பேச்சு:சீதை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீதை என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
சீதை என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
சீதை என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


சுலோகம்[தொகு]

" இயம் சுதா மம சுதா "

வால்மீகி ராமாயணத்தில் ஜனகர் சீதையை ராமருக்கு அறிமுகம் செய்யும் படலத்தில் வருகின்ற பாடலின் முதல் உத்தமமான வரி "இயம் சுதா மம சுதா "

என்னுடைய தாயார் உயர் திரு ஆர் கமலம்மாள் அவர்களின் தகப்பனாரும் அடியேனுடைய பாட்டனாரும் ஆகிய உயர் திரு நரசிம்மாச்சாரியார் ஸம்ஸ்க்ருதத்திலும்,தமிழிலும் விற்பன்னர்,மஹாவேத வித்து அப்படியென்று பெரியவர்கள் சொல்லக் கேட்டு புளகாங்கிதம் அடைந்தவன் நான் ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் மேட்டழகிய சிங்கர், வாசுதேவர் சன்னிதியில் கைங்கர்யம் செய்து கொண்டிருந்த என் மதிப்புக்குறிய பாட்டனார் மிக உயர்ந்ததான இந்தப் பாடலை அவருக்கே உரித்தான நடையில் அனுபவித்து இரசித்து சரியான தமிழ் வார்த்தைகளக் கோர்த்து எழுதிய பாடல் இது

" இயம் சீதா மம சுதா சகதர்ம சரிதவா "

இவள்தான் இவள்தான் சீதா அயோனிஜையான மாது என் மகள் திருக் கோதா மங்களம் உமக்குண்டாகும் அகண்ட மண்டலமெல்லாம் புகழும் மங்கள கரத்தால் இந்த மங்கை கை பிடித்துக் கொள்ளும்

                                                                                                                  -------   இவள்தான்

ரகுபதி சதகோடி சுந்தராங்கி இவளே நீர் கன்னி மாடத்தில் கண்ட கன்னிகையும் இவளே எனக் கந்தரங்கமான அம்ரித புத்ரி இவளே வர்ணிக்கும் சோலை போன்ற மருவத தன்யே பெண்ணென்றே எண்ணாதீர் கன்னி இவள் கருணாநிதி ------ இவள்தான்


இவள் பிறந்த இடமும் பரிசுத்த யாக பூமி குலத்திலும் மாளிகையிலும் வளர்ந்த்தாள் இந்த பாமினி ,உம் சத்ரு சம்ஹாரம் செய்ய இவள் முதல் கால நேமி, அகப்பட்ட பெண் என்றெண்ணாதீர் அஞ்ஜாதீர் ராமஸ்வாமி ------இவள்தான்

பாங்கிமாருடன் கூடி, பந்து விளையாடையிலே அம்மானைப் பந்து விளையாடையிலே கார்முகத்தின் நடுவே நிலவோடி ஒளிந்தது போல் அம்மானைக் காயோடி ஒளிந்தது அடியிலே சிவதனுசின் மடியிலே அறுபதினாயிரம் பேர் அசைக்கவும் முடியாத அவ்வில்லை கண்ணிமைக்கும் நேரமதில் இடது கையாலே எடுத்து வில்லை நகர்த்தி அடுத்த ஷ்ணமே பந்தை எடுத்தாள் அதிக பாலை

                                                                                                                        ---    இவள்தான்

அக்கணமே அறிவித்தேன் சுயம்வரத்தை கையெடுத்து இவ்வில்லை ஆளுகின்ற ஆண்மகன்தான் மணாளனென்று

                                            ---இவள்தான்
                                                

கையெடுத்து இவ்வில்லை கணத்தில் முறித்த ஸ்ரீராமா ,தசரத ராமா இக்கணமே இப்பாலை உமக்கே தாரமானாள் மங்களம் உமக்குண்டாக அகண்ட மண்டலமெல்லாம் புகழ உம் மங்கள கரத்தால் இத் திரு மங்கை கை பிடித்துக் கொள்ளும் ---இவள்தான்



நவரத்தின கஜித மணி மண்டபம் தனிலே நாலுபக்கம் கன்னாடி ப்ரதி பிம்ப்பம் அதனுள்ளே செந்திருமணி மார்பு சீதையும் அதனுள்ளே அங்ங்எஎஎங்கும் பாராதீர் அரவிந்த லோசனா எங்எங்கும் நிறைந்த லக்ஷ்மி இவள் ராஜீவ லோசனி மந்திர பூர்வமாக மன்னனும் தாரை வார்க்க அகிலமெல்லாம் புகழ அமரர்களும் துதிக்க தேவ துந்துபியும் திமி திமி என்று கோஷிக்க வடவேங்கடேசனும் வதியின் கைப்பிடிக்க பூமாரி பொழிந்திட பூமகளும் துதிக்க

                                                                                                                      ---    இவள்தான்

அன்புடன் தமிழ்த்தேனீ http://thamizthenee.blogspot.com rkc1947@gmail.com

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சீதை&oldid=3833487" இலிருந்து மீள்விக்கப்பட்டது