பேச்சு:சிவந்தி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செவ்வந்தி[தொகு]

இது பொதுவாகச் செவ்வந்தி என்றே அழைக்கப்படுகிறது. சிவந்தி/செவந்தி என்று நான் முன்னர் கேள்விப்பட்டதில்லை. செம்மீனே செம்மீனே என்ற திரைப் பாடலிலும் செவ்வந்தி என்றுதான் கையாளப்பட்டுள்ளது.--பாஹிம் 16:59, 21 சனவரி 2012 (UTC)[பதிலளி]

கூகிளில் தேடியபோது சில இடங்களில் சிவந்தி எனவும் சில இடங்களில் செவந்தி எனவும் காணப்படுகிறது. மேலும் நான் அறிந்ததும் செவ்வந்தியே... அநேகமாக செவந்தி என்பதே செவ்வந்தி என நினைக்கிறேன்...எனவே ஏதாவது ஒரு தலைப்பை இட்டுவிட்டு மற்றொன்றை வழிமாற்றாக்கிவிடலாம்...--shanmugam 18:58, 26 சனவரி 2012 (UTC)[பதிலளி]

சாமந்தி அல்லது செவ்வந்தி என்பதே சரி என்று நினைக்கின்றேன்.--பிரயாணி 10:09, 20 பெப்ரவரி 2012 (UTC)

சிவந்தி, செவ்வந்தி, சாமந்தி ஆகிய சொற் பிரயோகங்கள் அனைத்தும் சரியானவை. செவந்தி என்று அழைப்பது தவறானது. அதனைச் செவ்வந்தி என மாற்ற வேண்டும். சிவந்தி என்பது ஏற்கனவே பிரயோகத்தில் உள்ளது. இங்கே பார்க்க. தங்கச்சிவந்தியா என்ற சிலேடையில் தங்கச் சிவந்தியா என்றும் தங்கச்சி வந்தியா என்றும் கையாளப்படுகின்றது. ஆகவே, தலைப்பை மாற்றத் தேவையில்லை. செவந்தி என்று உள்ளவற்றைச் செவ்வந்தி என்று மாற்ற வேண்டும். --மதனாஹரன் (பேச்சு) 04:47, 10 மார்ச் 2012 (UTC)
//சிலேடையில் தங்கச் சிவந்தியா என்றும் தங்கச்சி வந்தியா என்றும் கையாளப்படுகின்றது// நல்ல கருத்தான உரையாடல் மதன்!--செல்வா (பேச்சு) 13:44, 10 மார்ச் 2012 (UTC)

அலெத்ரின் இரசாயன மூலப்பொருள்[தொகு]

காண்க: What is the source of allethrin?
Chrysanthemum
Pyrethrum
கொசுக்களை அழிக்கும் இரசாயனம் அலெத்ரின் மூலப்பொருள் சிவந்தியிலிருந்து பெறப்படுகிறதா? --ஸ்ரீதர் (பேச்சு) 17:17, 28 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

துலுக்கமல்லி[தொகு]

துலுக்கமல்லி என அழைக்கப்படுவது இதனையா வேறு இனமா?--ஸ்ரீதர் (பேச்சு) 17:46, 28 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
துலுக்கமல்லி என்பது தளவம். --Sengai Podhuvan (பேச்சு) 00:22, 29 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

வழிமாற்று[தொகு]

சாமந்தியில் பலவகை உண்டு. எனவே பொதுப்பெயருக்கு வழிமாற்று வேண்டாம். [சாமந்தி வழிமாற்று] தவறு. சாமந்தி என்பது #en:Chamomile ஆகும். எனவே, வழிமாற்றினை நீக்க மறுப்பு இருப்பின் தெரிவிக்கவும்.--உழவன் (உரை) 02:14, 5 செப்டம்பர் 2019 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிவந்தி&oldid=2798726" இலிருந்து மீள்விக்கப்பட்டது