பேச்சு:சுப்பிரமணிய பாரதி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுப்பிரமணிய பாரதி என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
சுப்பிரமணிய பாரதி என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கருத்து[தொகு]

I think, we should not include the songs of Bharati in this page. May be this can come under the Wikisource or some other section, this page should focus a lot about this magnificent personality. - Santhoshguru 11:00, 22 ஏப் 2005 (UTC)

I have removed the songs. Thanks for reminding that these can be placed at wikisource/wikibooks.--ரவி (பேச்சு) 11:52, 22 ஏப் 2005 (UTC)
எடுத்துக்காடுக்காக சில வரிகள் தருவது மிகவும் நல்லது. படிப்போருக்கும் ஈர்ப்பு ஏற்படும். படைப்பாளிகளின் படைப்பில் இருந்து சிறு துளிகள் தருவது மிகவும் தேவையானது. அறியாதவர்கள் அறிந்து கொள்ளவும், அறிந்தவர்கள் மேலும் அறிந்து கொள்ளவும், எல்லாம் அறிந்தவர்கள் மீண்டும் கற்றனைத்தும் ஊறும் அறிவு என்பதாக புத்துயிர்ப்பு ஏற்படவும், புது சிந்தனைகள் முளைக்கவும் தூண்டுகோலாக இருக்க வேண்டும். பாரதியின் வரிகளை விலக்கியது கண்டு வருந்துகிறேன். யாருக்கும் எதிர்ப்பு இல்லையெனில் இரண்டொரு வரிகள் சேர்க்க எண்ணியுள்ளேன்.--C.R.Selvakumar 14:10, 14 ஜூன் 2006 (UTC)செல்வா
எடுத்துக்காட்டுக்களாக சில வரிகள்/கவிதைகள் தருவது நன்று என்றே எனக்கும் தோன்றுகின்றது. --Natkeeran 14:25, 14 ஜூன் 2006 (UTC)

முன்னர், விளக்கங்கள், மேற்கோள்கள் ஏதுமின்றி வெறும் பாடல் வரிகள் மட்டும் தரப்பட்டிருந்தன. அதனால அவற்றை நீக்கினேன். கவிஞரின் படைப்புலகை அறியும் வண்ணம் விளக்கங்களுடன் ஒரு சில பாடல் வரிகள் மேற்கோள்களாக இடம் பெறுவதை யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள்--ரவி 09:12, 15 ஜூன் 2006 (UTC)

பாரதி பிறந்த ஆண்டு 1881 என்று குங்குமம் வார இதழ் 10-09-2006 இல் பார்க்கின்றேன் எது சரி என்று கூறமுடியுமா.--சக்திவேல் நிரோஜன் 18:04, 27 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

மேலும் அவர் 39 ஆம் அகவையில் இவ்வுலகை நீத்தார் என்பதும் அங்கு காணப்பட்ட விடயங்கள்.--சக்திவேல் நிரோஜன் 18:26, 27 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

கலைக்களஞ்சிய நடை[தொகு]

கட்டுரை பெருமளவு உயர்வு நவிற்சி நடையில் எழுதப்பட்டுள்ளது. கலைக்களஞ்சிய நடைக்கு மாற்ற வேண்டும். மிகுதியானோர் பார்க்கும் இக்கட்டுரையை ஆங்கில விக்கிப்பீடியா தரவு, நடை அடிப்படையில் இன்னும் மேம்படுத்த இயலும். --இரவி (பேச்சு) 10:06, 25 பெப்ரவரி 2015 (UTC)

அறிந்த மொழிகள்[தொகு]

ஆங்கில விக்கியில் பாரதிக்கு 32 மொழிகள் தெரியும் என்று உள்ளதே, அதனை இங்கே சேர்க்கலாமா?

பதில் : ஆங்கில விக்கியில் தற்போது அப்படி இல்லை : "Although it is said that he was proficient in around 14, including 3 non-Indian foreign languages".

பாரதி இறந்த நாள்[தொகு]

பாரதி இறந்தநாள் செப்டம்பர் 11 ஆ அல்லது செப்டம்பர் 12 ஆ? அதிகாரபூர்வமாக மாற்றப்பட்டுள்ளதா?. இந்தச் செய்தியை விட வேறு செய்திகள் உள்ளனவா?--Kanags \உரையாடுக 07:22, 11 செப்டம்பர் 2015 (UTC)

@Kanags: செப்டம்பர் 11 ஆம் நாளை தான் பாரதி இறந்தநாளாக தமிழக அரசு இன்று வரை கடைபிடித்து வருகிறது. ஆனால் 2017 ஆம் ஆண்டு பாரதியார் இறந்த நாள், செப்டம்பர் 12 ஆம் நாள் என்று சர்ச்சை எழுந்துள்ளது. ஆனால் தமிழக அரசால் அதிகாரபூர்வமாக இன்னும் மாற்றம் செய்யவில்லை. அதனால் செப்டம்பர் 11 ஆம் நாள் இறந்த நாள் என்று இருப்பதே நல்லது. காண்க, காண்க-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 12:51, 29 ஆகத்து 2019 (UTC)[பதிலளி]

இந்த கட்டுரையை சிறந்த கட்டுரை(Good article) தரத்திற்கு உயர்த்த என்ன செய்ய வேண்டும்[தொகு]

இந்த கட்டுரை தொடர்ச்சியாக பல்லாயிரம் பார்வைகளைப் பெறுவதால், இதை சிறந்த கட்டுரை தரத்திற்கு உயர்த்தினால் அனைவருக்கும் பயனைடவர். அதற்கு என்ன மெருகேற்றங்களை செய்ய வேண்டும். ஹரீஷ் எசு.பி. (பேச்சு) 07:03, 18 நவம்பர் 2021 (UTC)[பதிலளி]

@Spharish: இக்கட்டுரையில் மேற்கோள்கள் மிக மிகக் குறைவாகவே உள்ளன. முதலில் தகுந்த மேற்கோள்கள் தரப்பட வேண்டும். தரம் இன்னும் உயர்த்தப்பட வேண்டும். சிவப்பு இணைப்புகளைத் தவிர்க்க வேண்டும். பின்னர் வாக்கெடுப்பிற்கு விட வேண்டும்.--Kanags \உரையாடுக 07:12, 18 நவம்பர் 2021 (UTC)[பதிலளி]

உங்கள் பரிந்துரைகளுக்கு நன்றி! பக்கத்தை மேற்கூறியபடி செழுமைப் படுத்திவிட்டு இங்கு தெரிவிக்கிறேன். ஹரீஷ் எசு.பி. (பேச்சு) 07:36, 18 நவம்பர் 2021 (UTC)[பதிலளி]

திருத்தம்[தொகு]

பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத்திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே எனப் பெண்ணுரிமையை ஏத்தினார் என்பது பாரதிதாசன் கவிதை தானே??? Ssilojan (பேச்சு) 07:52, 2 மார்ச் 2022 (UTC)

@Ssilojan: ஓம். நீங்கள் சொல்வது சரியே. புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/253. நன்றி. நீக்கியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 08:07, 2 மார்ச் 2022 (UTC)