பேச்சு:சுயமரியாதை இயக்கம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எனது தனிப்பட்ட கணிப்பில் இந்தக் கட்டுரை தவறுதலான அம்சங்களை முன்னிறுத்துகின்றது. சுய மரியாதை இயக்கம் தோன்றிய அன்னிய, பின் தங்கிய சூழல் விபரிக்கப்பட வேண்டியது அவசியம்.

  • "இது இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் பிராமண ஆதிக்கத்தை எதிர்த்து தொடங்கப்பட்ட இயக்கமாகும்."
* சு.ம.இ. முதன்மைக் குறிக்கோள் இதுவா? சுயமரியாதையை முன்னிறுத்துவது அல்லவா முதன்மைக் குறிக்கோள். மேலும், பிராமணியம் என்ற கருத்துருவை பிரமாணர்கள் என்ற மக்கள் குழுவோடு சு.ம.இ. சேர்க்கவில்லை. ஆனால் தொடர்பு அன்றைய கால நிலையில் கண்கூடு. ஆனால், இன்று அது மிகவும் பொருந்தாது. எனவே கட்டுரையாளர் வேறுபடுத்தி காட்ட வேண்டும்.
  • "இதன் விளைவாக பிற்காலத்தில் தமிழகத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பல துறைகளிலும் அதிக அளவு இட ஒதுக்கீடு தரப்பட்டது."
* "அதிக அளவு இட ஒதுக்கீடு" என்பது எந்த விதத்தில். எந்த ஒப்பீட்டில்? "அதிக அளவு" என்பதில் ஒரு நியாமற்ற அளவு என்ற தொனி தெரிகின்றது. விளக்கங்கள் தேவை?

--Natkeeran 14:34, 8 பெப்ரவரி 2007 (UTC)

நட்கீரன், கருத்தளவில் நிறைய மேம்படுத்துவதற்க்கு இடமுள்ளது. உதாரணமாக, "இதன் விளைவாக பிற்காலத்தில் தமிழகத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பல துறைகளிலும் அதிக அளவு இட ஒதுக்கீடு தரப்பட்டது"; கட்டுரை இதை நேரடி ஏது-பயன் போல கொடுக்கிறது.. இட ஒதுக்கீடு பல அரசியல் போக்குகளாலும், ஜனநாயக கட்சி போட்டிகளாலும் ஏற்ப்பட்டதே தவிறே, நேரடடியாக சுயமரியாதையும் இட ஒதுக்கீட்டையும் இணைக்க முடியாது, ஏனெனில் இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் சு.ம.இ. இல்லாமலேயே இட ஒதுக்கீடுகள் உள்ளன. கட்டுரையாசிரியர், இதை இன்னும் யோசித்து மேம்படுத்தவும்.--விஜயராகவன் 14:53, 8 பெப்ரவரி 2007 (UTC)

சுயமரியாதை இயக்கம் என்பது தமிழகத்தில் ஈ. வெ. ராமசாமி எனும் பெரியார் அவர்களால் தொடங்கப்பட்ட ஓர் இயக்கமாகும். இது இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் பிராமண ஆதிக்கத்தை எதிர்த்து தொடங்கப்பட்ட இயக்கமாகும். சமுதாயத்தில் சாதியின் அடிப்படையில் தாழ்த்தப்பட்டவர்கள் இவ்வியக்கத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இவர்களின் நலனுக்காகவும், மூட நம்பிக்கையையும் எதிர்த்தும் போராடுவதே இதன் நோக்கமாக இருந்தது. இது மக்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் விளைவாக பிற்காலத்தில் தமிழகத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பல துறைகளிலும் அதிக அளவு இட ஒதுக்கீடு தரப்பட்டது.