் உரையாடியுள்ளார். பார்க்கவும் பேச்சு:விசையியல்.--செல்வா 14:46, 21 ஜூன் 2008 (UTC)

மிகுந்த மாற்றங்கள் - தொடங்கியவர் பொறுத்தருள்வாராக[தொகு]

கட்டுரையை விரிவாக்கும் முயற்சியில் அதன் தொடக்க நிலையில் இருந்த அறிமுகத்தைப் பெருமளவு மாற்ற வேண்டியதாகியது. மயூரநாதன் அவர்கள் பொறுத்தருள்வார் என்று நம்புகிறேன். விக்கியின் கொள்கைப்படி இது நல்நோக்கிலான ஒரு மாற்றமே என்று உறுதியளிக்கிறேன். சுரோடிங்கர் சமன்பாடு போன்ற ஒரு விடயத்தை விக்கி நடையில் தருகையில் எளிமை என்பது சற்றே பின்னுக்குச் சென்றுவிடுகிறது, கட்டுரையின் முந்தைய அறிமுகத்தில் இருந்த எளிமை தற்பொழுது இல்லை என்றே எனக்குப்படுகிறது... எனினும், தகவலிழப்போ குழப்பமோ இன்றி ஓட்டச்சீர்மையுடன் உள்ளது என நம்புகிறேன். பெரும்பான்மையும் ஆங்கில விக்கியை மொழிபெயர்த்தே இடுகிறேன், இது எனக்கு மிகுந்த நேர மிச்சத்தை தருகிறது. ஏதேனும் மாற்றம் தேவையாயின் தயங்காது தெரியபடுத்தி உதவவும். நன்றி. --காவிநன் (பேச்சு) 03:56, 1 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

நல்ல விரிவாக்கம் நரசிம்மன்! நன்றி. ஃபெயின்மன்னின் வழித்தொகையம் எல்லாம் போட்டு முழக்கி உள்ளீர்கள் :) பின்னர் சற்று எளிமைப்படுத்த உதவுகின்றேன். --செல்வா (பேச்சு) 04:29, 1 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
நன்றி ஐயா :-) முதலில் நிறைய விடயங்களை விட்டுவிடத்தான் நினைத்தேன், பின்னர் இவை இருக்கட்டும், இந்தச் “சிவப்பிணைப்புகளை” கூடிய விரைவில் நீலமாக மாற்றிவிடுவோம், அதற்கு இதுவே உந்துதலாகவும் இருக்கும் என்றே அவற்றைச் சேர்த்துக்கொண்டேன்! --காவிநன் (பேச்சு) 10:09, 1 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]