பேச்சு:சிற்றறைச் சிறை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆங்கிலத்தில் Cell என்பதற்கு சரயான சொல் வரவில்லை இணைய பல்கலைக்கழகத்திலும் தேடிவிட்டேன் ஒரு வேளை நண்பர்களுக்கு இதற்கு வராலாற்று தமிழ் தலைப்பு உண்டு என்றால் வைத்துக்கொள்ளுங்கள் நான் இதை நான் தமிழில் கேட்டறியேன் ஒரு அகராதியில் மட்டும் வந்தது. பால் அகராதியில் cellular என்பதற்கு சிறிய என்று வந்தது அதை நான் சிற்றறை என்று வைத்து சிறை யை சேர்த்துக்கொண்டேன். ஆங்கில விக்கியின் மொழி பெயர்ப்பு அங்கு ஏதாவது நீக்கினால் இங்கேயும் நீக்கி விடுங்கள் சிறையப்பற்றி நிறையக்கட்டுரைகள் ஆங்கிலத்தில் உள்ளன அவற்றை மொழிப்பெயர்க்கும் தலைப்பில்லாமல் தலைப்பு மோதாமல் வைக்கவும். ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை மோதிக்கொண்டிருக்கிறது Internment என்று concentration camp ல் இருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது. இதற்கு தமிழில் தடுப்புக்காவல் என்று தான் உள்ளது. concentration camp அரசியல் கைதிகள் முகாம் அப்படித்தான் அகராதியில் உள்ளது. ஆகையால் அதை மொழிப்பெயர்ப்பதை தவிர்த்துவிட்டேன். Internment இதற்கு சரியான தலைப்புச் சொல்லவும்.--செல்வம் தமிழ் 07:49, 25 பெப்ரவரி 2009 (UTC)


இதற்கு முன்னர் சிற்றறைச் சிறை என்று கேள்விப்படாவிட்டாலும் உங்கள் தலைப்பு சரியாகப் படுகிறது. cell என்பதற்கு கலம் என்பார்கள். battery cell, cell (biology) என இரண்டிலும் இத்தமிழ்ச் சொல் (கலம் - இலங்கை வழக்கம்) பயன்பாட்டில் இருக்கிறது. நீண்ட உரையாடல்களின் பின்னர் உயிரணு என விக்கியில் பயன்படுத்துகிறோம். இந்தச் சிறையிலா கப்பலோட்டிய தமிழர் சிறை வைக்கப்பட்டார்? --Natkeeran 18:11, 1 மார்ச் 2009 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிற்றறைச்_சிறை&oldid=346065" இலிருந்து மீள்விக்கப்பட்டது